காரன்வாலிஸ்

சார்லஸ் காரன்வாலிஸ் (Charles Cornwallis, 1st Marquess Cornwallis), பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் வங்காள மாகாணத்தின் தலைமை ஆளுநராக 1786 முதல் 1793 முடிய பணிபுரிந்தவர்.[1][2] மேலும் பிரித்தானியப் பேரரசின் சார்பாக, ஏழாண்டுப் போர், அமெரிக்கப் புரட்சிப் போர் மற்றும் மூன்றாவது ஆங்கில மைசூர் போர்களில் கலந்து கொண்டு போரிட்டவர்.

ஜெனரல்
காரன்வாலிஸ்
காரன்வாலிஸ்
1795ல் காரன்வாலிசின் ஓவியம்
இந்தியத் தலைமை ஆளுநர், வில்லியம் கோட்டை, வங்காள மாகாணம்
பதவியில்
12 செப்டம்பர் 1786 – 28 அக்டோபர் 1793
ஆட்சியாளர்கள்மன்னர் மூன்றாம் ஜார்ஜ், ஐக்கிய இராச்சியம்
பிரதமர்ஜூனியர் வில்லியம் பிட்
முன்னையவர்சர் ஜான் மெக்பெர்சன்(தற்காலிக இந்தியத் தலைமை ஆளுநர்)
பின்னவர்சர் ஜான் சோர்
பதவியில்
30 சூலை 1805 – 5 அக்டோபர் 1805
ஆட்சியாளர்மன்னர் மூன்றாம் ஜார்ஜ்
பிரதமர்வில்லியம் பிட், ஜூனியர்
முன்னையவர்ரிச்சர்டு வெல்லஸ்லி
பின்னவர்சர் ஜார்ஜ் பார்லோ
தற்காலிகத் தலைமை ஆளுநர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஐந்தாம் சார்லஸ் எட்வர்டு காரன்வாலிஸ்

(1738-12-31)31 திசம்பர் 1738
மேபேர், லண்டன், இங்கிலாந்து
இறப்பு5 அக்டோபர் 1805(1805-10-05) (அகவை 66)
காஜிப்பூர்
காசி நாடு
தேசியம்பிரித்தானியப் பேரரசு
துணைவர்ஜெமிமா துல்லேகின் ஜோன்ஸ்
பிள்ளைகள்மேரி
முன்னாள் கல்லூரிஈடன் கல்லூரி
கிளேர் கல்லூரி, கேம்பிரிட்ச்
வேலைஇராணுவப் படைத்தலைவர்
விருதுகள்திருத்தகை (Knight)
கையெழுத்துகாரன்வாலிசின் கையெப்பம்
Military service
பற்றிணைப்பு பெரிய பிரித்தானியா (1757–1801)
 ஐக்கிய இராச்சியம் (1801–1805)
கிளை/சேவை ஐக்கிய இராச்சியம் இராணுவம்
சேவை ஆண்டுகள்1757–1805
தரம்தலைமைப் படைத்தலைவர்
கட்டளைதலைமைப் படைத்தலைவர், பிரித்தானிய இந்தியா &
தலைமைப் படைத்தலைவர் அயர்லாந்து
போர்கள்/யுத்தங்கள்ஏழாண்டுப் போர்
அமெரிக்கப் புரட்சிப் போர்
மூன்றாவது ஆங்கில மைசூர் போர்
அயர்லாந்து கிளர்ச்சி, 1798

காரன்வாலிசின் முன்னோர்கள் முதலாம்சார்லசுக்கு சேவை செய்தவர்கள். இரண்டாம்சார்லசு காலத்திலும் அவருக்கு துணையாய் நின்றவர்கள். எனவே வெளிநாடு சென்று கல்வி கற்பதிலும் ,அரசியல் செல்வாக்கு அடைவதிலும் அதிக சிரமம் ஏற்படவில்லை. அமெரிக்காவுடன் மோதல் போக்கை தவிர்க்க முயன்றாலும், அமெரிக்க போரில் இவர் ஈடுபடும் கட்டாயம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இவருக்கு வெற்றி கிட்டினாலும் இறுதியில் யார்க் டவுன் போரில் தோல்வியுற்று கைது ஆனார். பின் பரோலில் விடுதலை செய்யப்பட்டு இங்கிலாந்து வந்தடைந்தார். பின்னர் இந்திய கவர்னர் ஜெனரல் மற்றும் ராணுவ கமாண்டர் ஆக பொறுப்பேற்றார்.

