பத்தாங் மலாக்கா தொடருந்து நிலையம்
பத்தாங் மலாக்கா தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Batang Melaka Railway Station; மலாய்: Stesen KTMB Batang Melaka) என்பது மலேசியா, மலாக்கா, ஜாசின் மாவட்டம், பத்தாங் மலாக்கா நகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இதன் வடக்கில் நெகிரி செம்பிலான்; கிழக்கில் ஜொகூர் மாநிலங்கள் உள்ளன. பத்தாங் மலாக்கா நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், பத்தாங் மலாக்கா நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது.
பத்தாங் மலாக்கா தொடருந்து நிலையம் | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | பத்தாங் மலாக்கா, ஜாசின் மாவட்டம், மலாக்கா, மலேசியா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 2°28′30″N 102°25′09″E / 2.47500°N 102.41917°E | |||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | |||||||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து நிறுவனம் (KTM) | |||||||||||||||
தடங்கள் | மலாயா மேற்கு கடற்கரை | |||||||||||||||
நடைமேடை | 2 தீவு நடைமேடை | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 1906 | |||||||||||||||
மறுநிர்மாணம் | 2013 | |||||||||||||||
மின்சாரமயம் | 2014 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
மலாக்கா மாநிலத்தில் உள்ள இரண்டு தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்; மற்றொன்று புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம். இவை இரண்டும்தான் மலாக்கா மாநிலத்திற்கு சேவை செய்யும் நிலையங்கள் ஆகும்.
பொது
தொகுசிரம்பான்-கிம்மாஸ் மின்மயமாக்கப்பட்ட இரட்டை கண்காணிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு புதிய நிலையம் கட்டப்பட்டது;[1] மற்றும் 7 பிப்ரவரி 2014 அன்று செயல்படத் தொடங்கியது. மலாயா கடற்கரை மேற்குத் தொடருந்து வழித்தடத்தில் இரட்டைப் பாதை மற்றும் ஒற்றைப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டமே மலேசிய மின்மயமாக்கல் திட்டம் ஆகும்.[2]
பழைய பத்தாங் மலாக்கா நிலையம் மே 2012-இல் மூடப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.[3] இந்த நிலையம் 2015 முதல் 2021 வரை கேடிஎம் இண்டர்சிட்டி சேவையின் தென் மண்டல விரைவுத் தொடருந்து (Ekspres Selatan) துணைச் சேவைகளுக்கான நிறுத்தமாக இருந்தது.
தென் மண்டல விரைவுத் தொடருந்து துணைச்சேவை
தொகு10 அக்டோபர் 2015 மற்றும் சூன் 2016-க்கு இடையில், மலாயா தொடருந்து நிறுவனம், இந்த நிலையத்தின் வழியாக சிரம்பான் வழித்தடத்தின் கீழ் கொமுட்டர் தொடருந்துகளை இயக்கி வந்தது. சிரம்பான் மற்றும் கிம்மாஸ் நகரங்களுக்கு இடையே தென் மண்டல விரைவுத் தொடருந்து துணைச்சேவைக்கான நிறுத்தமாகவும் இந்த நிலையம் விளங்கியது.
சூன் 2016-க்குப் பின்னர், தென் மண்டல விரைவுத் தொடருந்து துணைச்சேவை புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம் வரை குறைக்கப்பட்டு, இந்த நிலையத்தில் நிறுத்தப்பட்டது.[4]
சேவைகள்
தொகு- ETS Gold Train No. 9420 பாடாங் பெசார் - கிம்மாஸ்
- ETS Gold Train No. 9425 பாடாங் பெசார் - கிம்மாஸ்
- ETS Premium Train No. 9204 பட்டர்வொர்த் - கிம்மாஸ்
- ETS Premium Train No. 9371 பட்டர்வொர்த் - கிம்மாஸ்[5]
மேற்சான்றுகள்
தொகு- ↑ "KTMB extended its electric train service to Rembau on 30 August this year, providing a faster and more comfortable link up to KL and beyond as far as Rawang". Great Malaysian Railway Journeys (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 April 2024.
- ↑ "It is currently in construction as part of the double tracking and electrification project between Seremban and Gemas, both the Senawang and Sungai Gadut stations are located along the 98km Seremban-Gemas rail route". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 6 April 2024.
- ↑ "Stesen Batang Melaka operasi semula". Archived from the original on 2015-05-29. பார்க்கப்பட்ட நாள் 2015-05-29.
- ↑ "KTMB introduces new commuter service from Seremban to Gemas". The Malaysian Insider. Archived from the original on 4 October 2015. பார்க்கப்பட்ட நாள் 3 October 2015.
- ↑ "KTM Train Schedule".
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Batang Melaka Railway Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.