ரிச்சர்டு வெல்லசுலி

ரிச்சர்டு கூலி வெல்லஸ்லி (Richard Colley Wesley, 1st Marquess Wellesley) (20 சூன் 1760 – 26 செப்டம்பர் 1842) அயர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியங்களின் அரசியல்வாதியும், காலனித்துவ நிர்வாகியும் ஆவார். வெல்லஸ்லி 1798 முதல் 1805 முடிய பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராகவும், 1809 முதல் 1812 முடிய ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், இறுதியாக 1821 முதல் 1828 முடிய அயர்லாந்தின் தலைமை ஆளுநராகவும் பணியாற்றியவர்.

ரிச்சர்டு வெல்லஸ்லி
Richard Wellesley 2.JPG
அயர்லாந்தின் தலைமை ஆளுநர்
பதவியில்
8 டிசம்பர் 1821 – 27 பிப்ரவரி 1828
அரசர் நான்காம் ஜார்ஜ்
பிரதமர் ராபர்ட் ஜென்கின்சன்
ஜார்ஜ் கானிங்
பிரடெரிக் ஜான் ராபின்சன்
முன்னவர் தால்போல்ட் பிரபு
பின்வந்தவர் ஹென்றி பெகட்
பதவியில்
12 செப்டம்பர் 1833 – நவம்பர் 1834
அரசர் நான்காம் வில்லியம்
பிரதமர் சார்லஸ் கிரே
முன்னவர் ஹென்றி பெகட்
பின்வந்தவர் தாமஸ் ஹமில்டன்
வெளியுறவுத் துறை செயலர்
பதவியில்
6 டிசம்பர் 1809 – 4 மார்ச் 1812
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ்
பிரதமர் ஸ்பென்சர் பெர்செவா
முன்னவர் ஹென்றி பதர்ஸ்ட்
பின்வந்தவர் ராபர்ட் ஸ்டூவர்ட்
இந்தியத் தலைமை ஆளுநர், வில்லியம் கோட்டை
பதவியில்
18 மே 1798 – 30 சூலை 1805
அரசர் மன்னர் மூன்றாம் ஜார்ஜ்
பிரதமர் வில்லியம் பிட் (இளையவர்)
ஹென்றி அடிங்டன்
முன்னவர் அலூர்டு கிளார்க்
(தற்காலிகம்)
பின்வந்தவர் காரன்வாலிஸ்
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 20, 1760(1760-06-20)
டங்கன் மாளிகை, மீத் கவுண்டி
இறப்பு 26 செப்டம்பர் 1842(1842-09-26) (அகவை 82)
லண்டன்
தேசியம் அயர்லாந்து
அரசியல் கட்சி தோரிஸ் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) (1) யேசிந்தியே காப்பிரியல் ரோலாண்ட்
(1766–1816)
(2) மேரியான்னி காட்டன் (d. 1853)
படித்த கல்வி நிறுவனங்கள் கிறிஸ்ட் சர்ச் கல்லூரி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

இவரும் இவரது சகோதரரும் சேர்ந்து இந்தியாவை ஆண்ட ஏழே ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் பரப்பை இரு மடங்காக்கினார். அது வரை காரன் வாலீஸ் போன்றவர்கள் கடைபிடித்து வந்த தலையிடா கொள்கையினை புறந்தள்ளிவிட்டு, அற்ப காரணங்களுக்கும் தலையிடலாம் என்ற புதிய கொள்கையை உருவாக்கி அதன் படி நடந்தார் . இவரது நாடு பிடிக்கும் ஆதிக்க கொள்கைகளை இங்கிலாந்தின் ஆதிக்க குழுவினர் ஆதரிக்காமல் அவரை இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்க எண்ணினர்.இதற்கு முன்னரே வெல்லெஸ்லி தாமே கவர்னர் ஜெனரல் பதவியை துறந்தார்

பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராகதொகு

வெல்லஸ்லி பிரித்தானிய இந்தியாவின், வில்லியம் கோட்டையில் 1798 முதல் 1805 முடிய தலைமை ஆளுநராக இருந்தவர்.

தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட, பிரான்சு கம்பெனியிடம் திப்பு சுல்தான், ஒப்பந்தம் செய்து கொண்டதை அறிந்த வெல்லஸ்லி, 1799ல் ஆங்கிலேயப் படைகளை அனுப்பி முதலில் திப்புசுல்தானைப் போரில் கொன்று பின்னர் ஸ்ரீரங்கப்பட்டணத்தைப் கைப்பற்றினார். பின்னர் நடந்த வந்தவாசி போரில் ஆங்கிலேயர்கள், பிரஞ்சுப் படைகளையும், ஆற்காடு நவாப் படைகளையும் வென்று தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களை கைப்பற்றினர்.

1803ல் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் வென்ற ஆங்கிலேயர்கள், மராத்தியப் பேரரசின் கட்டக், பலாசோர், மேற்கு மிட்னாபூர் மற்றும் கிழக்கு மிட்னாபூர் மாவட்டப் பகுதிகளை கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகள் கைப்பற்றியது.

30 திசம்பர் 1803இல் செய்து கொண்ட வசாய் ஒப்பந்தப்படி, குவாலியரின் தௌலத் சிந்தியா, குர்குவான், ரோத்தக், ஆக்ரா, புந்தேல்கண்ட், பரூச், அகமதாபாத் மற்றும் குஜராத்தின் சில பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியிடம் இழந்தது.

24 திசம்பர் 1805இல் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இந்தூர் மன்னர் யஷ்வந்த்ராவ் ஹோல்கர், கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆண்டுதோறும் கப்பத் தொகை செலுத்திக் கொண்டு, கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்குட்பட்டு, தன்னுடைய அரசை தக்க வைத்துக் கொண்டார்.

துணைப்படைத் திட்டம்தொகு

வெல்லெஸ்லிக்கு முந்தைய ஆட்சியாளர்கள்கூட அயோத்தி நவாப், ஹைதராபாத் நிசாம் போன்ற இந்திய அரசர்களுடன் ஒப்பந்தங்களை செய்து கொண்டனர். இந்திய அரசுகளை பாதுகாப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் படைகளுக்கு ஆகும் செலவினங்களை ஈடுகட்ட அந்தந்த ஆட்சியாளர்களிடமிருந்து உதவித்தொகையையும் அவர்கள் பெற்றனர். இவ்வாறு ஏற்கனவே நடைமுறையிலிருந்த வழக்கத்தை வெல்லெஸ்லி தமது திட்டமாக விரிவுபடுத்தினார். இருப்பினும், அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதில்தான் அவரது தனித்தன்மை வெளிப்பட்டது.

துணைப்படைத் திட்டத்தின் சிறப்புக் கூறுகள் / ஷரத்துகள் பின்வருமாறு

1 பிரிட்டிஷாருடன் துணைப்படை ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பும் இந்திய அரசர் தனது ஆட்சிப்பகுதியில் பிரிட்டிஷ் படையை வைத்து பராமரிக்க வேண்டும். இப்படைக்கு பிரிட்டிஷ் அதிகாரி தலைமை வகிப்பார். அத்தகைய இந்திய அரசு 'பாதுகாக்கப்பட்ட அரசு' என்று அழைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு 'தலைமை அரசு' என்று குறிக்கப்படும். அயல் நாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் உள்நாட்டு அமைதி ஆகியவற்றை பாதுகாப்பது பிரிட்டிஷாரின் கடமையாகும். படைகளுக்கு ஆகும் செலவினை சரிகட்ட 'பாதுகாக்கப்பட்ட அரசு' ஒரு தொகை அல்லது ஒரு நிலப்பகுதியை பிரிட்டிஷாருக்கு கொடுக்க வேண்டும். 2. பாதுகாக்கப்பட்ட அரசு ஆங்கிலேயர் தவிர வேறு ஐரோப்பிய அரசுகளுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும். குறிப்பாக பிரஞ்சுக்காரர்களுடன் உறவு முற்றிலும் தடை செய்யப்பட்டது. மேலும் பிரிட்டிஷாரின் அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட அரசு வேறு இந்திய அரசுகளுடனும் அரசியல் தொடர்பு வைக்கவும் தடை விதிக்கப்பட்டது.