பிரித்தானிய இந்தியாவில் நிலையான நிலவரித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஜார்ஜ் பார்லே எனும் சக அதிகாரியின் துணையுடன் சட்டத்தொகுப்பை உருவாக்கினார். சர் வில்லியம் ஜோன்ஸ் என்பரின் உதவியுடன் நீதித் துறையை சீரமைத்தார். குற்றவியல் வழக்குகளில் இந்துச் சட்டங்கள் கடைபிடிக்கப்பட்டது.

மாவட்ட அளவில் இருந்த இந்திய நீதிபதிகள் மாவட்ட முன்சிப் என அழைக்கபப்ட்டனர். சதர், திவானி, அதாலத், எனும் உரிமையியல் மற்றும் சதர் நிசாமத் அதாலத் எனும் குற்றவியல் உயர்நீதிமன்றம் கல்கத்தாவில் அமைக்கப்பட்டது. ஆட்சிப் பணி நியமனங்களில் தகுதி மட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது.

காரன்வாலிஸ் 1789ல் கிழக்கிந்தியப் படைகளுடன் மராத்தியர் மற்றும் ஐதராபாத் படைகளுடன் இணைந்து, மைசூரின் திப்பு சுல்தானைக்கு எதிராக கூட்டமைப்பு உருவாக்கினார். மூன்றாம் மைசூர் போரில், தோல்வியடைந்த திப்புவிடமிருந்து, பெங்களூர், திண்டுக்கல் மற்றும் மலபார் பகுதிகளையும், போர் ஈட்டுத் தொகையும் பெற்றார். அயர்லாந்தில் கலகம் ஏற்படவே அங்கு சென்றார். நெப்போலியனுடன் சமரசம் கண்டார். பின்னர் மறுபடியும் இந்தியாவிற்கு வந்து, சில நாளில் நோய் வாய்ப்பட்டு மரணம் அடைந்தார்.

பிறப்பும், வளர்ப்பும்

தொகு

காரன்வாலிஸ் லண்டனில் க்ரோஸ்வென் சதுக்கம் என்னுமிடத்தில் பிறந்தார், அவருடைய குடும்பத்தின் சொத்துக்கள் தோட்டங்கள் இங்கிலாந்தில் கென்ட் டில் இருந்தன. அவர் தந்தை சார்லஸ் காரன்வாலிஸ் , தாயார், எலிசபெத் சார்லஸ் இவர்களின் மூத்த மகனாக 1738 இல் டிசம்பர்31 இல்பிறந்தார்

காரன் வாலீஸின் முன்னோர்கள் - பிரெடெரிக் காரன்வாலீஸ் முதலாம் சார்லஸ் மன்னனுக்காக போராடியவர் . இரண்டாம் சார்லஸ் நாடு கடத்தப்பட்டபோதும் அவருக்கு உதவியாக அவருடன் சென்றவர் என்பதால் இங்கிலாந்தில் அரச குடும்ப வரிசையில் மதிப்பு மிக்கவராய் இருந்தார் . காரன் வாலீஸ் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் ஏடன் கல்லூரி மற்றும் கிளேர் கல்லூரியில் படித்தவர் .ஏடன் கல்லூரியில் படிக்கும் போது ஹாக்கி விளையாட்டின் போது கண்ணுக்கு பக்கத்தில் எதிர்பாராமல் அடி விழுந்தது .அவர் 1757 டிசம்பர் 8 இல் காலாட் படையில் சேர்ந்தார் .பின்னர் அவர் வெளிநாடு சென்று இராணுவ படிப்பில் சேர அனுமதி அளிக்கப்பட்டது .பிரஸ்சியா வில் கேப்டன் டீ ரோகுய்ன் துணையுடன் டுரின் ராணுவ பள்ளியில் படித்தார் . 1758 இல் படிப்பை நிறைவு செய்து ,பயிற்சிக்காக ஜெனீவாவிற்கு அனுப்பப்பட்டார் . அங்கே ஏழாண்டுப்போரில் நடப்பதை கண்ணுற்று பயிற்சியை நிறைவு செய்தார்

ராணுவ வாழ்க்கையும், மதி நுட்பமும்

தொகு

1760 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காரன்வாலிஸ் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டார் .1762 ஆம் ஆண்டில் தனது தந்தை வகித்த மதிப்பு மிக்க பதவியும் பெற்றார் . ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸிற்கு உயர்த்தப்பட்டார். வருங்கால பிரதமரான லார்ட் ராக்கிங்ஹாம் ஆகியோரின் ஆதரவாளராக அவர் ஆனார். 1765 ஸ்டாம்ப் சட்டத்திற்கு எதிராக காலனித்துவவாதி அனுதாபத்துடன் வாக்களித்த ஐந்து பேரில் இவரும் ஒருவர் ஆவார். அடுத்த ஆண்டுகளில், அவர் சுதந்திரப் போருக்கு வழிவகுத்த பதட்டங்கள் மற்றும் நெருக்கடிகளின் போது காலனித்துவவாதிகளுக்கு வலுவான ஆதரவு அளித்தார். என்றாலும் அமெரிக்காவுடனான போர் தவிர்க்க முடியாமல் போய் விட்டது .

சார்லஸ் கார்ன்வால்ஸ் ஜெர்மனியில் ஏழு ஆண்டுகள் போரின் போது மிடென்டன் (1759 )இராணுவ சேவைபுரிந்தார், 1775 ஆம் ஆண்டில் அவர் பிரதான தளபதியாக ஆனார்.. அமெரிக்க புரட்சியின் போது சேர் ஹென்ரி கிளின்டனின் கீழ் பணியாற்றிய 1776 ஆம் ஆண்டில் வெற்றிகரமாகநியூயார்க் நகரத்தை கைப்பற்றினார் . 1781 இல், ஜெனரல் ஹென்றி கிளிண்டனுக்கு இரண்டாவது கட்டளையாக, அவர் தனது படைகளை வர்ஜீனியாவிற்கு நகர்த்தினார், அங்கு அவர் யார்க் டவுன் போரில் தோற்கடிக்கப்பட்டார். எனவே கார்ன் வாலிஸ் ஜார்ஜ் வாஷிங்டன் முன் சரண் அடைந்தார் .இதன் மூலம் அமெரிக்க புரட்சியில் அமேரிக்கா சுதந்திரத்தை அடைந்தது .

பரோலில் இங்கிலாந்து திரும்புதல்

தொகு

காரன்வாலிஸ், பெனடிக்ட் அர்னால்ட் உடன் பிரிட்டனுக்குத் திரும்பினார், 1782 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று இறங்கியபோது அவர்கள் மகிழ்ச்சிய டைந்தனர். யுத்தத்தில் வாலிஸ் சரண் அடைந்தாலும் சண்டை வேறொரு இடத்தில் நடந்து கொண்டிருந்தது. காரன்வாலிஸ் அமெரிக்க தளபதி ஹென்றி லாரன்ஸ் விடுதலைக்காக அதற்கு ஈடாகவே தற்காலிகமாக பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தார் .ஆனால் உடன் படிக்கையின் படி லாரன்ஸ் விடுதலை செய்யப்படாததால் மறுபடியும் அமெரிக்காவிற்கு சண்டையிட செல்ல மறுத்து விட்டார் என்றாலும்கார்ன் வாலிஸ் மூன்றாம் ஜார்ஜின் அபிமானத்தை பெற்று இருந்ததால் ஆகஸ்டு 1785 ப்ரஷ்ஷியாவிற்கு நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டார்

இந்தியாவில் கவர்னர் ஜெனரல் பதவி

தொகு

1786 ஆம் ஆண்டு கவர்னர் ஜெனரல் மற்றும் ராணுவ கமாண்டர் ஆக இந்தியாவில் பதவி ஏற்றார் .முன்னதாக 1782 ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பரிந்துரைக்க ப்பட்டாலும் , ராணுவ பதவி தராததால் வேலையில் சேர மறுத்து விட்டார் .

காரன்வாலிஸ் மேற்கொண்ட உள்நாட்டு சீர்திருத்தங்களை மூன்று பிரிவுகளாக அறிந்து கொள்ளலாம்.

1 . ஆட்சித்துறை சீர்திருத்தங்கள்

2 வருவாய் சீர்திருத்தங்கள் அல்லது நிலையான நிலவரித்திட்டம்

3. நீதித் துறை மற்றும் பிற சீர்திருத்தங்கள்.

ஆட்சித்துறை சீர்திருத்தங்கள்

தொகு

திறமையான மற்றும் நேர்மையான பணியாளர்களை நியமித்து ஆட்சிப் பணித்துறையை செம்மைப்படுத்தியதே காரன்வாலிஸ் மேற்கொண்ட சீர்திருத்தங்களில் முதன்மையானதாகும். சிக்கனம், எளிமை, தூய்மை ஆகியவற்றை அவர் தனது நோக்கங்களாகக் கொண்டிருந்தார். வணிகக்குழுவில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சொற்ப ஊதியமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அவர்கள் வருவாய்க்குமேல் பெருமளவு தரகுப் பணத்தைப் பெற்று வந்தனர். மேலும் தடை செய்யப்பட்டிருந்த அதிக வருமானமுள்ள தனிப்பட்ட வாணிகத்திலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் ஈடுபட்டு வந்தனர். ஆட்சித் துறையை தூய்மைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட காரன்வாலிஸ், குறைந்த ஊதியம் மற்றும் அதிக ஈட்டுப்படிகள் என்ற வழக்கத்தை ஒழித்தார். வணிகக்குழு ஊழியர்களுக்கு நிறைவான ஊதியம் வழங்கும்படி இயக்குநர் குழுவிடம் கேட்டுக் கொண்டார். இதன்மூலம் ஊழல் மிகுந்த வணிக முறைகளைக் களையமுடியும் என்று எடுத்துரைத்தார்.

மேலும் தகுதியின் அடிப்படையிலேயே நியமனங்கள் செய்யப்படவேண்டும் என்ற கொள்கையையும் காரன் வாலிஸ் தொடங்கி வைத்தார். இவ்வாறு இந்திய ஆட்சிப் பணித்துறைக்கு அவர் அடித்தளம் அமைத்தார். செலவினங்களைக் குறைப்பதற்காக பல்வேறு அதிகப்படியான பணியிடங்களை ரத்து செய்தார். வணிகம், நீதி, வருவாய் ஆகிய மூன்று துறைகளின் செயல்பாடுகளை தனித்தனியே பிரித்து ஒரு புதிய வகை ஆட்சியமைப்பை அறிமுகப்படுத்தினார். ஆட்சியமைப்பின் அச்சாணிகளாக இருந்த மாவட்ட கலெக்டர்களிடமிருந்து நீதித்துறை அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. அவர்கள் வருவாய்த்துறையில், வரிவசூலிக்கும் பணியை மட்டும் கவனித்து வந்தனர்.

காவல்துறை சீர்திருத்தங்கள்

தொகு

நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்கு காவல்துறையின் சீரமைப்பும் தேவையாக இருந்தது. மாவட்ட நீதிபதியின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருந்தது. ஒவ்வொரு மாவட்டமும் சுமார் 20 மைல் பரப்பளவு கொண்ட 'தாணா' (காவல் சரகம்) என்ற பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு 'தாணா' பிரிவும் 'தரோகா' எனப்பட்ட இந்திய அதிகாரியின் கட்டுப்பாட்டில் விடப்பட்டன. அவருக்கு உதவியாக பல காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இருப்பினும் காவல் துறை திறமையானதாக இல்லை. மார்ஷ்மேன் என்பவரது கூற்றுப்படி தரோகா வரம்பற்ற அதிகாரத்தைப் பெற்றிருந்ததோடு நாட்டில் நிலவிய கொடுமைகளுக்கும் காரணமாக இருந்தார்.

பிற சீர்திருத்தங்கள்

தொகு

வணிகக் குழுவின் வாணிப முதலீடுகளை நிர்வகித்து வந்த வணிக வாரியத்தை காரன்வாலிஸ் சீரமைத்தார். சார்லஸ் கிராண்ட் என்பவரின் உதவியோடு அதில் நிலவிய எண்ணற்ற முறைகேடுகளையும் ஊழல் நடவடிக்கைகளையும் அவர் ஒழித்தார். இந்திய தொழிலாளர்களுக்கும் நெசவாளிகளுக்கும் நியாயமான சலுகைகளை வழங்கினார். நேர்மையான பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தினார்.

