மிட் வெளி சிட்டி
மிட் வெளி சிட்டி (மலாய்; ஆங்கிலம்: Mid Valley City; சீனம்: 谷中城) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள கலப்பு-பயன்பாட்டு வணிக வளாகம் ஆகும். இந்த மேம்பாட்டுப் பகுதி, கோலாலம்பூர் மாநகரத்தின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ளது.[1]
மிட் வெளி சிட்டி Mid Valley City | |
---|---|
குறிக்கோளுரை: சிறந்த நகரத்தை நோக்கிய பங்களிப்பு Bersedia Menyumbang, Bandar Raya Cemerlang | |
ஆள்கூறுகள்: 3°7′5″N 101°40′36″E / 3.11806°N 101.67667°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கோலாலம்பூர் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | கோலாலம்பூர் மாநகராட்சி |
• முதல்வர் | டத்தோ ஸ்ரீ மைமுனா முகமது சரீப் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 57000 |
தொலைபேசி | +6-03 22 |
வாகனப் பதிவெண்கள் | V & W |
இணையதளம் | www |
மிட்வெளி சிட்டி திட்டத்தில் பல்லடுக்கு மாடி குடியிருப்புகள்; மிட் வெளி மெகாமால் வணிகப் பூங்கா (Mid Valley Megamall); கார்டன்ஸ் வணிகப் பூங்கா (The Gardens Shopping Mall); சிட்டிடெல் மிட் வேலி (Cititel Mid Valley); பவுல்வர்ட் தங்கும் விடுதி (Boulevard Hotel) போன்ற உயர்ரகத் தங்கும் விடுதிகளைக் கொண்டுள்ளது.[2][3]
பொது
தொகுமிட் வேலி சிட்டிக்கு 22 செப்டம்பர் 2008 முதல் மலேசிய பல்லூடகப் பெருவழியின் பல்லூடகப் பெருவழித் தகுதி (MSC Malaysia Cyber Center status) வழங்கப்பட்டது. இங்கு அதிவேக அகண்ட அலைவரிசை இணையத் தொடர்புகள் அறிமுகம் செய்யப்பட்டதால் அந்தத் தகுதி வழங்கப்பட்டது.[4]
1980-களின் பிற்பகுதியில் மிட் வேலி சிட்டிக்கான கட்டுமானம் திட்டமிடப்பட்டபோது, அந்த இடத்திற்கு பண்டார் சையத் புத்ரா (Bandar Syed Putra) என்று பெயரிடப்பட்டது. மிட் வேலி சிட்டியின் தெற்குப் பகுதி வழியாகச் செல்லும் சையத் புத்ரா சாலையின் பெயரில் மிட் வேலி சிட்டிக்குப் பெயரிடப்பட்டது. இந்த இடத்தில் முன்பு ஒரு கால்நடை வெட்டுக்கூடம் இருந்தது.
போக்குவரத்து
தொகுபத்துமலை–புலாவ் செபாங் வழித்தடத்தின் KB01 மிட் வெளி கொமுட்டர் நிலையம் வழியாக தொடருந்துப் போக்குவரத்து நேரடியாக வழங்கப்படுகிறது. இந்த நிலையம் மிட் வேலி சிட்டியின் கிழக்கு நுழைவாயிலுடன் நேரடியாக இணைகிறது.[5]
இந்த மிட் வேலி சிட்டி, கிளானா ஜெயா வழித்தடம் மற்றும் தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் ஆகிய இரு வழித்தடங்களில் அமைந்துள்ள KD01 ; KJ17 அப்துல்லா உக்கும் நிலையம் வழியாகவும் சேவை செய்யப்படுகிறது.[6]
மேலும் காண்க
தொகுகாட்சியகம்
தொகுமிட் வெளி சிட்டி வளாகத்தின் காட்சிப் படங்கள்: (2019 - 2020)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Any thing and every thing under one roof". Tripadvisor. பார்க்கப்பட்ட நாள் 12 December 2024.
- ↑ "Mid Valley Megamall is home to a myriad of retail experiences unlike any other, ranging from a dazzling array of fashion and lifestyle innovations". www.midvalley.com.my. பார்க்கப்பட்ட நாள் 12 December 2024.
- ↑ "Mid Valley Megamall opened in 1999 and is currently one of Malaysia's largest shopping destinations, with a gross floor area of 4.5 million square feet REIT". www.igbreit.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 December 2024.
- ↑ "Mid Valley City gets MSC status". the Star. 23 September 2008 இம் மூலத்தில் இருந்து 26 September 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080926104505/http://star-space.com/news/story.asp?file=%2F2008%2F9%2F23%2Fpnews%2F2095510&sec=pnews. பார்த்த நாள்: 26 September 2008.
- ↑ "The Mid Valley KTM Komuter Station is a KTM Komuter train halt forms part of a common KTM Komuter railway line in Seremban Line. The Station was completed and opened to the public on August 2004". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 11 August 2023.
- ↑ "Abdullah Hukum train station in KL Eco City opened" (in en). Edge Prop. 2018-11-06. https://www.edgeprop.my/content/1441911/abdullah-hukum-train-station-kl-eco-city-opened.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Mid Valley City தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- The Gardens Website
- Mid Valley City Website
- Cititel Mid Valley Website
- The Boulevard Hotel Kuala Lumpur Website
- Gardens Hotel and Residences Website
- The Gardens Pictures
- Mid Valley Megamall
- Cititel Mid Valley
- Church in Mid Valley City
- Mid Valley City Fans Community