பாங்கி கொமுட்டர் நிலையம்
பாங்கி கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Bangi Komuter Station; மலாய்: Stesen Komuter Bangi) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், பாங்கி லாமா, நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும். இந்த நிலையம் பாங்கி எனும் நகரத்தில் அமைந்துள்ளதால் அந்த நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது.[1]
பாங்கி | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
KB09 | கொமுட்டர் Bangi Komuter Station | ||||||||||||||||
பாங்கி கொமுட்டர் நிலையம் | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | பாங்கி சிலாங்கூர் மலேசியா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 2°54′14″N 101°47′10″E / 2.90389°N 101.78611°E | |||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | |||||||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து | |||||||||||||||
தடங்கள் | புலாவ் செபாங் காஜாங் மேற்கு கடற்கரை | |||||||||||||||
நடைமேடை | 1 பக்க நடைமேடை; 1 தீவு நடைமேடை | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | |||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | KB09 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | KB09 1995 | |||||||||||||||
மறுநிர்மாணம் | 1995 | |||||||||||||||
மின்சாரமயம் | 1995 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
சிரம்பான் வழித்தடம் அல்லது காஜாங் வழித்தடம் என்று முன்பு அழைக்கப்பட்ட புலாவ் செபாங் வழித்தடம் மூலமாக இந்த நிலையம் சேவை செய்யபடுகிறது.[2]
பொது
தொகுஇந்த நிலையத்தில் மூன்று தொடருந்து பாதைகள்; 1 பக்க நடைமேடை; 1 தீவு நடைமேடைள் உள்ளன. பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது. இந்த நிலையம் 1995-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.[3][4]
நிலையத்தில் பயணச் சீட்டு வழங்கிடம் மற்றும் இரண்டு பயணச் சீட்டு விற்பனை இயந்திரங்களும் உள்ளன. இந்த நிலையம் ஒரு சிறிய தொடருந்து ஊழியர் குழுவினரைக் கொண்டு செயல்படுகிறது.
பாங்கி நகரத்திற்கு அருகாமையில் இருப்பதால், இந்த நிலையம் நியாயமான எண்ணிக்கையிலான பயணிகளைப் பெறுகிறது. இந்த நிலையத்தின் வாகன நிறுத்துமிடம் பெரியதாகவும் வசதியாகவும் உள்ளது. நிலையத்திற்கு வெளியே சிறிய அங்காடிக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பழங்கள், குளிர்பானங்கள் விற்கப்படுகின்றன.
மேலும் காண்க
தொகுபாங்கி நிலையக் காட்சியகம்
தொகு-
நடைபாதை 02
-
நுழைவாயில்
-
நடைபாதை 02
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bangi KTM Komuter Station is a KTM Komuter train station located at and named after the small town of Bangi, Selangor. The Station is situated on the northeast tip of the town, and is primarily assigned to serve Seremban Line train services". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
- ↑ "This KTM station is situated on the northeast tip of the town, and is primarily assigned to serve Batu Caves – Tampin / Pulau Sebang Line KTM train services". klia2 info. 29 October 2017. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
- ↑ "The station was completed and opened to the public on 1995" (PDF). பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
- ↑ "Bangi station is situated along three lanes of railway lines". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.