தாமான் வாயூ கொமுட்டர் நிலையம்

தாமான் வாயூ கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Taman Wahyu Komuter Station; மலாய்: Stesen Komuter Taman Wahyu) என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக் மாவட்டம் (Gombak District), தாமான் வாயூ வீடுமனைகள் அமைந்துள்ள புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் நிலையமாகும். இந்த நிலையம் புலாவ் செபாங் வழித்தடத்தில், கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவையை வழங்கி வருகிறது.[1]

தாமான் வாயூ
Taman Wahyu
 KC03   PY13  மலாயா தொடருந்து நிறுவனம் கேடிஎம் கொமுட்டர்
தாமான் வாயூ கொமுட்டர் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்தாமான் வாயூ, கோம்பாக், கோலாலம்பூர்
ஆள்கூறுகள்3°12′52″N 101°40′20″E / 3.21444°N 101.67222°E / 3.21444; 101.67222
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள்  பத்துமலை-புலாவ் செபாங் 
(கேடிஎம் கொமுட்டர்)
நடைமேடை2 பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking கட்டணம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KC04 
வரலாறு
திறக்கப்பட்டது1905
மறுநிர்மாணம்ஏப்ரல் 2010
மின்சாரமயம்2009 - 2010
சேவைகள்
முந்தைய நிலையம்   பத்துமலை   அடுத்த நிலையம்
தொடக்கம் பத்துமலை
 
சிரம்பான் வழித்தடம்
 
கம்போங் பத்து >>> தம்பின்

மறுவடிவமைப்புக்குப் பிறகு, ஆகத்து 2010-இல் இந்த நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும் இதற்கு முன்னரே அங்கு ஒரு தொடருந்து நிறுத்தம் இருந்தது. பிரித்தானிய காலனி ஆட்சியின் போது இந்த நிலையம் கென்ட் ஆல்ட் (Kent Halt) அல்லது கென்ட் நிலையம் (Kent Station) என்று அழைக்கப்பட்டது.[2]

பொது

தொகு

1920-ஆம் ஆண்டுகளில், கோலாலம்பூர், செந்தூல் பகுதியில் இருந்த பத்துமலைக்குச் சென்ற தொடருந்துகள் இந்த இடத்தில் நின்று சென்றன. காலப் போக்கில் பேருந்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டது; அதன் விளைவாகவ் பொதுமக்கள் இந்த தொடருந்து நிறுத்ததைப் பயன்படுன்படுத்துவதை நிறுத்திக் கொண்டனர்.[3]

2010-ஆம் ஆண்டில் பத்துமலை தொடருந்து நிலையம் புனரமைக்கப்பட்டு, அங்குள்ள தொடருந்து பாதை மின்மயமாக்கப்பட்டது. செந்தூல் - பத்துமலை வழித்தடத்தின் ஒற்றைப் பாதை இரட்டைப் பாதையாக மாற்றப்பட்டது.

புதிய நிலையங்கள்

தொகு

அந்தக் கட்டத்தில்  KC04  தாமான் வாயூ,  KC03  கம்போங் பத்து மற்றும்  KC02  பத்து கென்டன்மன் ஆகிய புதிய நிலையங்கள் உருவாக்கப்பட்டன; மற்றும் நிறுத்தங்களும் கட்டப்பட்டன.[4]

தாமான் வாயூ நகர்ப்புறம், ஈப்போ சாலையின் மையத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம், ஈப்போ சாலை, கூச்சிங் சாலை, கெப்போங் சாலை வழியாக கோலாலம்பூர் நகர மையத்தை எளிதில் அணுகக்கூடிய வசதியை வழங்குகிறது.[5]

மேற்சான்றுகள்

தொகு
  1. "The KTM Taman Wahyu Komuter Station (stesen keretapi) is served by regular commuter train services on the Batu Caves - Kuala Lumpur - Seremban - Tampin Line / Route". பார்க்கப்பட்ட நாள் 12 August 2023.
  2. "Map of the Federated Malay States Railways 1932 and their connections".
  3. "The Taman Wahyu KTM Komuter Station is a KTM commuter train station extended Seremban Line. The Station is located at east side of and named after Taman Wahyu, Kuala Lumpur, it was opened and electrified on July 2010". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 12 August 2023.
  4. "The station began operations in April 2010, when the Port Klang-Sentul KTM Komuter service was extended to Batu Caves, and the Taman Wahyu station became the penultimate one. The station is between the Kampung Batu Komuter Station and Batu Caves Komuter Station". பார்க்கப்பட்ட நாள் 12 August 2023.
  5. "The Taman Wahyu KTM station serves the KTM Komuter's Batu Caves – Tampin / Pulau Sebang line and it accommodates 2 island platforms with 2 tracks". klia2.info. பார்க்கப்பட்ட நாள் 12 August 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு