பாயா ரும்புட்
பாயா ரும்புட் (மலாய்; ஆங்கிலம்: Paya Rumput; சீனம்:巴耶鲁普特) என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். மலாக்கா மாநகரத்தில் இருந்து 16 கி.மீ; தொலைவில் உள்ளது. அண்மைய காலங்களில் மலாக்கா மாநிலத்தில் ஏற்பட்டு வரும் தொழில்துறை தாக்கங்கள் இந்த நகரத்தையும் பாதித்து உள்ளது. அந்த வகையில் இந்த நகரைச் சுற்றிலும் ஆங்காங்கே சிறிய அளவிலான் தொழில்பேட்டைகள் உருவாகி உள்ளன.
பாயா ரும்புட் | |
---|---|
Paya Rumput | |
மலாக்கா | |
ஆள்கூறுகள்: 2°17′N 102°13′E / 2.283°N 102.217°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | மலாக்கா |
மாவட்டம் | மத்திய மலாக்கா மாவட்டம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசியாவின் அஞ்சல் குறியீடுகள் | 76450[1] |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 06316 0000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | M |
இணையதளம் | www |
மலாக்கா மாநிலத்தில் உள்ள பழைமையான நகரஙக்ளில் இந்த நகரமும் ஒன்றாகும். அத்துடன் மலேசியத் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் இந்த நகரமும் ஒன்றாக அறியப்படுகிறது.
பொது
தொகுவரலாறு
தொகுஇந்த நகர்ப்புற கிராமம் மலாக்கா மாநிலத்தில் உள்ள பழைய கிராமங்களில் ஒன்றாகும். பாயா ரம்புட் கிராமத்தின் வரலாறு 1705-ஆம் ஆண்டில் தொடங்குகிறது. இந்தோனேசியா, சுமத்திராவில் இருந்த கெரிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த நான்கு நண்பர்களான மாலிம் பாஞ்சாங், மாலிம் சிகாய், துவான் பகே அலி மற்றும் பெயர் தெரியாத மற்றொருவரால் திறக்கப்பட்டது.
இவர்கள் இந்த இடத்திற்கு முதன்முதலில் வந்தபோது இந்த இடம் ஒரு காட்டுப் பகுதியில் சதுப்பு நிலத்தால் சூழப்பட்டு இருந்தது. அங்கே ஓர் உயரமான மரத்தின் அடிப்பகுதியில் இருந்து நுனி வரை காட்டுப் புற்கள் மூடி இருந்தன. அதைக் கண்ட அவர்கள் அந்த இடத்திற்கு பாயா ரும்புட் என்று பெயர் வைத்தார்கள்.
இருப்பினும், இதற்கு முன்னர் 15-ஆம் நூற்றாண்டில் அங்கு ஒரு குடியேற்றம் இருந்ததாகவும் இலக்கியச் சான்றுகள் உள்ளன. ஏனெனில் இக்காயாட் ஆங் துவா என்ற பழங்கால இலக்கிய நூலில் பாயா ரும்புட் கிராமத்தின் சில இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பொருளாதாரம்
தொகுஇந்த நகரைச் சுற்றிலும் ஆங்காங்கே சிறிய அளவிலான் தொழில்பேட்டைகள் இருந்தாலும், வேளாண்மைத் துறையே முதன்மையாக உள்ளது. இங்கு பெரிய அளவிலான கால்நடை வளர்ப்பு; மற்றும் தண்ணீர்விட்டான் கொடி, கீரை, கடுகு மற்றும் வெள்ளரி போன்ற காய்கறிகளை பயிரிடப்படுகின்றன.
மேலும், கிராமப் பெண்களின் ஒத்துழைப்பால் உபரி வருமானத்திற்கு வாத்து பண்ணைகளும் இயக்கப்படுகின்றன.
பாயா ரும்புட் தமிழ்ப்பள்ளி
தொகுபாயா ரும்புட் நகரத்தில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் பாயா ரும்புட் தமிழ்ப்பள்ளி. அவற்றில் 170 மாணவர்கள் பயில்கிறார்கள். 18 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2020 சனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[2]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
MBD2085 | பாயா ரும்புட்[3] | SJK(T) Paya Rumput | பாயா ரும்புட் தமிழ்ப்பள்ளி | 76450 | மலாக்கா | 170 | 18 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Paya Rumput, Melaka - Postcode - 76450 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 11 February 2024.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
- ↑ Melaka, Ppki Sjkt Paya Rumput (18 April 2019). "பாயா ரும்புட் தமிழ்ப்பள்ளி - MINGGU BAHASA TAMIL PERINGKAT SEKOLAH". PPKI SJKT PAYA RUMPUT, MELAKA. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.