வணிகம் அல்லது வர்த்தகம் (trade, commerce) என்பது மனிதனது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதாரச் செயற்பாடு ஆகும்.

Intérêts des nations de l'Europe, dévélopés relativement au commerce, 1766

வணிகமானது பிரதானமான நான்கு வளர்ச்சி கட்டங்களின் கீழ் வளர்ச்சியுற்றது.

  • பண்டமாற்று முறை
  • பணமுறை
  • கைத்தொழில் புரட்சி
  • தகவல் தொழில்நுட்ப புரட்சி

வணிகவியல் வர்த்தக நடவடிகைகளை வணிகம், தொழிற்சாலை என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். வணிகம் என்பது வியாபாரத்தையும் அதன் துணைப் பணிகளான போக்குவரத்து, வங்கியியல், காப்பீடு, பண்டகக் காப்பகம், தகவல் தொடர்பு, விளம்பரம் போன்ற பிற நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது. வணிகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதே வியாபாரம் ஆகும் . வியாபாரம் என்பது பொருட்களை வாங்குவதும் விற்பதும் ஆகும். வர்த்தகம் பொருட்களைத் தயாரித்து நுகர்வோருக்கு இலாபத்தோடு விநியோகிக்கும் முழுப்பணியே வர்த்தகம் ஆகும். வணிகத்தின் கிளைகள். வியாபாரம். போக்குவரத்து, பண்டகக் காப்பகம், வங்கிப் பணிகள், விளம்பரமும் விர்பான்மயும். காப்பீடு, தகவல் தொடர்பு ஆகியவை வணிகத்தின் கிளைகள் ஆகும். மின்னணு வணிகம். ஈ-வணிகம் என்பது இணையம் மூலமாக நுகர்வோருடன் நேரடி தொடர்பு கொள்வதையே ஈ-வணிகம் என்பர். வணிகத்தின் தடைகள் ஆள்சார் தடை, இடத் தடை, காலத் தடை, நிதித் தடை, இடர்பாட்டுத் தடை, அறிவுசார் தடை. வியாபாரம். போக்குவரத்து, பண்டகக் காப்பகம், வங்கிப் பணிகள், விளம்பரமும் விர்பான்மயும். காப்பீடு, தகவல் தொடர்பு ஆகியவை வணிகத்தின் தடைகளை நீக்குகிறது

"https://ta.wikipedia.org/w/index.php?title=வணிகம்&oldid=3878203" இலிருந்து மீள்விக்கப்பட்டது