அலோர் காஜா மாவட்டம்
அலோர் காஜா மாவட்டம் என்பது (மலாய்:Daerah Alor Gajah; ஆங்கிலம்:Alor Gajah District; சீனம்:亚罗牙也县) மலேசியா, மலாக்கா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு கிழக்கில் ஜாசின் மாவட்டம்; தெற்கில் மத்திய மலாக்கா மாவட்டம்; ஆகிய இரண்டு மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தின் தலைநகரம் அலோர் காஜா.
அலோர் காஜா மாவட்டம் | |
---|---|
Alor Gajah District | |
மலாக்கா | |
ஆள்கூறுகள்: 2°16′N 102°09′E / 2.267°N 102.150°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | மலாக்கா |
மாவட்டம் | அலோர் காஜா |
தொகுதி | அலோர் காஜா நகரம் |
உள்ளூராட்சிகள் | அலோர் காஜா நகராட்சி (வடக்கு அலோர் காஜா) ஆங் துவா ஜெயா நகராட்சி (தென் கிழக்கு அலோர் காஜா) |
பரப்பளவு | |
• மொத்தம் | 660 km2 (250 sq mi) |
மக்கள்தொகை (2019[3]) | |
• மொத்தம் | 2,12,000[1] |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசியாவின் அஞ்சல் குறியீடுகள் | 76100 - 78xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-06-5 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | M |
இணையதளம் | Majlis Perbandaran Alor Gajah அலோர் காஜா மாவட்டம் |
அலோர் காஜா என்பது மலாக்கா மாநிலத்தின் மக்களவைத் தொகுதியும் ஆகும். இந்த மாவட்டம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தம்பின் மாவட்டம்; ரெம்பாவ் மாவட்டம்; மற்றும் போர்டிக்சன் மாவட்டம் ஆகிய மாவட்டங்களுக்கு அருகில் உள்ளது.
நிர்வாகப் பிரிவுகள்
தொகுஅலோர் காஜா மாவட்டம் 31 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[4]
- லெண்டு (Lendu)
- லுபோக் சீனா (Lubok China)
- மஸ்ஜித் தானா (Masjid Tanah)
- ராமுவான் சீனா கிச்சில் (Ramuan Cina Kecil)
- சுங்கை பாரு தெங்கா (Sungai Baru Tengah)
- கோலா சுங்கை பாரு (Kuala Sungai Baru)
- சுங்கை பாரு ஈலீர் (Sungai Baru Hilir)
- பிரிசு (Brisu)
- அலோர் காஜா (Alor Gajah)
- தஞ்சோங் ரீமாவ் (Tanjung Rimau)
- பாடாங் செபாங் (Padang Sebang)
- பெலிம்பிங் (Belimbing)
- பாரிட் மெலானா (Parit Melana)
- பாயா ரும்புட் (Paya Rumput)
- தம்பின் (Tampin)
- பெகோ (Pegoh)
- கிளேமாக் (Kelemak)
- தாபோ நானிங் (Taboh Naning)
- மெலெக்கே (Melekek)
- ரம்பாய் (Rambai)
- ரெம்பியா (Rembia)
- ஊத்தான் பெர்ச்சா (Hutan Percha)
- புலாவ் செபாங் (Pulau Sebang)
- தெபோங் (Tebong)
- கெமுனிங் (Kemuning)
- காடேக் (Gadek)
- மாச்சாப் (Machap)
- மலாக்கா பீண்டா (Melaka Pindah)
- டுரியான் துங்கல் (Durian Tunggal)
- சுங்கை பெத்தாய் (Sungai Petai)
- சுங்கை பாரு உலு (Sungai Baru Ulu)
- பெரிங்கின் (Beringin)
- ஆயர் பா’ஆபாஸ் (Air Pa'abas)
- சுங்கை சிப்புட் (Sungai Siput)
- ராமுவான் சீனா பெசார் (Ramuan Cina Besar)
- சுங்கை பூலோ (Sungai Buluh)
- கோலா லிங்கி (Kuala Linggi)
- கம்போங் பாயா டத்துக் (Kampung Paya Datuk)
- சிம்பாங் அம்பாட் (Simpang Ampat)
மலேசிய நாடாளுமன்றம்
தொகுமலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் அலோர் காஜா மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள் (2023-ஆம் ஆண்டு மலாக்கா மாநிலப் பொதுத் தேர்தல் முடிவுகள்)
அலோர் காஜா மாவட்டப் பிரதிநிதிகள்
நாடாளுமன்றம் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P134 | மஸ்ஜித் தானா மக்களவை தொகுதி | மாஸ் எரிமாத்தி சம்சுடின் Mas Ermieyati Samsudin |
பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்.) |
P135 | அலோர் காஜா மக்களவை தொகுதி | அட்லி சகாரி Mohd Redzuan Md Yusof |
பாக்காத்தான் (அமாணா) |
மலாக்கா மாநில சட்டமன்றம்
தொகுமலாக்கா மாநில சட்டமன்றத்தில் அலோர் காஜா மாவட்டப் பிரதிநிதிகள்; (2023-ஆம் ஆண்டு மலாக்கா மாநிலப் பொதுத் தேர்தல் முடிவுகள்):
