பினாங்கு இரண்டாவது பாலம்

பினாங்கு இரண்டாவது பாலம்

சுல்தான் அப்துல் ஆலிம் முவாட்சாம் ஷா பாலம் அல்லது பினாங்கு இரண்டாவது பாலம் (ஆங்கிலம்: Sultan Abdul Halim Muadzam Shah Bridge; அல்லது Penang Second Bridge; (மலாய்: Jambatan Sultan Abdul Halim Muadzam Shah அல்லது Jambatan Kedua Pulau Pinang) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் இரண்டாவது பாலம் ஆகும்.

சுல்தான் அப்துல் ஆலிம் முவாட்சாம் ஷா பாலம்
அதிகாரப் பூர்வ பெயர் பினாங்கு இரண்டாவது பாலம்
போக்குவரத்து வாகனங்கள்
தாண்டுவது பினாங்கு நீரிணை, மலேசியா
இடம் Mes-e28.svg சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம்
பராமரிப்பு ஜம்பாத்தான் கெடுவா நிறுவனம் (JKSB)
வடிவமைப்பாளர் மலேசிய மத்திய அரசு
சீனத் துறைமுகப் பொறியியல் கூட்டுறவு நிறுவனம்
யூ.இ.ஏம். குழு
வடிவமைப்பு கேபிள் பாதை பாலம்
மொத்த நீளம் 24 கி.மீ.
அகலம் --
அதிகூடிய அகல்வு 250 மீ.
கட்டியவர் சீன துறைமுகப் பொறியியல் கூட்டுறவு நிறுவனம்

யூ.இ.ஏம். குழு

கட்டுமானம் முடிந்த தேதி பிப்ரவரி 2014 [1]
திறப்பு நாள் 2 மார்ச் 2014[1]

Mes-e28.png

Expressway 28
சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம்
(பினாங்கு இரண்டாவது பாலம்)
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு ஜம்பாத்தான் கெடுவா நிறுவனம் (JKSB)
நீளம்:24 km (15 mi)
பயன்பாட்டில்
இருந்த காலம்:
2006 – present
வரலாறு:கட்டுமானப் பணிகள் நவம்பர் 2008-இல் தொடங்கி மே 2012-இல் முடிக்கப்பட வேண்டும். ஆனால் ஏப்ரல் 2014 வரை தாமதமானது.[2]
திறப்பு விழா: 1 மார்ச் 2014[1]
போக்குவரத்து திறப்பு: 2 மார்ச் 2014[1]
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு:பண்டார் காசியா (பத்து காவான்),
செபராங் பிறை
 E1 AH2 வடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா)
பண்டார் காசியா விரைவுசாலை
P 10 ஜாலான் பத்து மாவுங்
3113 துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை
மேற்கு முடிவு:பத்து மாவுங், பினாங்கு தீவு
Script error: The function "locations" does not exist.
நெடுஞ்சாலை அமைப்பு

தீபகற்ப மலேசியாவின் நிலப்பகுதியில் இருக்கும் பத்து காவான் நகர்ப் பகுதியையும்; மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜார்ஜ் டவுன் மாநகரையும் இணைக்கிறது.

Mes-e28.svg விரைவுச்சாலையின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த பினாங்கு இரண்டாவது பாலம், மலேசியாவிலும்; தென்கிழக்கு ஆசியாவிலும் நீண்ட பாலம் ஆகும். பாலத்தின் மொத்த நீளம் 24 கி.மீ. இந்தப் பாலம் அதிகாரப் பூர்வமாக மார்ச் 1, 2014 அன்று திறக்கப்பட்டது.[3]

கண்ணோட்டம்தொகு

பினாங்கு இரண்டாவது பாலம் ஒன்பதாவது மலேசியத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஓர் உயர் தாக்கத் திட்டம் ஆகும். இது ஓர் உயர் தாக்கத் திட்டமாக இருப்பதால், மலேசியாவின் வடக்குப் பெருவழி பொருளாதாரப் பகுதியின் (Northern Corridor Economic Region) சமூகப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

வரலாறுதொகு

திட்டமிடல்தொகு

ஆகஸ்டு 2006-ஆம் ஆண்டில், ஒன்பதாவது மலேசியத் திட்டதின் கீழ் பினாங்கு இரண்டாவது பாலம் கட்டுவதற்கு மலேசிய மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியது. நவம்பர் 12, 2006-இல், புதிய பினாங்கு இரண்டாவது பாலத்திற்கான கட்டுமானத் தொடக்க விழா ஐந்தாவது மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவியால் நிகழ்த்தப் பட்டது.

