மலாக்கா தீவு
மலாக்கா தீவு (மலாய்: Pulau Melaka; ஆங்கிலம்: Malacca Island) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தில், மலாக்கா நீரிணையில் அமைந்து உள்ள ஒரு தீவு. இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட தீவாகும்.
உள்ளூர் பெயர்: Malacca Island | |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | மலாக்கா நீரிணை |
ஆள்கூறுகள் | 2°10′50″N 102°15′5″E / 2.18056°N 102.25139°E |
தீவுக்கூட்டம் | மலாக்கா; தீபகற்ப மலேசியா; மலேசியா |
பரப்பளவு | 1 km2 (0.39 sq mi) |
மலேசியாவின் தாலாம் நிறுவனத்தின் (Talam Corporation Berhad) துணை நிறுவனமான புலாவ் கெம்பார் (Pulau Kembar Sdn Bhd.) நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மாநகர் இருதீவுகள் மையம் (Twin Island City Centre) எனும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
பொது
தொகுஇந்த நீர்முனை மேம்பாட்டுத் திட்டமானது இரண்டு தீவுகளை மீட்டு எடுப்பதை உள்ளடக்கியது. மலாக்கா நகரின் கடற்கரையில் இருந்து சுமார் 0.5 கி.மீ. தொலைவில் 40 எக்டேர் மற்றும் 50 எக்டேர் பரப்பளவில் உள்ளது. 2002-ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றன.[1][2]
தீவின் தெற்கு கரையில் ஒரு பள்ளிவாசல்; கலங்கரை விளக்கம் போன்ற கோபுரத்துடன், கடலுக்கு மேலே நெடுவரிசையில் கட்டப்பட்டு உள்ளது. இதற்கு மலாக்கா நீரிணை பள்ளிவாசல் (Malacca Straits Mosque) என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
மேற்கோள்கள்
தொகுமேலும் காண்க
தொகு