தஞ்சோங் கிலிங்

மத்திய மலாக்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை கிராமப்புற நகரம்.

தஞ்சோங் கிலிங் அல்லது தஞ்சோங் கிலிங்கான் (ஆங்கிலம்: Tanjung Kling அல்லது Tanjung Klingon; மலாய் மொழி: Tanjung Kling) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை கிராமப்புற நகரமாகும். இங்குதான் அங் துவா எனும் மலாக்கா சுல்தானக வீரரின் கல்லறை உள்ளது.[1]

தஞ்சோங் கிலிங்
Tanjung Kling
மலாக்கா
Map
ஆள்கூறுகள்: 2°14′16.3″N 102°09′16.0″E / 2.237861°N 102.154444°E / 2.237861; 102.154444
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
மாவட்டம்மத்திய மலாக்கா
உருவாக்கம்1600
மத்திய மலாக்கா மாவட்டத்தில் தஞ்சோங் கிலிங்கான்

தஞ்சோங் கிலிங் கடற்கரை நகரத்திற்கு அருகில் உள்ள இதர கடற்கரை சிறுநகரங்கள் பந்தாய் குண்டூர்; மற்றும் பந்தாய் புத்திரி. இந்த தஞ்சோங் கிலிங் நகரம் மலாக்கா மாநகரத்தையும்; மஸ்ஜித் தானா நகரத்தையும் இணைக்கும் பிரதான கூட்டரசு சாலைக்கு இடையில் அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

வரலாற்று ரீதியாக, தஞ்சோங் கிலிங் எனும் பெயர், இந்தியா, கலிங்கா கண்டத்தில் இருந்து குடியேறிய மக்களின் பெயரில் இருந்து பெற்று இருக்கலாம் என உள்நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.[2]

தஞ்சோங் கிலிங் நகரைத் தவிர பெக்கான் கெலிங் (Pekan Keling), கம்போங் கெலிங் (Kampong Keling) போன்ற பல இடங்களிலும்; கலிங்கா கண்டத்தில் இருந்து மக்கள் குடியேறி உள்ளார்கள்.[3]

மலாக்கா சுல்தானகத்தின் காலத்தில், தஞ்சோங் கிலிங் பகுதிகளில், தமிழ் வணிகர்கள் சிறப்பாக வாழ்ந்தனர் என்று சொல்லப் படுகிறது.

காசுடனேடா வரலாற்று ஆசிரியர்

தொகு

காசுடனேடா (Castanheda) எனும் போர்த்துகீசிய வரலாற்று ஆசிரியர் 1528 முதல் 1538 வரை மலாக்காவில் தங்கி இருந்தார். மலாக்காவைப் பற்றி பற்றி விரிவாக எழுதி உள்ளார். அப்போது அங்கு வாழ்ந்த தமிழர்களைச் சிட்டி என்று பதிவு செய்து உள்ளார்.[4]

சிட்டி அல்லது செட்டி (Chitty) எனப்படுவோர் முற்காலத்தில் இருந்தே மலாக்காவில் வாழும் தமிழர் ஆவர். மலாக்கா சுல்தானிய காலத்தில், சிட்டிகள் தமிழ்நாட்டில் இருந்து மலாக்காவிற்கு வந்ததாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.[5]

மலாக்கா சிட்டிகள்

தொகு

மலாக்காவில் குடியேறியபின், மலாய் மக்களையும் சீனர்களையும், பிற இந்தோனேசிய, மலேசியத் தீவுகளில் வாழ்ந்த மக்களையும் திருமணம் செய்து கொண்டனர். மலாக்கா சுல்தானக காலத்திற்குப் பிறகு, மலாக்கா சிட்டிகள் தங்கள் தாயகத்துடனான தொடர்புகளை இழந்தனர்.[6]

தஞ்சோங் கிலிங் பகுதிகளில் வாழ்ந்த மலாக்கா சிட்டிகள், தற்சமயம் மலாக்கா நகரின் கஜா பேராங் சாலை மருங்கிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்த வம்சாவளியைச் சேர்ந்த பலர், சிங்கப்பூரிலும், மலாக்காவின் பிற பகுதிகளிலும் வேலை செய்கின்றனர்.[7]

பிற நகரங்கள்

தொகு

தஞ்சோங் கிலிங் நகரத்திற்கு மிக அருகில் இருக்கும் நகரங்கள் சுங்கை ஊடாங்; மஸ்ஜித் தானா; மலாக்கா மாநகரம் ஆகிய நகரங்களாகும்.

கட்டமைப்பு

தொகு
படம் பெயர் விளக்கம்
  தஞ்சோங் கிலிங் தீர்வையற்ற தொழில்துறை மண்டலம் தொழில்துறை மண்டலம்.[8]
  தஞ்சோங் கிலிங் மின் உற்பத்தி நிலையம் மலேசிய மின் நிலையங்களில் பழமையான நிலையம்.[9]

சுற்றுலா

தொகு
படம் பெயர் விளக்கம்
  அங் துவா கல்லறை வரலாற்று மாந்தர் அங் துவாவின் கல்லறை.[10][11]
  பந்தாய் புத்திரி முன்பு குண்டூர் கடற்கரை என்று அழைக்கப்பட்ட இளவரசியின் கடற்கரை.[12][13]

மேற்கோள்கள்

தொகு
  1. "Tanjung Kling in Malacca". malacca.ws.
  2. Leaves of the same tree By Leonard Y. Andaya
  3. "Toponymic Guidelines for Map and Other Editors for International Use" (PDF) (in ஆங்கிலம்). Malaysian National Committee on Geographical Names. 2017. p. 33. Archived from the original (PDF) on May 22, 2021. பார்க்கப்பட்ட நாள் May 29, 2021. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  4. Portuguese Vocables in Asiatic Languages By Sebastião Rodolfo Dalgado, Anthony X. Soares
  5. "South Indian traders arriving from the Coromandel Coast intermarried with local Malay and Chinese women, and established a Chetti Melaka community that survived the Malacca Sultanate and centuries of Portuguese, Dutch and British rule". www.roots.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 11 March 2022.
  6. "Meet the Chetti Melaka, or Peranakan Indians, striving to save their vanishing culture". CNA.
  7. "Chitty Village - Jalan Gajah Berang, Melaka - The Chitty Village in Jalan Gajah Berang, Melaka is home to a small community of Hindu Peranakans - descendants from Tamil traders who settled in Melaka over 500 years ago". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 11 March 2022.
  8. "The historic state and city : Melaka today". melaka.net.
  9. "Archived copy". Archived from the original on 2015-02-27. பார்க்கப்பட்ட நாள் 2015-06-15.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  10. "Hang Tuah's Mausoleum - GOGO Melaka - Malacca Tourist Guide". gogomelaka.com.
  11. "Jelajah ibu negeri - Pelancongan - Utusan Online". www.utusan.com.my. Archived from the original on 2015-03-27.
  12. Hamid, Rizanizam Abdul (14 September 2020). "Pantai Puteri boleh 'lenyap' dari peta Malaysia" (in ms). https://www.utusan.com.my/berita/2020/09/pantai-puteri-boleh-lenyap-dari-peta-malaysia/. 
  13. Chung, Nicholas (4 May 2021). "Malaccans push for federal action to stop major reclamation job". FMT இம் மூலத்தில் இருந்து 4 மே 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210504013258/https://www.freemalaysiatoday.com/category/nation/2021/05/04/malaccans-push-for-federal-action-to-stop-major-reclamation-job/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சோங்_கிலிங்&oldid=3910015" இலிருந்து மீள்விக்கப்பட்டது