நான்காம் ஆங்கிலேய-மைசூர் போர் (1799தொகு

நான்காம் மைசூர் போருக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். பிரிட்டிஷாரிடம் அடைந்த படுதோல்விக்கும், தன்மீது திணிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கும் பழிவாங்குவதற்கான தருணத்தை திப்புசுல்தான் எதிர்நோக்கி இருந்தார். மேலும், மைசூரை ஒரு வலிமைவாய்ந்த அரசாக மாற்றவும் அவர் தீர்மானித்தார். பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகப் போரிட பல்வேறு உதவிகளை திப்பு நாடினார். பிரான்சு, அரேபியா, துருக்கி போன்ற நாடுகளின் உதவியைப் பெற முயற்சிகள் மேற்கொண்டார். 1798 ஜூலையில் பிரஞ்சு புரட்சி அரசாங்கத்துடன் அவர் தொடர்பு கொண்டார். ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ஜாகோபியின் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. பிரெஞ்சு குடியரசின் கொடியும் அங்கு பறக்கவிடப்பட்டது. சுதந்திர மரம் நடப்பட்டது. பின்னர் நெப்போலியன் ஆட்சிக்கு வந்தபிறகு, அவரிடமிருந்து நட்புக்கடிதம் ஒன்றையும் திப்பு பெற்றார். அப்போது நெப்போலியன் எகிப்தின் மீது படையெடுத்திருந்தார்.

இத்தருணத்தில்தான் வெல்லெஸ்லி பிரபு கல்கத்தாவை அடைந்தார். வரும்போதே நெப்போலியப் படையெடுப்பு குறித்த அச்சம் அவருக்கு இருந்தது. எனவே மைசூருக்கு எதிராகப் போரிடுவது என அவர் தீர்மானித்தார். இதற்காக 1790 ஆம் ஆண்டு முக்கூட்டிணைவை மீண்டும் புதுப்பிக்க அவர் முயற்சியெடுத்து மராட்டியருடன் தொடர்பு கொண்டார். அவரது யோசனையை மராட்டியர் ஏற்கவில்லை. இருப்பினும் நடுநிலை வகிப்பதாக உறுதியளித்தனர். இதற்கிடையில் ஹைதராபாத் நிசாமுடன் துணைப் படை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு அங்கிருந்த பிரஞ்சுப்படை விலக்கப்பட்டது. வெல்லெஸ்லி திப்பு சுல்தானுடனும் துணைப்படை ஒப்பந்தம் செய்துகொள்ள விழைந்தார். பிரஞ்சுக்காரர்களை விரட்டும்படியும் ஆங்கிலத் தூதரை ஏற்கும்படியும் வணிகக் குழுவுடனும் அதன் கூட்டாளிகளுடனும் இணக்கமாக செல்லும்படியும் கோரி வெல்லெஸ்லி திப்புவுக்கு கடிதங்கள் எழுதினார். இவற்றை திப்பு அலட்சியப்படுத்தியதால் நான்காம் மைசூர் போர் தொடங்கியது. இப்போர் குறுகிய காலமே நடைபெற்றது. ஆங்கிலேயரின் திட்டப்படி பம்பாய் ராணுவம் தளபதி ஸ்டூவர்ட் தலைமையில் மேற்கிலிருந்து மைசூரைத் தாக்கியது. தலைமை ஆளுநரின் சகோதரர், ஆர்தர் வெல்லெஸ்லியின் சென்னைப் படைகள் திப்புவை அவரது தலைநகர் ஸ்ரீரங்கபட்டணத்திற்கே பின்வாங்கும்படி செய்தது. படுகாயம் அடைந்த நிலையிலும் திப்பு இறுதிவரை போரிட்டார். ஸ்ரீரங்கப்பட்டணம் கைப்பற்றப்பட்டது. திப்பு சுட்டுக் கொல்லப்பட்டார்.

இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் 1803-05தொகு

1802இல் பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ், இந்தூர் இராச்சியத்தின் மன்னர் யஷ்வந்த்ராவ் ஹோல்கருடன் பூனாவில் நடந்த போரில் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த இரண்டாம் பாஜி ராவ் ஆங்கிலேயேர்களுடன் 1802இல் துணைப்படைத் திட்டத்தில் சேர்ந்தார். நான்காம் ஆங்கிலேயே - மைசூர் போரின் முடிவில் மைசூர் அரசை தங்கள் வழிக்கு கொண்டு வந்த ஆங்கிலேயேர்கள், மெதுவாக மராத்தியப் பேரரசை தங்கள் வழிக்கு கொணர முயன்றனர். மராத்திய கூட்டமைப்பு நாடுகளான புனே இராச்சியத்தின் பேஷ்வாக்கள், பரோடா அரசின் கெயிக்வாட்டுகள், குவாலியரின் சிந்தியாக்கள், இந்தூரின் ஹோல்கர்கள் மற்றும் போன்சலே வம்ச நாக்பூர் மன்னர்கள் ஒற்றுமையின்மையின்றி செயல்பட்டனர். குவாலியரின் சிந்தியா, நாக்பூரின் போன்ஸ்லே மற்றும் பீரார் அரசுகள் கிழக்கிந்திய கம்பெனியின் துணைப்படை திட்டத்தை எதிர்த்தனர்.

செப்டம்பர் 1803இல் குவாலியரின் சிந்தியா அரசு, தில்லியில் நடந்த போரில் கிழக்கிந்திய கம்பெனி படையிடம் தோல்வி அடைந்தது. 29 நவம்பர் 1803இல் நாக்பூரின் போன்ஸ்லே அரசு, ஆர்தர் வெல்லஸ்லி படையிடம் தோற்றது.[2]இந்தூர் அரசின் ஹோல்கர் கிழக்கிந்திய கம்பெனியின் துணைப்படைத் திட்டத்தில் சேர்ந்தார். முடிவாக

17 டிசம்பர் 1803இல் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இரண்டாம் இராகோஜி போன்ஸ்லே, கட்டக், பலாசோர், மேற்கு மிட்னாபூர் மற்றும் கிழக்கு மிட்னாபூர் மாவட்டப் பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியிடம் இழந்தது. 30 திசம்பர் 1803இல் செய்து கொண்ட வசாய் ஒப்பந்தப்படி, குவாலியரின் தௌலத் சிந்தியா, குர்குவான், ரோத்தக், ஆக்ரா, புந்தேல்கண்ட், பரூச், அகமதாபாத் மற்றும் குஜராத்தின் சில பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியிடம் இழந்தது. 24 திசம்பர் 1805இல் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இந்தூர் மன்னர் யஷ்வந்த்ராவ் ஹோல்கர், கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆண்டுதோறும் கப்பத் தொகை செலுத்திக் கொண்டு, கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்குட்பட்டு, தன்னுடைய அரசை தக்க வைத்துக் கொண்டார்.

பிற செய்திகள்தொகு

கல்கத்தாவில் வில்லியம் கோட்டை கல்லூரியை நிறுவினார். இந்திய-பிரித்தானியாவுக்குமிடையே இருந்த வர்த்த பிணக்குகளை தீர்த்து வைத்தார்.[1]

அயோத்தி பகுதியிலிருந்து வணிகர்களை வெளியேற்றியதற்காக, இந்தியத் தலைமை ஆளுநர் ரிச்சர்டு வெல்லஸ்லிக்கு எதிராக ஜேம்ஸ் பால் எனும் நாளுடாளுமன்ற உறுப்பினர், 1808ல் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் 31 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது.[2]

மேற்கோள்கள்தொகு

  1. C.H. Phillips, The East India Company, 1784–1834, 2nd. ed., (Manchester: Manchester UP, 1961), 107–108; "Notice of the Board of Trade, 5 October 1798 (Appendix M)," Wellesley Despatches, 2:736–738.
  2. "10 MARCH 1806. BRITISH "INVADERS SEEKING TO ESTABLISH A DOMINION AND TO ACQUIRE AN EMPIRE" IN INDIA". Dukes of Buckingham and Chandos. 3 April 2015. 10 மே 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 February 2016 அன்று பார்க்கப்பட்டது.

ஆதார நூற்பட்டியல்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்டு_வெல்லசுலி&oldid=3658348" இருந்து மீள்விக்கப்பட்டது