மூன்றாம் மைசூர் போர்

தொகு

06-.12-.1782 இல் மன்னர் ஹைதர் அலியின் மர­ணத்தை தொடர்ந்து 26.-12-.1782 இல் தனது 32 ஆவது வயதில் திப்பு சுல்தான் மைசூர் மன்­ன­ரானார். மன்னர் திப்பு சுல்தான் “புலி சின்னம்” பொறிக்­கப்­பட்ட கொடியை தனது சின்­ன­மாக பயன்­ப­டுத்­தினார். இதனால் திப்புசுல்தான் “மைசூரின் புலி” என அழைக்­கப்­பட்டார். இரண்டாம் மைசூர் போர் அதா­வது மேற்கு கடற்­க­ரை­யி­லி­ருந்து ஆங்­கி­லே­யர்­களை துரத்த வேண்டும் என்ற எண்­ணத்தில் திப்பு சுல்தான் பிரான்ஸ் படை­யி­ன­ரையும் சேர்த்துக் கொண்டு 1780 ஆம் ஆண்டில் போர் தொடுத்தார்.

யுத்தம் நடை­பெற்று நான்கு வருட முடிவில் 1784 ஆம் ஆண்டில் பிரான்ஸ் மன்னன் 16 ஆம் லூயி பிரிட்­ட­னுடன் சம­ரசம் செய்து கொண்­டதால் திப்பு சுல்தான் வேறு வழி­யில்­லாமல் போரை நிறுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. 1784 ஆம் ஆண்டு முடி­வுற்ற இப்­போரில் ஆங்­கி­லேய தள­பதி உள்­ளிட்ட 4,000 இரா­ணுவ வீரர்கள் திப்பு சுல்­தானால் போர்க் கைதி­க­ளாக பிடிக்­கப்­பட்டு பின்னர் விடு­விக்­கப்­பட்­டனர். இந்த அவ­மானம் ஆங்­கி­லே­யர்­க­ளுக்கு திப்பு சுல்­தானை நினைத்­தாலே குலை நடுங்க செய்­தது.

1789 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் தலை­மையில் ஆங்­கி­லே­ய­ருக்கு எதி­ராக நடை­பெற்ற மூன்றாம் மைசூர் போரில் மராட்­டிய பேர­ரசும்,ஹைத­ரபாத் நிஜாமும், பிரித்தானிய படைத் தள­பதி கார்ன் வாலி­ஸுடன் இணைந்து திப்பு சுல்­தா­னுக்கு எதி­ராக போர் தொடுத்­தனர்.

திப்பு சுல்தான் எதி­ரி­களை துணிச்­ச­லுடன் எதிர்­கொண்ட போதிலும் 1792 ஆம் ஆண்டு வரை நடை­பெற்ற இந்தப் போரில் திப்பு சுல்தான் தோல்வி அடைந்தார். இறு­தியில் ஸ்ரீரங்­கப்­பட்­டிணம் அமைதி ஒப்­பந்­தத்­தின்­படி பல பகு­திகள் பிரித்தானிய, ஹைத­ரா­பாத்­நிஜாம் மற்றும் மராட்­டி­யர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன. மூன்றாம் மைசூர் போரின் ஆரம்­பத்தில் வெற்றி பெற்ற திப்பு சுல்தான் போரின் இறுதிக் கட்­டத்தில் மராட்­டி­யர்கள் நய­வஞ்­ச­கத்­த­ன­மாக ஆங்­கி­லே­யர்­க­ளுடன் இணைந்து கொண்­டதால் ஒப்­பந்தம் செய்­து­கொள்ளும் நிலைக்குத் தள்­ளப்­பட்டார்.

மைசூரின் பாதி நிலப்­ப­ரப்பும் எதி­ரிகள் வசம் சென்­றது. இழப்­பீட்டுத் தொகை­யாக 3.3 கோடி நிர்­ண­யிக்­கப்­பட்­டது. இழப்­பீட்டுத் தொகையை செலுத்தும் வரை திப்பு சுல்­தானின் இரு மகன்கள் பிணைக் கைதி­க­ளாகப் பிடித்து வைக்­கப்­பட்­டனர். திப்பு சுல்தான் இழப்­பீட்டுத் தொகையை செலுத்தி தனது இரு மகன்­களை மீட்டார். ஆங்­கி­லே­யர்­களால் ஸ்ரீரங்கப் பட்­டிணம் முற்­றுகை இடப்­பட்ட போதிலும் திப்பு சுல்­தானின் கோட்­டைக்குள் நுழைய இய­ல­வில்லை.

