சுங்கை சிப்புட் தொடருந்து நிலையம்
சுங்கை சிப்புட் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Sungai Siput Railway Station மலாய்: Stesen Keretapi Sungai Siput); சீனம்: 和丰火车站) என்பது தீபகற்ப மலேசியா, பேராக், கோலாகங்சார் மாவட்டம், சுங்கை சிப்புட் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.
சுங்கை சிப்புட் Sungai Siput | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுங்கை சிப்புட் தொடருந்து நிலையம் (2022) | ||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||
அமைவிடம் | சுங்கை சிப்புட் பேராக் மலேசியா | |||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 4°49′12″N 101°4′12″E / 4.82000°N 101.07000°E | |||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | |||||||||||||||||||||||||
தடங்கள் | 1 பாடாங் பெசார் வழித்தடம் மலாயா மேற்கு கடற்கரை ETS கேடிஎம் இடிஎஸ் | |||||||||||||||||||||||||
நடைமேடை | 2 பக்க நடை மேடைகள் | |||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | |||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் | |||||||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | |||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2013 | |||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 2015 | |||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
|
இந்த நிலையம் சுங்கை சிப்புட் நகரத்திற்கும்; மற்றும் கோலாகங்சார் மாவட்டத்தின் சுற்றுப்புறங்களுக்கும் சேவை செய்கிறது. மலேசியாவில் நீண்ட கால சேவையில் இருந்துவரும் நிலையங்களில் சுங்கை சிப்புட் நிலையமும் ஒன்றாகும்; வரலாறு படைத்த நிலையம் எனவும் அறியப்படுகிறது.
வெள்ளி மாநிலம் என அழைக்கப்படும் பேராக் மாநிலத்தில்; ‘சங்கு நதி’ நகரம் என போற்றப்படும் சுங்கை சிப்புட்டில் மிகுதியான அளவில் தமிழர்கள் குடிபெயர்வதற்கு இந்த நிலையம் பெரும் பங்காற்றி உள்ளது. 1890-ஆம் ஆண்டுகளில் பினாங்கு துறைமுகத்தில் தரையிறங்கிய தமிழர்களில் பலர் சுங்கை சிப்புட் நகரில் குடி அமர்ந்தனர்.
பொது
தொகுசுங்கை சிப்புட் நிலையம் மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தில் உள்ளது. இந்த நிலையம்; கேடிஎம் இடிஎஸ் சேவைகளுக்கு ஒரு நிறுத்தமாகும்.[1]
ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் (Ipoh-Padang Besar Electrification and Double-Tracking Project) ஒரு பகுதியாக 2015-ஆம் ஆண்டில், தற்போதைய சுங்கை சிப்புட் தொடருந்து நிலையம் சுங்கை சிப்புட் நகரத்தின் மையப் பகுதியில் கட்டப்பட்டது.
கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை
தொகுகேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் இரண்டு சேவைகளும் கிம்மாஸ் - பாடாங் பெசார் மற்றும் ஈப்போ - பாடாங் பெசார் நிலையங்களுக்கு இடையே சேவையாற்றுகின்றன.
கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை 11 சூலை 2015 அன்று தொடங்கியது. ஈப்போ - பாடாங் பெசார் சேவை 10சூலை 2015 அன்று தொடங்கியது. [2][3]
அதே வேளையில், புக்கிட் மெர்தாஜாம், பாடாங் ரெங்காஸ் நிலையங்களை இணைக்கும் 1 பாடாங் ரெங்காஸ் வழித்தடம் (KTM Komuter Padang Rengas Line) 10 ஜூலை 2015 அன்று திறக்கப்பட்டது.
சுங்கை சிப்புட் நகரம்
தொகுமலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள நகரம். இந்த நகருக்கு ’சங்கு நதி’ எனும் அழகிய தமிழ்ப் பெயரும் உண்டு. சுங்கை சிப்புட் துணை மாவட்டத்தின் பெயரும் சுங்கை சிப்புட். இந்தத் துணை மாவட்டம் கோலாகங்சார் மாவட்டத்தில் உள்ளது.
சுங்கை சிப்புட் நகரம் மலேசியாவில் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் நகரங்களில் ஒன்றாகும். இந்த நகரம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். மலேசிய இந்தியத் தலைவர்களில் சிலரின் அரசியல் வாழ்க்கையை நிர்ணயம் செய்த நகரம் என்றும் இதற்கு ஓர் அடைமொழி உண்டு. மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதியை மலேசிய இந்தியர்கள் தக்க வைத்து வருகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "There are currently 11 direct train services a day from Kuala Lumpur Sentral Station to Kuala Kangsar". 4 August 2018. பார்க்கப்பட்ட நாள் 23 July 2023.
- ↑ "Padang Rengas Railway Station (GPS: 4.77739, 100.85816) is a train station in Padang Rengas, Perak. The station is located between the Taiping Railway Station in the northwest and the Kuala Kangsar Railway Station in the east. The KTM Electric Train Service serves this station". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.
- ↑ "Trains from Padang Rengas to Ipoh". 5 January 2023. பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.