பாகான் டாலாம்

பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

பாகான் டாலாம் (ஆங்கிலம்: Bagan Dalam; (மலாய் Bagan Dalam; சீனம்: 峇眼达南; ஜாவி: باڬن دالم) என்பது மலேசியா, பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டத்தில்; அமைந்துள்ள நகரம்.

பாகான் டாலாம்
நகரம்
பினாங்கு
Map
ஆள்கூறுகள்: 5°23′0″N 100°22′0″E / 5.38333°N 100.36667°E / 5.38333; 100.36667
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்வட செபராங் பிறை மாவட்டம்
அரசு
 • உள்ளூராட்சிசெபராங் பிறை நகராண்மைக் கழகம்
 • பாகான் நாடாளுமன்றத் தொகுதிலிம் குவான் எங் (பாக்காத்தான் ஹரப்பான்-ஜனநாயக செயல் கட்சி)
 • சட்டமன்ற உறுப்பினர்சதீஸ் முனியாண்டி (பாக்காத்தான் ஹரப்பான்-ஜனநாயக செயல் கட்சி)
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாட்டில் இல்லை (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு12100
மலேசியத் தொலைபேசி எண்கள்+604
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்P
இணையதளம்http://www.mbsp.gov.my

நகரப் பகுதியின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமமான கம்போங் பாகான் டாலாம் எனும் கிராமத்தின் நினைவாக இந்த இடத்திற்குப் பெயரிடப்பட்டது. பாகான் டாலாம் என்றால் உள் படகுத் துறை (மலாய்: Dermaga Dalam) என்று பொருள். பட்டர்வொர்த் துறைமுகத்திற்கு (Butterworth Wharves) அருகில் அமைந்துள்ளது.[1]

பொது தொகு

செபராங் பிறை மாநிலப் பகுதியில் உள்ள பிறை (பினாங்கு) எனும் பெரிய தொழில்துறை பகுதியுடன் பாகான் டாலாம் நகரம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நகரை பிறை ஆறு கடந்து செல்கிறது.

இந்த ஆற்றின் மீது, பிறை ஆற்றுப் பாலம் (Prai River Bridge); மற்றும் பழைய துங்கு அப்துல் ரகுமான் பாலம் (Tunku Abdul Rahman Bridge); ஆகிய இரு பாலங்கள் அமைந்துள்ளன.

பட்டர்வொர்த் துறைமுகம் தொகு

பாகான் டாலாம் நகரம் வடக்கு-தெற்கு விரைவுச்சாலைக்கு அருகில் உள்ளது. பட்டர்வொர்த் துறைமுகத்துடன் இணைக்கும் சாலைகளும் உள்ளன

பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகரில் இருந்து 25 கி.மீ.; பட்டர்வொர்த் நகரில் இருந்து 11 கி.மீ. தொலைவில்உள்ளது.

மக்கள் தொகையியல் தொகு

கீழ்க்காணும் புள்ளிவிவரங்கள், 2010-ஆம் ஆண்டு, மலேசியாவின் புள்ளியியல் துறையால் நடத்தப்பட்ட தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப் படுகிறது.[2]

இனக்குழுக்கள்
இனம் விழுக்காடு
மலாய்க்காரர்கள் 25%
சீனர்கள் 51%
இந்தியர்கள் 24%
மொத்தம் 100%

மேற்கோள்கள் தொகு

  1. "Bagan Dalam probably got its name from piers along the Prai River. These are "inland piers" compared to those jutting out into the open sea at Bagan Luar. Bagan Dalam is bordered by Jalan Chain Ferry to the north, the Prai River to the south and the sea to the west. It is the area north of the Prai River from the town of Prai". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 August 2022.
  2. "Bagan Dalam". Archived from the original on 2017-06-13. பார்க்கப்பட்ட நாள் 2022-08-10.

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகான்_டாலாம்&oldid=3738308" இலிருந்து மீள்விக்கப்பட்டது