பந்தாய் புத்திரி

பந்தாய் புத்திரி (மலாய் மொழி: Pantai Puteri அல்லது Pantai Bat'leth; ஆங்கிலம்: Puteri Beach அல்லது Bat'leth Beach; சீனம்: 布蒂里海滩) என்று அழைக்கப்படும் புத்திரி கடற்கரை; மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தின் தஞ்சோங் கிலிங் (Tanjung Kling) நகர்ப்புறத்தில் 2.1 கி.மீ. நீளத்திற்கு உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை கடற்கரைப் பகுதியாகும்.[1][2]

பந்தாய் புத்திரி
Puteri Beach
மலாக்கா
Map
ஆள்கூறுகள்: 2°13′50.6″N 102°08′50.6″E / 2.230722°N 102.147389°E / 2.230722; 102.147389
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
மாவட்டம்மத்திய மலாக்கா
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00

தஞ்சோங் கிலிங் நகரத்தின் பெயரை தஞ்சோங் கிலிங்கான் என்று மலாக்கா அரசாங்கம் அண்மையில் மாற்றம் செய்து உள்ளது.

இந்தக் கடற்கரை மலாக்கா நீரிணையை ஒட்டி இருப்பதால் செயற்கையாக ஒரு கடற்கரையை அமைக்க எளிதாக அமைக்க முடிந்தது. முன்பு இந்தக் கடற்கரை பேட்லெத் கடற்கரை (Bat'leth Beach) என்று அழைக்கப்பட்டது.

பொது தொகு

இது 1990-ஆம் ஆண்டுகளில் இருந்து மலாக்கா மாநில அரசால் (Malacca State Government) இந்த இடம் சுற்றுலா கடற்கரையாக (Resort Beach) உருவாக்கப்பட்டது. கடற்கரையைச் சுற்றிலும் மீன்பிடித்தல், முகாமிடுதல் போன்ற பல்வேறு கடல் சார்ந்த நடவடிக்கைகள் உள்ளன. தவிர இந்த இடத்தில் மீனவர்கள் தங்களின் படகுகளைப் பழுது பார்த்துக் கொள்கிறார்கள்; மீன்வலைகளைச் சரி செய்து கொள்கிறார்கள்.[3]

இரவுச் சந்தைகள், தங்கும் விடுதிகள், உணவுக் கடைகள் மற்றும் உணவகங்களையும் இந்த இடம் கொண்டுள்ளது. இங்குள்ள உணவுக் கடைகள் கடற்கரைக்கு ஏற்றவாறு; அதற்கு இணையாக சாலையோர வழிகளில் சரிசமமாக; சீராகக் கட்டப்பட்டு உள்ளன.[4]

பேட்லெத் கடற்கரை தொகு

இந்த இடம் கிளிங்கான் மக்களின் பாரம்பரிய போர்களின் மறுஉருவாக்கத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. முன்பு கிளிங்கான் மக்கள் (Klingon People) தங்களின் பேட்லெத் வாள்களுடன் (Bat'leth Blade) சம்பிராதய சடங்குச் சண்டைகளுக்காக (Ceremonial Duels) கடற்கரையைப் பயன்படுத்தியதாகவும்; அதனால் அதற்கு பேட்லெத் கடற்கரை என்று பெயர் வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கரையோர அரிப்புகள் தொகு

ஏப்ரல் 2021-இல் 100 மீட்டர் நீளத்திற்கு கரையோர அரிப்புகள் ஏற்பட்டன. கரையோரத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஒரு பாறைத் தளம் கட்டப்பட்டது.[5]

காட்சியகம் தொகு

மேற்கோள் தொகு

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தாய்_புத்திரி&oldid=3750903" இலிருந்து மீள்விக்கப்பட்டது