ஆங் துவா (மலாய்; ஆங்கிலம்: Hang Tuah; சீனம்: 汉都亚); என்பவர் செஜாரா மெலாயு எனும் மலாய் இலக்கிய மரபு நூலின்படி, 15-ஆம் நூற்றாண்டில் சுல்தான் மன்சூர் ஷா ஆட்சியின் போது மலாக்காவில் வாழ்ந்த ஒரு போர்வீரர் ஆவார். இருப்பினும், ஆங் துவா வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள், இன்று வரையிலும் ஒரு வரையறுக்கப்பட்ட நிலையில் குறைவாகவே உள்ளன.[1][2]

மலேசியா, கோலாலம்பூர், மலேசிய அருங்காட்சியகத்தில் ஆங் துவாவின் வெண்கலச் சுவரோவியம்

அவர் ஒரு சிறந்த கடல் தளபதி; ஓர் அரசதந்திரி; மற்றும் சிலாட் எனும் மலாய் தற்காப்புத் துறையின் விற்பனர் என்றும் கூறப்படுகிறது. ஆங் துவா மலாய் இலக்கியத்தில் மிகவும் புகழ்பெற்ற போர்வீரராக அறியப்படுகிறார். இருப்பினும், அவரின் வரலாறு சற்றே சர்ச்சைக்கு உரியது; மற்றும் ஆங் துவாவின் கதையின் உண்மைத் தனமும் மிகவும் சர்ச்சைக்கு உரியதாகவும் உள்ளது.[3]

வரலாற்றுத் தன்மை தொகு

ஆங் துவாவின் உண்மைத்தன்மை ஒரு நூற்றாண்டு காலமாக வரலாற்று ஆசிரியர்களின் விவாதத்திற்கு உட்பட்டுள்ளது. 2012-இல், வரலாற்றாசிரியர் கூ கே கிம், ஆங் துவா வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.[4] ஜப்பான், இரியூக்கியூ தீவுகளின் ரெகிடாய் ஓவான் (Rekidai Hoan) வரலாற்று ஆவணங்களில் ஆங் துவா குறிப்பிடப்பட்டு இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் சிலர் 2016-ஆம் ஆண்டில் இருந்து பரிந்துரைத்து வருகின்றனர்.[5][6] </ref>

அந்த ரெகிடாய் ஓவான் வரலாற்று ஆவணம், 15-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியை உள்ளடக்கியது. மலாக்காவில் இருந்து ஒரு குறிப்பிட்ட தளபதி வருகை செய்ததாக அந்த ஆவணம் பதிவு செய்கிறது. அந்தத் தளபதியை "லெசோமனா" என்றும் "லோ-சி-மா-னா" என்றும் அந்த ஆவணம் பதிவு செய்கிறது. இருப்பினும், ஆங் துவாவின் பெயர் குறிப்பிடப் படாததால், இந்தக் கூற்று இன்று வரையில் நிரூபிக்கப்படவில்லை.[7]

இனம் தொகு

ஆங் துவாவின் வரலாற்றுத் தன்மை ஒருபுறமிருக்க, அவரின் இனம் தொடர்பாக சில சர்ச்சைகள் உள்ளன. ஆங் துவாவிற்கு பூர்வக்குடி மலாய் வம்சாவளி இருந்தது என்று ஒரு புராணக்கதை கூறுகிறது. 21-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஆங் துவா சீன வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று ஆதாரமற்ற ஒரு சர்ச்சையும் எழுந்தது.[8][9][10][11]

புராணக்கதை தொகு

 
மலாக்கா கம்போங் டூயோங்கில் ஆங் துவா கிணறு
 
தஞ்சோங் கிளிங் நகரில் ஆங் துவா கல்லறை

மலாக்கா புராணக் கதைகளின் படி, ஆங் துவா தம் நான்கு தோழர்களான ஆங் கஸ்தூரி, ஆங் ஜெபாட், ஆங் லெக்கிர் மற்றும் ஆங் லெக்கியூ ஆகியோருடன் மலாக்காவில் புகழ்பெற்ற தற்காப்புக் கலை ஆசிரியரிடம் சீலாட் தற்காப்புக் கலையைக் கற்றுக் கொண்டனர். அவர்களின் ஆசிரியர் பெயர் ஆதி புத்திரர். அவர் ஒரு மலை உச்சியில் ஒரு துறவு வாழ்க்கை வாழ்ந்தார்.