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P134 | N1 | கோலா லிங்கி | ரோசுலி அப்துல்லா | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P134 | N2 | தஞ்சோங் பிடாரா | அப்துல் ரவுப் யூசோ | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P134 | N3 | ஆயர் லீமாவ் | அமிட் பாசிரி | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P134 | N4 | லெண்டு | சுலைமான முகமட் அலி | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P134 | N5 | தாபோ நானிங் | சுல்கிப்லி சின் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P135 | N6 | ரெம்பியா | முகமட் ஜெய்லானி காமிஸ் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P135 | N7 | காடேக் | சண்முகம் பிச்சை | பாரிசான் நேசனல் மஇகா |
P135 | N8 | மாச்சாப் ஜெயா | நிகுவே இ சான் | பாரிசான் நேசனல் (மசீச) |
P135 | N9 | டுரியான் துங்கல் | சகாரி காலில் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
கல்விக் கழகங்கள்
தொகு- மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்; (MARA University of Technology (UiTM; Malay: Universiti Teknologi MARA) Alor Gajah Campus, Lendu.
- மலேசியா வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரி (யு.சி.ஏ.எம்); ஆயர் பாபாஸ்; ( University College Agroscience Malaysia (UCAM), Ayer Pa'abas
- மலாக்கா இசுலாமியப் பல்கலைக்கழக கல்லூரி (KUIM; மலாய்: கோலேஜ் யுனிவர்சிட்டி இஸ்லாம் மேலகா) கோலா சுங்கை பாரு; (University College Islamic Malacca (KUIM; Malay: Kolej Universiti Islam Melaka) Kuala Sungai Baru)
- கோலாலம்பூர் பல்கலைக்கழகம் (யுனி.கே.எல்.) தாபோ நானிங்; (University of Kuala Lumpur (UniKL), Taboh Naning Campus, Taboh Naning)
- மலேசிய கடல்சார் அகாடமி, கோலா சுங்கை பாரு; (Malaysian Maritime Academy (ALAM) Kuala Sungai Baru)
- மஸ்ஜித் தானா சமூக கல்லூரி; (Masjid Tanah Community College)
- உயர்த் தொழில்நுட்ப பயிற்சி மையம்; (Advanced Technology Training Center (ADTEC; Malay: Pusat Latihan Teknologi Tinggi) Alor Gajah, Taboh Naning
- மாரா உயர்த் திறன் கல்லூரி; (MARA College of High Skills (Malay: Kolej Kemahiran Tinggi MARA) Masjid Tanah
- தேசிய இளைஞர்களின் உயர் திறன் நிறுவனம்; (National Youth Institute of High Skills (IKTBN; Malay: Institut Kemahiran Tinggi Belia Negara) Masjid Tanah
- மலாக்கா மெட்ரிகுலேசன் கல்லூரி (Malacca Matriculation College; (Malay: Kolej Matrikulasi Melaka) Londang Masjid Tanah
- கோழி வளர்ப்பு நிறுவனம்; (Poultry Institute of Technology (ITU; Malay: Institut Teknologi Unggas) Alor Gajah, Masjid Tanah
காட்சியகம்
தொகு-
சுங்கை பாரு தமிழ்ப்பள்ளி
-
அலோர் காஜா நகரம்
-
டுரியான் துங்கல் நீர்த்தேக்கம்
-
கோலா சுங்கை பாரு
-
மலேசியக் கப்பல் படைக் கல்லூரி
-
மாச்சாப் பாரு
-
கடலாமைகள் காப்பகம்
-
தஞ்சோங் பிடாரா கடல்கரை
-
ரிக்கார்டோ கடல்கரை
-
காதலர் தீவு கடல்கரை காண்டா மரங்கள்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://www.dosm.gov.my/v1/uploads/files/6_Newsletter/Newsletter%202020/DOSM_DOSM_MELAKA_1_2020_Siri-81.pdf
- ↑ "Latar Belakang". www.pdtag.gov.my.
- ↑ https://www.dosm.gov.my/v1/uploads/files/6_Newsletter/Newsletter%202020/DOSM_DOSM_MELAKA_1_2020_Siri-81.pdf
- ↑ User, Super. "Info Daerah". www.pdtag.gov.my.
{{cite web}}
:|last=
has generic name (help)
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Alor Gajah District தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.