காரன்வாலிஸ் இந்திய ஆட்சிப் பணியின் தந்தை

தொகு

செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த காரன்வாலிஸ் நாட்டுப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார். தனது கடமைகளை அச்சமின்றி நிறைவேற்றினார். கடமையும் தியாகமும் அவரது மூச்சாக விளங்கியது. திப்புவின் வளர்ச்சி அஞ்சும் நிலைக்கு சென்றபோது, தலையிடாக் கொள்கையை கைவிட்டு துணிச்சலுடன் அதனை எதிர்கொண்டார். ஒரு ஆட்சியாளராக வணிகக்குழுவின் ஆட்சியை இந்தியாவில் நிலைப்படுத்தினார்.

தூய்மையான திறமையான நிர்வாகத்திற்கு அடித்தளம் வகுத்தார். அவர் கொண்டுவந்த நிலையான நிலவரித் திட்டத்தில் குறைகள் இருந்தபோதிலும், ஆட்சித் துறை,நீதித்துறை சீர்திருத்தங்களில் தமது முத்திரையை காரன்வாலிஸ் பதித்துவிட்டுச் சென்றார். தற்கால இந்திய ஆட்சிப் பணியின் தந்தை என்று அவரைக் கருதலாம். காரன்வாலிசை தொடர்ந்து சர் ஜான் ஷோர் (1793 - 98) தலைமை ஆளுநராக பதவி வகித்தார். இவரது ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஏதும் இல்லை எனலாம்.

அயர்லாந்து கலகத்தை அடக்குதல், மனக்குமுறலும்

தொகு

ஜூன் 1798 இல் அயர்லாந்தின் லெப்டினென்ட் மற்றும் கமண்டராக நியமிக்கப்பட்டார் . இந்தப்பதவிக்கு 1797 லிலே பரிந்துரைக்கப் பட்டாலும் மே மாத அயர்லாந்து கலகத்திற்கு பின்னரே அங்கு சென்றார் . இந்திய கமாண்டராக வெல்லெஸ்லி நியமிக்கப்பட்டார் .அயர்லாந்து கலவரக் காரர்களும் ,பிரான்ஸ் சிப்பாய்களையும் அடக்க 60000 துருப்புகள் பயன்படுத்தப்பட்டன . ஏராளமான அயர்லாந்து கலவரக்காரர் களை கொன்றொழித்த பிறகே பிரெஞ்சு துருப்புகள் சரண் அடைந்தனர் . என்னுடைய வேலை மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது .மேலும் அரசரை தொடர்பு கொள்ள முடியாத படி ஊழல் தலைவிரித்தாடுகிறது . இந்த மத பிரட்சனை வேதனை அளிக்கிறது . இதற்கு அயர்லாந்து இங்கிலாந்துடன் இணைக்கப்பட வேண்டும் . இல்லாத பட்சத்தில் நான் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று 1801அயர்லாந்தை விட்டு வெளியேறினார்

நெப்போலியனுடன் சமரச தீர்வு

தொகு

பின்னர் நெப்போலியனுடன் சமரச தீர்வு காண பிரான்ஸ் சென்றார் .அமின்ஸ் உடன்படிக்கை 1802 மார்ச் 25 கையெழுத்தாகியது என்றாலும் இந்த உடன்படிக்கை நெப்போலியனால் மீறப்பட்டது

சொந்த வாழ்க்கை

தொகு

14 ஜூலை 1768 அன்று அவர் ஒரு கர்னல் கேல்லரின் மகள் ஜெமிமா டல்லிகின் ஜோன்ஸ்ஸை திருமணம் செய்தார். [10] அவரது மண வாழ்வு மகிழ்வுடன் கழிந்தது .அவர்கள் சஃபோல்க் நகரில் ,குள்போர்ட் டில் வசித்தனர் .இவருக்கு மேரி என்ற மகளும், சார்லஸ் என்ற மகனும் பிறந்தனர் .மனைவி ஜெமினா 1779 ஏப்ரல் 14 இல் மரணம் அடைந்தார்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Charles Cornwallis, 1st Marquess and 2nd Earl Cornwallis
  2. BIOGRAPHY OF CHARLES CORNWALLIS

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரன்வாலிஸ்&oldid=3924817" இலிருந்து மீள்விக்கப்பட்டது