பத்து காஜா தொடருந்து நிலையம்


பத்து காஜா தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Batu Gajah Railway Station மலாய்: Stesen Keretapi Batu Gajah); சீனம்: 华都牙也火车站) என்பது மலேசியா, பேராக், பத்து காஜா நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். 2008-ஆம் ஆண்டில், மலேசிய போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஸ்ரீ சான் காங் சோய் (Dato’ Sri Chan Kong Choy) அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.[1]


பத்து காஜா தொடருந்து நிலையம்
Batu Gajah Railway Station
பத்து காஜா தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்30100, பத்து காஜா, மலேசியா
ஆள்கூறுகள்4°28′16″N 101°02′35″E / 4.47111°N 101.04306°E / 4.47111; 101.04306
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
நடைமேடை1 நடை மேடை; 1 தீவு
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
தரிப்பிடம்KTMB நிறுத்துமிடம்
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access
வரலாறு
திறக்கப்பட்டது1893
மறுநிர்மாணம்2007
மின்சாரமயம்2007
சேவைகள்
முந்தைய நிலையம்   பத்து காஜா   அடுத்த நிலையம்
ஈப்போ
 
  Gold  
  கம்பார் >>> கோலாலம்பூர்
ஈப்போ
 
  Silver  
  கம்பார் >>> கோலாலம்பூர்
ஈப்போ
 
  Platinum  
  கம்பார் >>> கோலாலம்பூர்
ஈப்போ
 
  Platinum  
  கம்பார் >>> கோலாலம்பூர்
ஈப்போ
 
  Gold  
  கம்பார் >>> கிம்மாஸ்
ஈப்போ
 
  Gold  
  கம்பார் >>> கிம்மாஸ்
அமைவிடம்
Map
பத்து காஜா தொடருந்து நிலையம்

இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் இடிஎஸ் ETS தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் பத்து காஜா நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் மற்றும் சரக்குத் தொடருந்துகளைக் கையாளும் முனையமாகவும் செயல்படுகிறது.[2]

பொது தொகு

பத்து காஜா நகரின் பூசிங் சாலையில் இருந்த பழைய நிலையம் 19 சூலை 2005-இல் மூடப்பட்டது. அத்துடன் அந்தப் பழைய ஒற்றைத் தள நிலையம் அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டது. பத்து காஜா நகரத்தில் உள்ள கம்போங் பீசாங் புறநகரில் இந்த நிலையம் அமைந்துள்ளது.[3]

இந்த நிலையத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் மலாயா தொடருந்து நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்குகள் உள்ளன.

பெங்காலான் குடியிருப்பு தொகு

இந்த நிலையம் பத்து காஜாவில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமின்றி, ஈப்போ நகரப் பகுதிகளில் உள்ள தஞ்சோங் துவாலாங், மாலிம் நாவார், லகாட் மற்றும் பூசிங் போன்ற சுற்றுப்புறப் பகுதிகளுக்கும்; பெங்காலான் குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கும் சேவை செய்கிறது.

ஸ்ரீ இசுகந்தர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் பயணிகளும்; பெட்ரோனாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக (Universiti Teknologi Petronas) மாணவர்களும் இந்த நிலையத்திற்கு வருகிறார்கள்.

கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை தொகு

கேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் இரண்டு சேவைகளும் கிம்மாஸ் - பாடாங் பெசார் மற்றும் ஈப்போ - பாடாங் பெசார் நிலையங்களுக்கு இடையே சேவையாற்றுகின்றன.

கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை 11 சூலை 2015 அன்று தொடங்கியது. ஈப்போ - பாடாங் பெசார் சேவை 10சூலை 2015 அன்று தொடங்கியது. [4][5]

அதே வேளையில், புக்கிட் மெர்தாஜாம், பாடாங் ரெங்காஸ் நிலையங்களை இணைக்கும்  1  பாடாங் ரெங்காஸ் வழித்தடம் (KTM Komuter Padang Rengas Line) 10 ஜூலை 2015 அன்று திறக்கப்பட்டது.

பத்து காஜா நகரம் தொகு

பத்து காஜா நகரம் (Batu Gajah), ஈப்போ மாநகரத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சோங் துவாலாங், துரோனோ, கிளேடாங், பூசிங், சிம்பாங் பூலாய் போன்ற இடங்களுக்கு மிக அருகாமையில் உள்ளது.

பத்து காஜா எனும் சொல் ஒரு மலாய்ச் சொல் ஆகும். பத்து என்றால் ’கல்’. காஜா என்றால் ’யானை’. யானைக் கல் என்பதே அதன் பொருள் ஆகும். முன்பு காலத்தில். கிந்தா ஆற்றின் மருங்கில் இரு பெரும் கல் பாறைகள் இருந்தன. யானைகளைப் போல வடிவம் கொண்ட அந்தக் கல் பாறைகள் உள்ளூர் கிராம மக்களால் செதுக்கப் பட்டவை.

பத்து காஜா ஈயச் சுரங்கங்கள் தொகு

பத்து காஜா ஈயச் சுரங்கங்களுக்குப் பெயர் பெற்ற இடமாகும். சீனாவில் இருந்து இங்கு வந்து குடியேறிய சீனர்கள், ஈயச் சுரங்கங்களில் வேலை செய்தனர். அதனால், இன்றும் இந்த நகரில் அதிகமான சீனர்களைக் காண முடிகின்றது. சங்காட் எனும் கிராமத்தில் ஓர் இந்தியர்க் குடியிருப்பு பகுதியும் உள்ளது.

இங்கு அதிகமான இந்தியர்களும் சீக்கியர்களும் வாழ்கின்றனர். பேராக் மாநிலத்தில் மிகவும் பழைமை வாய்ந்த சீக்கியர் கோயில் இங்குதான் உள்ளது.

பத்து காஜா பழைய நிலையம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "ETS Train From Kuala Lumpur (KL) To Batu Gajah - KTMB". www.ktmb.com.my. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.
  2. "The KTM Batu Gajah Railway Station (stesen keretapi) in the state of Perak, Malaysia is located along the KTMB Malaysian Railways West Coast Line (North - South Line) and has many departures a day on the KL Sentral to Ipoh ETS route, as well as long distance ETS trains on the Panang Besar (Perlis) and Butterworth (Penang) routes". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.
  3. "The new station replaces an old station at Jalan Pusing in Batu Gajah town which was closed beginning 19 July 2005 when all services moved to the new station". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.
  4. "Padang Rengas Railway Station (GPS: 4.77739, 100.85816) is a train station in Padang Rengas, Perak. The station is located between the Taiping Railway Station in the northwest and the Kuala Kangsar Railway Station in the east. The KTM Electric Train Service serves this station". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.
  5. "Trains from Padang Rengas to Ipoh". 5 January 2023. பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு