ரேபிட் பினாங்கு

பினாங்கு மாநில அரசாங்கம் நடத்தும் பேருந்து நிறுவனம்

ரேபிட் பினாங்கு (மலாய்: Rapid Penang அல்லது Rapid Penang Sdn. Bhd.; ஆங்கிலம்: Rapid Penang அல்லது rapidPenang); என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், பினாங்கு மாநில அரசாங்கம் நடத்தும் பேருந்து நிறுவனம் ஆகும். 2007-ஆம் ஆண்டில் பிரசரானா மலேசியா (Prasarana Malaysia) எனும் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ரேபிட் பினாங்கு பேருந்து நிறுவனம் உருவாக்கப்பட்டது.

ரேபிட் பினாங்கு
Rapid Penang
வெல்ட் குவே பேருந்து முனையம் A, ஜார்ஜ் டவுன், பினாங்கு
பொது தகவல்
உரிமையாளர்பிரசரானா மலேசியா
(Prasarana Malaysia)
பயண வகைஇடை வழி பேருந்து
தடங்களின் எண்ணிக்கை56
ஆண்டு பயணிகள்30,309,000 (2014)[1]
தலைமையகங்கள்ஜார்ஜ் டவுன், பினாங்கு, மலேசியா
இணையதளம்Rapid Penang
செயற்பாடு
தொடக்கம்31 சூலை 2007
நடத்துநர்(கள்)ரேபிட் பேருந்து நிறுவனம்
(Rapid Bus Sdn Bhd)
வாகனங்களின் எண்ணிக்கை406 [2]

இன்றுவரை பினாங்கு மாநிலத்திற்குள் முக்கிய பொதுப் போக்குவரத்து நடத்துனராக உள்ளது. பினாங்கு பெருநகரப் பகுதி (Greater Penang Conurbation) பயணிகளுக்கு மட்டும் அல்லாமல்; பேராக் மற்றும் கெடா மாநிலங்களின் பயணிகளுக்கும், இந்தப் போக்குவரத்து வலையமைப்பு சேவை செய்கின்றது.[3]

பொது

தொகு

ரேபிட் பினாங்கு என்பது, நகர்ப்புற பொதுப் போக்குவரத்தை நிர்வகிப்பதற்கான ஒரு பேருந்து நிறுவனம்; தவிர மலேசிய அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமான பிரசரானா மலேசியாவால் நிறுவப்பட்ட இரண்டாவது பொது போக்குவரத்து நிறுவனமும் ஆகும்.

முதலாவதாக 2004-ஆம் ஆண்டில் ரேபிட் கேஎல் (Rapid KL) நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் இப்போது கோலாலம்பூர் மற்றும் பெரும் கிள்ளான் பள்ளத்தாக்கு (Greater Klang Valley) பகுதிகளில் இடைவழிப் பேருந்து (Transit Bus) சேவை, இலகு விரைவு தொடருந்து (Light Rapid Transit - LRT) சேவை மற்றும் ஒற்றைத் தண்டூர்தி (Monorail) சேவைகளை உள்ளடக்கியது.

ரேபிட் கேஎல் நிறுவனத்தைப் போல ரேபிட் பினாங்கு பேருந்து நிறுவனமும்; ரேபிட் பேருந்து நிறுவனம் (Rapid Bus Sdn Bhd) எனும் நிறுவன நிர்வாகத்தின் கீழ் உள்ளது.[4]

வரலாறு

தொகு
 
வெல்ட் குவே பேருந்து முனையத்தில் பேருந்து வழித்தடங்களின் அறிவிப்பு.

2007-ஆம் ஆண்டுக்கு முன்னர், பினாங்கு மாநிலத்தின் பொதுப் பேருந்து சேவையானது துண்டு பட்டு ஒழுங்கற்றதாக இருந்தது. பினாங்கு உள்ளூர் பொதுப் பேருந்து நடத்துநர்கள் பலர் நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டனர்.[5]

பினாங்கில் உள்ள மிகப் பெரிய பொதுப் பேருந்து நிறுவனங்களில் ஒன்றான எல்லோ பேருந்து நிறுவனம் (Yellow Bus Company), 2004-ஆம் ஆண்டு திடீரென தன் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது. இந்த நிறுவனம் 58 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது.[6]

