தஞ்சோங் பிடாரா
தஞ்சோங் பிடாரா (மலாய் மொழி: Pantai Tanjung Bidara; ஆங்கிலம்: Tanjung Bidara Beach; சீனம்: 丹绒比达拉) என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் (Alor Gajah District) உள்ள ஒரு கடற்கரை நகரம். மலாக்காவில் மட்டும் அல்ல மலேசிய அளவிலும் நன்கு பிரசித்தி பெற்ற கடற்கரைகளில் இந்தக் கடற்கரையும் ஒன்றாகும்.
தஞ்சோங் பிடாரா | |
---|---|
Tanjung Bidara | |
மலாக்கா | |
ஆள்கூறுகள்: 2°21′N 102°07′E / 2.350°N 102.117°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | மலாக்கா |
மாவட்டம் | அலோர் காஜா |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலாக்காவின் மஸ்ஜித் தானா நகருக்கு அருகில்; பெங்காலான் பாலாக் கடற்கரைக்கு (Pengkalan Balak Beach) தெற்கே இந்த தஞ்சோங் பிடாரா கடற்கரை உள்ளது.[1]
பொது
தொகுமலாக்கா மாநிலத்தில் அழுங்காமை (Hawksbill Sea Turtle) எனும் கடல் ஆமைகள் கரை ஏறும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.[2] கடற்கரை பகுதியில் பல தங்குமிடங்கள் உள்ளன. லகுனா பிடாரா கடற்கரை உல்லாச விடுதி எனும் தங்கும் விடுதி மிக முக்கியமானது ஆகும்.[3]
மஸ்ஜித் தானா
தொகுஇந்த நகரம் மலாக்கா நீரிணையைச் சார்ந்த ஒரு கடற்கரை நகரமாகும். மலாக்கா மாநகரத்தில் இருந்து 30 கி.மீ., கோலாலம்பூரில் இருந்து 102 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.
மஸ்ஜித் தானா நகர்ப்பகுதி, நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு மிக அருகாமையில் இருப்பதால், இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலோர் அந்த மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அடாட் பெர்பாத்தே (Adat Perpatih) கலாசார முறையையும் இவர்கள் பின்பற்றி வருகின்றனர்.
பெங்காலான் பாலாக் கடற்கரை
தொகுஇந்த நகருக்கு அருகில் சுங்கை ஊடாங் எனும் நகரம் இருக்கிறது. 1990-களில் அங்கே ஓர் எண்ணெய் சுத்தி செய்யும் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. அந்தத் தாக்கத்தினால், மஸ்ஜித் தானாவின் வீடு நில உடைமைகளின் விலையும் உயர்வு கண்டது.
மஸ்ஜித் தானாவில் இருந்து 7 கி.மீ. தொலைவில், பிரசித்தி பெற்ற பெங்காலான் பாலாக் கடற்கரை உள்ளது. தஞ்சோங் பிடாரா, கோலா சுங்கை பாரு சிறுநகரங்களுக்கு அருகிலும் கடற்கரைகள் உள்ளன.
காட்சியகம்
தொகுமேற்கோள்
தொகு- ↑ "Pantai Tanjung Bidara".
- ↑ Tan Win Sim (20 June 2018). "Protect Melaka's turtle nesting sites". New Straits Times. பார்க்கப்பட்ட நாள் 2 May 2023.
- ↑ "Tanjung Bidara Beach". attractionsinmalaysia.com.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புக்கள்
தொகு- பொதுவகத்தில் Tanjung Bidara தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.