பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையம்
பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Batu Cantonment Komuter Station; மலாய்: Stesen Batu Kentonmen Komuter) என்பது மலேசியா, கோலாலம்பூர், ஈப்போ சாலையின் 4.5-ஆவது மைலில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும்.[1]
KC02 | கொமுட்டர் Batu Kentonmen Komuter Station | ||||||||||||||||
பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையம் (2022) | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | ஈப்போ சாலை, 51200 கோலாலம்பூர் | |||||||||||||||
ஆள்கூறுகள் | 3°11′53.1″N 101°40′52.2″E / 3.198083°N 101.681167°E | |||||||||||||||
உரிமம் | தொடருந்து சொத்துரிமை | |||||||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து நிறுவனம் ரேபிட் ரெயில் (MRT) | |||||||||||||||
தடங்கள் | சிரம்பான் மேற்கு கடற்கரை | |||||||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடைகள் | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | |||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | KC02 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | KC02 சூலை 2010 | |||||||||||||||
முந்தைய பெயர்கள் | Kent | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
ஈப்போ சாலை என்பது கோலாலம்பூரில் உள்ள ஒரு பெரிய சாலை; மற்றும் புறநகர் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள முதன்மை சாலையாகும்.
வரலாறு
தொகுமுன்பு இந்த இடத்தில் ஓர் இராணுவத் தடுப்பு மையம்; மற்றும் ஓர் இராணுவ ஆயுதக் கிடங்கு மையம்; என இரு இராணுவ மையங்கள் இருந்தன. அதனால் இந்த இடத்திற்குப் பத்து கென்டன்மன் (மலாய்: Batu Kentomen) என்று பெயர் பெயரிடப்பட்டது.
1905-ஆம் ஆண்டில், இதே இடத்தில் முதன்முதலாக ஒரு தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. அதற்கு பத்து கென்டன்மன் தொடருந்து நிலையம் என்று பெயரிடப்பட்டது. பின்னர் 2010-ஆம் ஆண்டில் அந்த நிலையம், கொமுட்டர் தொடருந்து நிலையமாக மாற்றப்பட்டது. அதன் பின்னர், அந்த நிலையத்திற்கு பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையம் என புதிய பெயர் வைக்கப்பட்டது.
போக்குவரத்து சேவைகள்
தொகுஇந்த நிலையம் இங்குள்ள பல குடியிருப்புப் பகுதிகளுக்கு போக்க்குவரத்து வசதிகளை வழங்கும் நிலையமாக கட்டப்பட்டது. அருகிலுள்ள இராணுவத் தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட பாதுகாப்பு நடைபாதைகள் கட்டப்பட்டு உள்ளன.[2]
இராணுவ ஊழியர்கள், கொமுட்டர் நிலையத்தை வசதியாகப் பயன்படுத்திக் கொள்ள இந்த நடைபாதைகள் உதவுகின்றன.
நடைபாதை வழித்தடங்களை இணைப்பதற்கும்; மற்றும் பயணச் சீட்டு அலுவலகத்திற்குச் செல்லும் பாதைகளை இணைப்பதற்கும்; மின்தூக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையம் ஊனமுற்றோருக்கான நட்புறவு நிலையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலையத்தின் முக்கிய தளங்கள் உலோக கூரைகளால் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
பெயர்
தொகுபிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் காலத்திலும்; மற்றும் 1980-ஆம் ஆண்டுகள் வரையிலும்; பத்து கென்டன்மன் நிலையம் என்பது கென்ட் நிலையம் என்று அறியப்பட்டது.[3]
இணைப்புகள்
தொகுபுத்ராஜெயாவழித்தடத்தின், கென்டன்மன் எம்ஆர்டி நிலையம் (Kentonmen MRT Station) நடந்து செல்லும் தூரத்தில் தான், பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையமும் உள்ளது. ஆனாலும், கென்டன்மன் எம்ஆர்டி நிலையமும்; பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையமும் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைக்கப்படவில்லை.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "The Batu Kentonmen KTM Komuter Station is a KTM Komuter train station forms part of Seremban Line KTM Komuter train services. The Station opened and electrified on July 2010". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 1 April 2024.
- ↑ "It is integrated with the adjacent military base, as sheltered walkways are built allowing military staff convenient use of the station. Slightly off platform, a line from the main line branches of into the camp". klia2 info. 29 October 2017. பார்க்கப்பட்ட நாள் 1 April 2024.
- ↑ "The KTM Klang Valley rail network circa 1985". பார்க்கப்பட்ட நாள் 2 July 2019.