ஒரு கட்டத்தில் மலாக்காவின் பெண்டகாரா, துன் பேராக்; ஆங் துவாவை அப்போதைய மலாக்கா சுல்தான் சுல்தான் முசபர் ஷாவிடம் அறிமுகம் செய்தார். அதன் பின்னர், சுல்தான் முசபர் ஷாவின் நம்பிக்கையை முழுமையாக பெறும் அளவிற்கு பற்பல துணிச்சலான காரியங்களில் ஆங் துவா ஈடுபட்டார்.[12]

சுல்தான் முசபர் ஷா தொகு

மலாக்கா சுல்தானகத்தில் ஆங் துவாவின் செல்வாக்கு படிப்படியாக உயர்ந்து உச்ச நிலையைத் தொட்டது. சுல்தான் முசபர் ஷாவிடம் ஆங் துவா காட்டிய முழுமையான விசுவாசத்திற்காக அவருக்கு மலாக்கா கடல்படையின் தளபதி பதவி வழங்கப்பட்டது.[13]

ஆங் துவா சுல்தானின் நிலையான உதவியாளராக மாறியதாகக் கூறப்படுகிறது. சுல்தான் வெளிநாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணங்களில் சுல்தானுடன் சென்றாறார். ஒரு தடவை மஜாபாகித்திற்கு பயணம் செய்த போது, ஆங் துவா அங்கு புகழ்பெற்ற போர்வீரரான தாமிங் சாரியுடன் ஒரு போட்டியில் வாள் சண்டையிட நேர்ந்தது. கொடூரமான சண்டைக்குப் பிறகு ஆங் துவா வெற்றியாளரானார்.

தாமிங் சாரி தொகு

பின்னர் மஜாபாகித்தின் ஆட்சியாளர், சிங்க விக்ரம வர்தனா, ஆங் துவாவுக்கு தாமிங் சாரியின் குத்துவாளை பரிசாக வழங்கினார். தாமிங் சாரி கிரிசு கத்தி (Keris Taming Sari) மாயாஜால ஆற்றல் நிறைந்தது என்று கூறப்பட்டது. அதன் உரிமையாளருக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தாமல் வெற்றியைத் தொடர்ந்து வழங்கும் என்றும் நம்பப்பட்டது.

ஆங் துவா சுல்தானின் தூதராக செயல்பட்டதாகவும், சுல்தானின் சார்பாக நட்பு நாடுகளுக்கு பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆங் துவா முதுமை வரை வாழ்ந்தார். அவரின் உடல் மலாக்காவில் உள்ள தஞ்சோங் கிளிங்கில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது கல்லறையை இன்றும் அங்கு காணலாம்; இருப்பினும் அவரின் உடல் வேறு ஓர் இடத்தில் புதைக்கப்பட்டு உள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.[14]

போர்த்துகீசியர் மலாக்காவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆங் துவா சிங்கப்பூர் தீவுக்குச் சென்றதாக மற்ற சில சான்றுகள் கூறுகின்றன.[15]