ஆயிரக் கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர். அதனால், இது ஒரு பெரிய பிரச்சினையானது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு முக்கியமான கட்டத்திற்குள் பினாங்கு பொதுப் போகுவரத்துத் துறை தள்ளப்பட்டது.[7][8]

பினாங்கு மாநிலத்தில் மறுசீரமைப்பு

தொகு

அப்போதைய பினாங்கு மாநில முதலமைச்சர் கோ சு கூன் (Koh Tsu Koon), பினாங்கு மாநிலத்தில் நலிவடைந்த நிலையில் இருந்த பேருந்து வலையமைப்பைச் சீரமைக்க முயற்சிகள் செய்தார். 2006-இல் பினாங்கில் புதுப்பிக்கப்பட்ட வழித்தடங்களில் (Trunk Routes), பெரிய பேருந்துகள் இயக்கப்பட்டன. அதே நேரத்தில் பெரிய வழித்தடங்களில் இருந்து சிறிய வழித்தடங்களுக்குள் சிற்றுந்துகள் (Mini Buses) பயணித்தன.

இருப்பினும், மறுசீரமைப்பு நிலைமை சிறப்பாக அமையவில்லை. கோலாலம்பூரில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பொதுப் போக்குவரத்து மறுசீரமைப்பைப் போன்று பினாங்கு மாநிலத்திலும் மறுசீரமைப்புச் செய்யப்பட நடுவண் அரசாங்கத்தின் உதவியை நாடியது.[9][10] ஏற்கனவே அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட ரேபிட் கேஎல் போன்று ஒரு புதிய அணுகுமுறையை கொண்டு வருவதே சிறப்பு என பினாங்கு அரசாங்கம் கருதியது. அதிக பேருந்துகளை வாங்குவதை விட அதுவே சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் உணரப்பட்டது. [11]

மத்திய அரசு ஒப்புதல்

தொகு

2007-இல், கோலாலம்பூர் மாநகரில் இயங்கும் ரேபிட் கேஎல் போன்ற ஒரு பேருந்து சேவையை பினாங்கு மாநிலத்திலும் இயக்குவதற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டதாக முதலமைச்சர் கோ சு கூன் அறிவித்தார்.[12][13]

ரேபிட் பினாங்கு 31 ஜூலை 2007-இல் முறைப்படி தன் நடவடிக்கைகளைத் தொடங்கியது.[11][12]

மேற்கோள்கள்

தொகு
  1. kilzacmaster, the. "Press Statement – An accurate portrayal of Penang bus rides" (in en-gb) இம் மூலத்தில் இருந்து 20 மார்ச் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170320052332/http://penanginstitute.org/v3/resources/articles/from-ceos-desk/715-press-statement-an-accurate-portrayal-of-penang-bus-rides. 
  2. "Firm adds 30 more double-decker buses to its fleet - Community | The Star Online". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 19 March 2017.
  3. "Rapid Penang | www.rapidpg.com.my". www.rapidpg.com.my. பார்க்கப்பட்ட நாள் 19 March 2017.
  4. "Rapid Penang rolls on under Rapid Bus". 1 July 2013. http://www.themalaymailonline.com/malaysia/article/rapid-penang-rolls-on-under-rapid-bus. 
  5. Singh, Sharanjit (20 February 2007), "Rapid KL to manage Penang buses", New Straits Times, p. 22
  6. Ng, Su-Ann (2 January 2004), "End of the road for Yellow Bus after 58 years", The Star (Malaysia), p. 19
  7. "Rapid answer to transport woes - Nation | The Star Online". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 19 March 2017.
  8. Dielenberg, Priscilla; Tan, Jeremy. "Bring the bus back to the airport Rapid Penang urged to revive abandoned service - Community | The Star Online". பார்க்கப்பட்ட நாள் 19 March 2017.
  9. Yeng, Ai Chun (4 July 2006), "Bus system in a mess", The Star, p. 3
  10. "KL bus system for Penang", The Star (Malaysia), p. 28, 24 August 2006
  11. 11.0 11.1 "RapidPenang – The First Step Towards Integrated Public Transportation System in Penang". Penang Economic Monthly. http://penanginstitute.org/v3/files/econ_brief/2007/EconBrief2007-10.pdf. பார்த்த நாள்: 2022-10-07. 
  12. Singh, Sharanjit (20 February 2007), "RapidKL to manage Penang buses", New Straits Times, p. 22

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேபிட்_பினாங்கு&oldid=4143713" இலிருந்து மீள்விக்கப்பட்டது