காடேக்
காடேக் (ஆங்கிலம், மலாய் மொழி: Gadek) என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் பழமையான கிராமப்புற நகரம் ஆகும். இந்த நகரம் மலாக்கா மாநகரத்தில் இருந்து 20 கி.மீ., தொலைவிலும் அலோர் காஜா நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.[1] இந்த நகரத்திற்கு அருகில் உள்ள வெந்நீர் ஊற்று, மலேசிய வாழ் மக்களிடையே பிரசித்தி பெற்றது.
காடேக்
Gadek | |
---|---|
நாடு | மலேசியா |
மாநிலம் | மலாக்கா |
நேர வலயம் | ஒசநே+8 (MST) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
அஞ்சல் குறியீடு | 78000 |
இடக் குறியீடு | 06 |
காடேக் வெந்நீர் ஊற்று
தொகுமலாக்கா மாநிலத்தில் உள்ள மற்ற கிராமப்புற நகரங்களைப் போல, காடேக் நகரமும் ஒரு சாதாரண நகரமாக இருந்தாலும், அங்கு இருக்கும் வெந்நீர் ஊற்று தான் அந்த நகருக்கு சிறப்பு செய்கிறது. தொலைவிலுள்ள சிங்கப்பூரில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்த வெந்நீர் ஊற்றுக்கு வருகை புரிகின்றனர்.[2]
இந்த ஊற்றுக்கு நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவத் தன்மைகள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.[3] இதை இங்குள்ள மக்கள் ஆயர் பனாஸ் காடேக் (Air Panas Gadek) என்று அழைக்கிறார்கள்.[4]
மலாக்கா மாநிலத்தில் மூன்று வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. காடேக் வெந்நீர் ஊற்றைத் தவிர, ஜாசின், பெம்பான் நகரில் ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது. மற்றொன்று செரானா பூத்தே வெந்நீர் ஊற்று (Cerana Putih Hot Spring). இந்த ஊற்று அலோர் காஜா, தாபோ நானிங் எனும் இடத்தில் உள்ளது.[1]
மலாயாவைப் பிரித்தானியர்கள் ஆட்சி செய்த போது, பிரித்தானிய இராணுவ வீரர்கள் இந்த நீர் ஊற்றைக் கண்டுபிடித்தனர். அதுவரையில் உள்ளூர் மக்களுக்குத் தெரியாமல் இருந்தது. நோய் நொடிகளைக் குணப்படுத்துவதற்காக, பிரித்தானிய இராணுவ வீரர்கள் அடிக்கடி இங்கு வருகை புரிந்து உள்ளனர்.[1] சுடுநீர் குளத்திற்கு அருகே தற்காலிகமாகத் தங்கி இருந்துள்ளனர். பிரித்தானியர்கள் மலாயாவை விட்டுப் போகும் வரையில், அந்த நீர் ஊற்றைப் பற்றிய தகவல்கள் ரகசியமாகவே இருந்துள்ளன.[5]
அருகிலுள்ள நகரங்கள்
தொகு- பாடாங் செபாங்
- கெமுனிங்
- கிளேமாக்
- அலோர் காஜா
அருகிலுள்ள கிராமங்கள்
தொகு- கம்போங் புங்கூர்
- கம்போங் தஞ்சோங்
- கம்போங் புக்கிட் நங்கா
- கம்போங் பிஞ்சாய் 1
- கம்போங் பாரு 1 காடேக்
- கம்போங் பாரு 2 காடேக்
- கம்போங் எம்பாங் பத்து
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Gadek, Alor Gajah. It is only 5km from Alor Gajah town and bout 25km from Melaka town.
- ↑ Infact, it seems that it is also very popular with Singaporean tourists.
- ↑ Melaka's Gadek Hot Spring: Testing the waters.
- ↑ Gadek Hot Spring or known in Malay as ‘Air Panas Gadek.
- ↑ It was believed that the local villagers discovered the hot spring in the forest after watching some English soldiers settled around the spring.