சிலிம் ரிவர் தொடருந்து நிலையம்

சிலிம் ரிவர் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Slim River Railway Station மலாய்: Stesen Keretapi Slim River); சீனம்: 斯利姆河火车站) என்பது மலேசியா, பேராக், முவாலிம் மாவட்டம், சிலிம் ரிவர் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1]

சிலிம் ரிவர்
Slim River
KTM_ETS_Logo
சிலிம் ரிவர் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்35800, சிலிம் ரிவர், மலேசியா
ஆள்கூறுகள்3°49′37″N 101°24′07″E / 3.82694°N 101.402°E / 3.82694; 101.402
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள் 1   மலாயா மேற்கு கடற்கரை 
 ETS  கேடிஎம் இடிஎஸ்
நடைமேடை2 நடை மேடை
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking இலவசம்
KTMB நிறுத்துமிடம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது1893
மறுநிர்மாணம்2007
மின்சாரமயம்2007
சேவைகள்
முந்தைய நிலையம்   சிலிம் ரிவர்   அடுத்த நிலையம்

சுங்கை
 
  Gold  
  தஞ்சோங் மாலிம் >>> கோலாலம்பூர் சென்ட்ரல்

சுங்கை
 
  Silver  
  தஞ்சோங் மாலிம் >>> கோலாலம்பூர் சென்ட்ரல்
அமைவிடம்
Map
சிலிம் ரிவர் தொடருந்து நிலையம்
சிலிம் ரிவர் தொடருந்து நிலையத்தின் ஒரு பகுதி

சிலிம், சிலிம் ரிவர், துரோலாக் நகரங்களுக்கும் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமப் பகுதிகளுக்கும் இந்த நிலையம் சேவை செய்கிறது. 2007 மார்ச் மாதத்தில் சிலிம் ரிவர் நகருக்கான புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது.

பொது

தொகு

இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் இடிஎஸ் ETS தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் சிலிம் ரிவர் நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது.[2]

சிலிம் ரிவர் நிலையத்தின் ஒரு முனையில் சரக்கு முற்றம் உள்ளது. இது ரவாங்-ஈப்போ மின்மயமாக்கப்பட்ட இரட்டை வழித்தடத் திட்டத்திற்கு (Rawang-Ipoh Electrified Double Tracking Project) முன்னதாக உருவாக்கப்பட்டது.

அமைவிடம்

தொகு

பேராக், முவாலிம் மாவட்டத்தில் சிலிம் ரிவர் நகரின் மையப் பகுதியில் இந்த நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை தீபகற்ப மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலையின் தஞ்சோங் மாலிம்-சிலிம் ரிவர் நெடுஞ்சாலை வழியாக அணுகலாம்.

இந்த நிலையத்திற்கு அருகில் உலு பெர்னாம் செம்பனைத் தோட்டங்கள்; சிலிம் ரிவர் தொழிற்கல்லூரி; மற்றும் மாரா அறிவியல் கல்லூரியின் துரோலாக் வளாகமும் உள்ளன. அத்துடன் சிலிம் ரிவர் நகருக்கு அருகில் சில பெல்டா குடியேற்றத் திட்டங்கள் உள்ளன. அங்கு வசிப்பவர்களும் இந்த நிலையத்தின் சேவையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பேராக் இரயில்வே சேவை

தொகு

1901-ஆம் ஆண்டில், பேராக் இரயில்வே எனும் பேராக் தொடருந்து சேவைக்கான (Perak Railway) தொடருந்து சேவை; சிலாங்கூர் தொடருந்து சேவையுடன் (Selangor Railways) ஒன்றிணைக்கப்பட்டு பின்னர் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை (Federated Malay States Railways) என அறியப்பட்டது.

பேராக் இரயில்வே எனும் பேராக் தொடருந்து சேவைக்கான தொடருந்து பாதைகள் முதன்முதலில் ஈப்போவில் தான் அமைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக சிலிம் ரிவர் நகரிலும் அமைக்கப்பட்டன. பேராக் தொடருந்து சேவை 20 ஆண்டுகள் சேவை செய்தது. [3]

ரவாங் - ஈப்போ இரட்டை வழித்தடம்

தொகு

ரவாங் - ஈப்போ இரட்டை தொடருந்துப் பாதையில் சிலிம் ரிவர் நிலையம் உள்ளது. ரவாங் - ஈப்போ இரட்டை தொடருந்துப் பாதையின் நீளம் 179 km (111 mi). இந்தப் பாதை முக்கியமான மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தில் அமைந்துள்ளது. கோலாலம்பூர் மற்றும் ஈப்போ நகரங்களுக்கு இடையே அதிகபட்ச 160 km/h (99 mph) வேகத்தில் தொடருந்துகளை இயக்குகிறது.

இந்தத் திட்டம் 2008-ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிறைவடைந்தது. ரவாங் - ஈப்போ இரட்டை தொடருந்துப் பாதையில் மின்சார தொடருந்து சேவைகள் 2010-இல் தொடங்கப்பட்டன.[4]

கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை

தொகு

கேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் இரண்டு சேவைகளும் கிம்மாஸ் - பாடாங் பெசார் மற்றும் ஈப்போ - பாடாங் பெசார் நிலையங்களுக்கு இடையே சேவையாற்றுகின்றன.

கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை 11 சூலை 2015 அன்று தொடங்கியது.

ஈப்போ - பாடாங் பெசார் சேவை 10சூலை 2015 அன்று தொடங்கியது.[5][6]

பழைய சிலிம் ரிவர் நிலையம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The KTM Slim River Railway Station (Stesen Keretapi Slim River) is located in the state of Perak, Malaysia along the KTMB North - South Line". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 26 July 2023.
  2. "There are currently 5 train services a day from Slim River to Kuala Lumpur". 20 August 2021. பார்க்கப்பட்ட நாள் 26 July 2023.
  3. "First railway station in Ipoh was constructed in 1894. It served the town for 20 years. It was a single storey building with no accommodations". 8 February 2020. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.
  4. "DRB-Hicom taken to task over delay", The Star (Malaysia), p. 8, 1 July 2005
  5. "Padang Rengas Railway Station (GPS: 4.77739, 100.85816) is a train station in Padang Rengas, Perak. The station is located between the Taiping Railway Station in the northwest and the Kuala Kangsar Railway Station in the east. The KTM Electric Train Service serves this station". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.
  6. "Trains from Padang Rengas to Ipoh". 5 January 2023. பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு