எண்ணிம நாணயம்

எண்ணிம நாணயம் (digital currency) அல்லது மெய்நிகர் நாணயம் அல்லது எண்மநாணயம் என்பது எந்த ஒரு அரசு சார்ப்பற்ற, பரவலாக்கப்பட்ட முறைப்படி, தொடரேடு அல்லது தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு வகையான நாணைய முறை ஆகும். 3, நவம்பர் 2018 அன்று சுமார் 2097 எண்ணிம நாணயங்கள் பயன்பாட்டில் உள்ளது, இதனுடைய சந்தை மதிப்பு: $206,668,111,434[1]

எண்ணிம நாணயக் குறியீடு

தொகு

பங்குச் சந்தைக் குறியீடு, நாணயக் குறியீடு போன்று எண்ணிம நாணயங்களுக்கும் குறியீடு உள்ளது. சில எடுத்துக்காட்டுகள்

எண்ணிம நாணயம் குறியீடு
பிட்காயின் BTC
ஈத்தரீயம் ETH
ரிப்பிள் XRP
பிட்காயின் கேஷ் BCH
ஈஓஎஸ் EOS
ஸ்டெல்லார் XLM
லைட்காயின் LTC
கார்டானோ ADA
டீதர் USDT
மோனீரோ XMR

எண்ணிம பணப்பை

தொகு

ஐஆர்சிடிசி, அமேசான்[2], கூகிள்[3], பேடிஎம்[4], ஏர்டெல்[5] போன்ற நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்காக அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட எண்ணிம பணத்தை சேமிக்க இடம் அளித்துள்ளது. வழக்கமாக வாடிக்கையளர்கள் இந்நிறுவனங்களின் எண்ணிம பணப்பையில் அவற்றை வைத்திருக்க முடியும்.

பிட்காயின்[6], ஈத்தரீயம்[7] உள்ளிட்டவை அனைவராலும் அறியப்பட்ட மெய்நிகர் நாணயங்களகும். இவைகளையும், எண்ணிம பணத்தைப் போன்று ஒரு குறிப்பிட்ட முகவரியில் சேமித்து வைக்க முடியும்.

எண்ணிம நாணய பண்புகள்

தொகு
  • இவை வழக்கமான காகிதம், அரசு முத்திரை, உலோகம், போன்றவை இல்லாமல் எண்ணிம முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முகவரியில் சேமித்து வைக்கப்படும். [8]
  • எண்ணிம பணப்பையில் உள்ள நாணையங்களை மற்றொருவருக்கு அனுப்ப குறிச்சொல் கொடுக்கப்பட வேண்டும்.
  • பணப்பையில் மற்றொருவரிடம் இருந்து நாணயங்களை வாங்க முகவரியை அனுப்ப வேண்டும்.
  • குறிச்சொல்லை மறந்து விட்டால் நாணயங்களை ஏதும் செய்ய இயலாது.

உசாத்துணை

தொகு
  1. "அனைத்து எண்ணிம நாணயங்களின் பட்டியல்". பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2018.
  2. "அமேசான்". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.
  3. "கூகிள்". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.
  4. "பேடிஎம்". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.
  5. "ஏர்டெல்". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.
  6. "பிட்காயின்". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.
  7. "ஈத்தரீயம்". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.
  8. "ஈத்தர் பணப்பை". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணிம_நாணயம்&oldid=2595053" இலிருந்து மீள்விக்கப்பட்டது