உண்டான் தீவு கலங்கரை விளக்கம்
உண்டான் தீவு கலங்கரை விளக்கம் (மலாய்: Rumah Api Pulau Undan; ஆங்கிலம்: Undan Island Lighthouse) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தில் மலாக்கா நீரிணையில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கம்.[1] மலாக்கா கடற்கரையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் மக்கள் வசிக்காத தீவில் உள்ளது.
அமைவிடம் | மலாக்கா மலேசியா |
---|---|
ஆள்கூற்று | 2°02′53″N 102°20′02″E / 2.04806°N 102.33389°E |
கட்டப்பட்டது | 1879 |
ஒளியூட்டப்பட்டது | 1880 |
கட்டுமானம் | கட்டுமான கோபுரம் |
கோபுர வடிவம் | மாடம் மற்றும் விளக்கு கொண்ட உருளை கோபுரம் |
குறியீடுகள்/அமைப்பு | வெள்ளை மற்றும் கருப்பு பட்டைகள் கொண்ட கோபுரம், வெள்ளை மாடத்தில் சிவப்புக் கூரை |
உயரம் | 15 மீட்டர்கள் (49 அடி) |
குவிய உயரம் | 53 மீட்டர்கள் (174 அடி) |
வீச்சு | 18 nmi (33 km; 21 mi) |
சிறப்பியல்புகள் | Fl(2) W 15s |
இந்த தீவு மலாக்கா மாநிலத்திற்குச் சொந்தமானது. இந்தச் சிறிய தீவில் நிரந்தரமான குடியிருப்பாளர்கள் எவரும் இல்லை. ஆனால் எப்போதும் ஒரு கலங்கரை விளக்கக் காவலரும் மற்றும் பராமரிப்பு ஊழியர்களும் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.
வரலாறு
தொகுஇந்தக் கலங்கரை விளக்கம், 1879-ஆம் ஆண்டு, இங்கிலாந்து, பர்மிங்காம் சான்ஸ் பிரதர்ஸ் (Chance Brothers and Company) எனும் நிறுவனத்தால் வடிவம் அமைக்கப்பட்டது. 1880-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
மலாக்கா நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தது. இந்தக் கலங்கரை விளக்கம் எண்கோணத்திலும்; மற்றும் உருளை வடிவத்திலும் உள்ளது.[2]
கூழைக்கடா கடல் பறவை
தொகுஉண்டான் தீவு, மலாக்கா நீரிணையில் உள்ள புலாவ் பெசார் தீவுக்குப் பின்னால் மறைந்துள்ளது. முந்தைய காலங்களில், பிரித்தானியர்களால் இந்தக் கலங்கரை விளக்கம் கட்டப் படுவதற்கு முன்பே, இந்தத் தீவு கடற்கொள்ளையர்களின் மையமாக அறியப்படுகிறது.[1]
உண்டான் தீவு என்ற பெயர் ஒரு காலத்தில் இந்தத் தீவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்த கூழைக்கடா கடல் பறவையால் வந்ததாகக் கூறப்படுகிறது. மலாய் மொழியில், "உண்டான்" என்றால் கூழைக்கடா பறவையைக் குறிக்கிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "The island of Pulau Undan is hidden behind the larger Pulau Besar in the Straits of Melaka". பார்க்கப்பட்ட நாள் 6 June 2022.
- ↑ Saiful Fazli Ramli (18 March 2018). "Restoration of Rumah Api Pulau Undan". Twitter. பார்க்கப்பட்ட நாள் 2018-08-15.