கட்டுமானம்தொகு

மண் ஆய்வுப் பணி மற்றும் சோதனைத் தொகுப்பு வேலைகளை முடித்த பின்பு, சீனத் துறைமுகப் பொறியியல் கூட்டுறவு நிறுவனம் மற்றும் யூ.இ.ஏம் குழு பாலம் கட்டும் பணி 2011-இல் நிறைவடையும் என்று அறிவித்தது.

கட்டுமானப் பணி 2008-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் ஏப்ரல் 2008-இல், அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தல், வடிவமைப்பு சிக்கல்கள் மற்றும் கட்டிடப் பொருட்கள் உயரும் செலவினங்கள் காரணமாக ஒன்பது மாதங்கள் தாமதமாகும் என அறிவித்தது.

பாலத்தின் கட்டுமானத் தொடக்கம்தொகு

நவம்பர் 8, 2008-இல், சீனத் துறைமுகப் பொறியியல் கூட்டுறவு நிறுவனத்தின் மூலமாக இரண்டாவது பாலக் கட்டுமானம் தொடங்கியது. அக்டோபர் 3, 2012-இல், நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவான செப்டம்பர் 2013-க்கு இரண்டு மாதங்கள் முன்னதாகவே பாலக் கட்டுமானப் பணிகள் முடிவடையும் என ஊடகங்களில் அறிக்கைகள் வெளியாயின.

ஏப்ரல் 20, 2013-இல், கம்பி வடங்களின் இறுதிப் பணி முடிக்கப்பட்டதும், பாலத்தின் கட்டுமானமும் நிறைவு அடைந்தது. ஏப்ரல் 30, 2013 அன்று, ஆறாவது பிரதமர் நஜிப் துன் ரசாக் செபராங் பிறையில் ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்தார்.

அப்போது பினாங்குத் தீவுப் பகுதியில் இருந்து தீகற்ப நிலப் பகுதிக்குச் செல்ல பாலத்தில் 24 கி.மீ. தொலைவு சென்றார். இந்தப் பாலத்தைப் பயன்படுத்திய நாட்டின் முதல் தலைவர் ஆனார். பாலம் முதலில் நவம்பர் 8, 2013 அன்று திறப்பதற்குத் திட்டமிடப்பட்டது. எனினும் திறப்புத் தேதி, மார்ச் 1-ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

பாலம் திறப்பு விழாதொகு

பினாங்கு இரண்டாவது பாலம்; மார்ச் 1, 2014 சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்களால் அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

நஜிப் துன் ரசாக் பினாங்கு இரண்டாவது பாலத்திற்கு சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம் என்று பெயர் சூட்டினார், பாலம் திறப்பு விழா முடிந்த பிறகு 12:01 மணிக்கு போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது .

தொழில்நுட்ப குறிப்புகள்தொகு

பாலம்தொகு

 
பினாங்கு நீரிணையில் உள்ள பாலங்கள்

சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா பாலம் உயர் தணித்த இயற்கை ரப்பர் (HDNR) தாங்கி கொண்டு, 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாங்கும் பாலமாகச் செயல் படுகிறது.

விவரக் குறிப்பீடுதொகு

 • ஒட்டுமொத்த நீளம் : 24 கி.மீ
 • நீளம் தண்ணீர் மீது : 16.9 கி.மீ.
 • முதன்மை இடைவெளி : 250 மீ
 • தண்ணீர் மேலே உயரம்  : 30 மீ
 • வாகனம் பாதைகள் எண்ணிக்கை : 2 (ஒவ்வொரு திசையில்)
 • பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட தேதி : 2014 மார்ச் 2
 • ஒட்டுமொத்த செலவு : மலேசிய ரிங்கிட் 4.5 பில்லியன்
 • பாலம் உத்தேச வேக வரம்பு : 80 கி.மீ. / மணிநேரம்


படத்தின் வலது பக்கத்தில் "S" வளைவுகளில் பினாங்கு இரண்டாவது பாலத்தின் வான்வழிக் காட்சி

மேலும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 1.2 1.3 "Second Penang Bridge set to open in February 2014 - Nation - The Star Online". 20 பிப்ரவரி 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 March 2016 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Second Penang Bridge set to open in February 2014". Archived from the original on 2014-02-20. https://web.archive.org/web/20140220022956/http://www.thestar.com.my/News/Nation/2013/12/12/Penang-second-bridge-feb.aspx/. 
 3. "Second Penang bridge opens to fanfare". Archived from the original on 2014-03-14. https://web.archive.org/web/20140314151516/http://ride.asiaone.com/news/general/story/second-penang-bridge-opens-fanfare.