மேற்கோள்கள் தொகு

  1. Adam, Ahmat (2016-01-01). Antara Sejarah dan Mitos: Sejarah Melayu & Hang Tuah dalam Historiografi Malaysia. SIRD. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-967-2165-93-4. https://books.google.com/books?id=y7f4DwAAQBAJ&q=menyebabkan+banyak+orang+membaca+ini+sebagai&pg=PA156. 
  2. David Levinson & Karen Christensen (2002). Encyclopedia of Modern Asia, Vol. 4. Charles Scribner's Sons. பக். 39, 139. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-684-80617-7. https://books.google.com/books?id=v0sOAQAAMAAJ&q=Hang+tuah. 
  3. Nadia, Alena (2022-05-15). "Filmmakers attempt to piece together fragments of Hang Tuah". Malaysiakini. பார்க்கப்பட்ட நாள் 2022-05-17.
  4. "Don: Hang Tuah, Hang Jebat, and Hang Li Po are myths". Malaysiakini. 17 January 2012 இம் மூலத்தில் இருந்து 10 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220110052358/https://www.malaysiakini.com/news/186812. 
  5. Musa, Hashim; Rodi, Rozita Che; Muhammad, Salmah Jan Noor (2018). "Surat Hang Tuah Kepada Raja Ryukyu: Kebijaksanaan Ilmu Diplomasi Melayu Tradisional" (in ms). Jurnal Melayu Sedunia 1 (1): 162–190. பன்னாட்டுத் தர தொடர் எண்:2637-0751. https://ajap.um.edu.my/index.php/jurnalmelayusedunia/article/view/13388. 
  6. Aman, Azlansyah; Ros, Azhar Mad (2016). "Sejarah Perdagangan Maritim Ryukyu Serta Hubungannya Dengan Melaka" (in en). Sejarah 25 (2): 58–72. doi:10.22452/sejarah.vol25no2.4. பன்னாட்டுத் தர தொடர் எண்:2756-8253. http://jice.um.edu.my/index.php/SEJARAH/article/view/9343. 
  7. Iszahanid, Hafizah (2016-04-29). "Hang Tuah sampai bila pun tidak dapat dibuktikan". பார்க்கப்பட்ட நாள் 2023-03-18.
  8. Winstedt, R. O. (1962). A history of Malaya. Singapore: Marican. 
  9. Donplaypuks (7 May 2008). "Parameswara didn't convert, Hang Tuah not Chinese". Malaysiakini இம் மூலத்தில் இருந்து 16 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210616112424/https://www.malaysiakini.com/letters/82470. 
  10. Khalifa, Faiq (22 May 2017). "Hang Tuah is Chinese? Hang on a second…". Free Malaysia Today இம் மூலத்தில் இருந்து 12 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201112022055/https://www.freemalaysiatoday.com/category/opinion/2017/05/22/hang-tuah-is-chinese-hang-on-a-second/. 
  11. Idrus, Rusaslina (2016-05-03). "Multicultural Hang Tuah: Cybermyth and popular history making in Malaysia". Indonesia and the Malay World 44 (129): 229–248. doi:10.1080/13639811.2015.1133135. பன்னாட்டுத் தர தொடர் எண்:1363-9811. https://doi.org/10.1080/13639811.2015.1133135. 
  12. Britannica CD - Sejarah Melayu பரணிடப்பட்டது 2011-10-25 at the வந்தவழி இயந்திரம்
  13. Braginsky, V. I. (1990-01-01). "Hikayat Hang Tuah; Malay epic and muslim mirror; Some considerations on its date, meaning and structure" (in en). Bijdragen tot de Taal-, Land- en Volkenkunde 146 (4): 399–412. doi:10.1163/22134379-90003207. பன்னாட்டுத் தர தொடர் எண்:0006-2294. https://brill.com/view/journals/bki/146/4/article-p399_1.xml. 
  14. Musa, Hashim; Rodi, Rozita Che; Muhammad, Salmah Jan Noor (2018-09-24). "SURAT HANG TUAH KEPADA RAJA RYUKYU: KEBIJAKSANAAN ILMU DIPLOMASI MELAYU TRADISIONAL" (in en). Jurnal Melayu Sedunia 1 (1): 162–190. பன்னாட்டுத் தர தொடர் எண்:2637-0751. https://ajap.um.edu.my/index.php/jurnalmelayusedunia/article/view/13388. 
  15. Albuquerque, Afonso de; Birch, Walter de Gray (1875). The commentaries of the great Afonso Dalboquerque, second viceroy of India. University of California. London : Printed for the Hakluyt society. https://archive.org/details/commentariesgre02unkngoog. 

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்_துவா&oldid=3898362" இலிருந்து மீள்விக்கப்பட்டது