துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை

பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகரத்தை பத்து மாவுங் நகர்ப் பகுதியுடன் இணைக்கிறது

துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை அல்லது கூட்டரசு சாலை 3113 (மலேசியா) ஆங்கிலம்: Tun Dr Lim Chong Eu Expressway அல்லது Federal Route 3113; சீனம்: 林倉祐大道; மலாய்: Lebuhraya Tun Dr Lim Chong Eu அல்லது Jalan Persekutuan 3113; என்பது மலேசியாவின் பினாங்கில் உள்ள ஒரு விரைவுச்சாலை ஆகும். இந்தச் சாலை ஜார்ஜ் டவுன் நகரத்தை பத்து மாவுங் நகர்ப் பகுதியுடன் இணைக்கிறது.[1]

கூட்டரசு சாலை 3113
துன் டாக்டர் லிம் சோங் யூ
விரைவுச்சாலை
Tun Dr Lim Chong Eu Expressway
வழித்தட தகவல்கள்
நீளம்:17.84 km (11.09 mi)
முக்கிய சந்திப்புகள்
North முடிவு:வெல்ட் குவே, ஜார்ஜ் டவுன்
 JKR(P)19 பினாங்கு மிடல்ரிங் சாலை
பினாங்கு இரண்டாவது பாலம்
துன் டாக்டர் அவாங் சாலை
JKR(P)10 பத்து மாவுங் சாலை
பினாங்கு இரண்டாவது பாலம்
South முடிவு:பத்து மாவுங்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
குளுகோர்
பாயான் லெப்பாஸ்
பாயான் லெப்பாஸ் தொழில்துறை வளாகம்
பினாங்கு இரண்டாவது பாலம்
பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்
நெடுஞ்சாலை அமைப்பு

17.84 கி.மீ. (11.09 மைல்) நீளம் கொண்ட இந்த விரைவுச் சாலை, பினாங்கு தீவின் கிழக்குக் கடற்கரையைச் சுற்றி வருகிறது. முன்னாள் பினாங்கின் முதல்வர் துன் டாக்டர் லிம் சோங் யூ நினைவாக 7 டிசம்பர் 2010-இல் அமைக்கப்பட்டது.[2]

பொது

தொகு

இந்த விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 0, பத்து மாவுங் நகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தச் சாலையில் இரண்டு பிரிவுகள் உள்ளன:

ஜெலுத்தோங் விரைவுச் சாலை (Jelutong Expressway);

பாயான் லெப்பாஸ் விரைவுச் சாலை (Bayan Lepas Expressway).

பின்னணி

தொகு

1983-ஆம் ஆண்டு பினாங்கு பாலம் கட்டப்படும் போது இங்கு ஒரு முன்னோடிச் சாலை உருவாக்கப் பட்டது. 1985-இல் சாலை கட்டுமானம் முடிவுற்றது. பின்னர், இந்தச் சாலை வடக்கு நோக்கி ஜெலுத்தோங் விரைவுச் சாலையாகவும்; தெற்கே பாயான் லெப்பாஸ் விரைவுச் சாலையாகவும் நீட்டிக்கப்பட்டது.

முன்னாள் பினாங்கு முதல்வர் லிம் சோங் யூ 24 நவம்பர் 2010-இல் காலமானார். அவர் இறந்த பிறகு, 2010 டிசம்பர் 7-ஆம் தேதி, பினாங்கு மாநில அரசாங்கம் அவரின் நினைவாக அந்த விரைவுச் சாலைக்கு துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை எனப் பெயரை மாற்றியது.[3]

துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலையில் தெங்கு குடின் – குளுகோர் சாலையும் (  ) (Jalan Tengku Kudin–Gelugor-Penang Bridge) இணைகிறது.

மேற்கோள்

தொகு
  1. Statistik Jalan (Edisi 2014). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2014. p. 57. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
  2. Expressway renamed to honour Chong Eu The Star, December 7, 2010
  3. Penang has renamed a highway as Tun Dr Lim Chong Eu expressway The Star, November 26, 2010

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு