மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி என்பது (மலாய்: SJKT Mak Mandin; ஆங்கிலம்: Mak Mandin Tamil School; சீனம்: 麦曼丁泰米尔学校) மலேசியா, பினாங்கு மாநிலத்தில், பட்டர்வொர்த் நகர்ப்புறத்தில் அமைந்து உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி. முன்பு பட்டர்வொர்த் நகரில் இருந்த கம்போங் பங்காளி தமிழ்ப்பள்ளி; இந்தியர் சங்கத் தமிழ்ப்பள்ளி; ஆகிய இரு தமிழ்ப்பள்ளிகளும் ஒன்றிணைக்கப் பட்டு, மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி என்று ஒரு புதிய கூட்டுப்பள்ளியாக உருவானது.

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி
அமைவிடம்
மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி is located in மலேசியா
மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி
      குப்பாங்
பட்டர்வொர்த், பினாங்கு, மலேசியா
அமைவிடம்05°25′52″N 100°23′45″E / 5.43111°N 100.39583°E / 5.43111; 100.39583
தகவல்
வகைஆண்/பெண் இரு பாலர் பள்ளி
தொடக்கம்1970
நிறுவனர்உமையவள் இந்து சபா
பட்டவொர்த் இந்தியர் சங்கம்
பள்ளி மாவட்டம்செபராங் பிறை
கல்வி ஆணையம்மலேசியக் கல்வி அமைச்சின் பகுதி உதவி
பள்ளி இலக்கம்PBD2076
தலைமை ஆசிரியர்கரு. இராஜமாணிக்கம்
தரங்கள்1 முதல் 6 வகுப்பு வரை
16 வகுப்பறைகள்
48 ஆசிரியர்கள்
மாணவர்கள்1010
கல்வி முறைமலேசியக் கல்வித்திட்டம்

பட்டர்வொர்த் நகரில் இருக்கும் மாக் மண்டின் தொழில்பேட்டைப் பகுதியில் இந்தப் பள்ளி அமைந்து இருப்பதால், அந்தப் பெயரிலேயே மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி என்று அழைக்கப்படுகின்றது. இந்தப் பள்ளியில் 1010 மாணவர்கள் பயில்கிறார்கள். 48 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். [1]

பினாங்கு மாநிலத்தில் மிகப் பெரிய தமிழ்ப்பள்ளியாக மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி கருதப் படுகிறது. இந்தப் பள்ளியில் 16 வகுப்பறைகள்; ஒரு நவீன சிற்றுண்டிச்சாலை; குளிர்சாதன வசதி கொண்ட நூல்நிலையம்; ஒரு மாநாட்டு அறை; ஒரு மருத்துவச் சிகிச்சை அறை; போன்ற வசதிகளுடன் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி அமைக்கப்பட்டு உள்ளது. காலைப் பள்ளி மதியப் பள்ளி என இரு நேரங்களில் வகுப்புகள் நடைபெறுகின்றன.[2]

வரலாறு தொகு

1973-ஆம் ஆண்டுக்கு முன்னர் பட்டர்வொர்த் நகரில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் செயல் பட்டு வந்தன. முதல் தமிழ்ப்பள்ளி: கம்போங் பங்காளி தமிழ்ப்பள்ளி என்று அழைக்கப் பட்டது. இப்பள்ளி உமையவள் இந்து சபாவின் ஆதரவில் இயங்கி வந்தது. அப்பள்ளியில் முதல் மூன்று வகுப்புகள் மட்டுமே போதிக்கப் பட்டு வந்தன.

இரண்டாவது தமிழ்ப்பள்ளி: இந்தியர் சங்கத் தமிழ்ப்பள்ளி. இந்தப் பள்ளியின் நான்காம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பு வரை பாடங்கள் போதிக்கப் பட்டன. இந்த இரு பள்ளிகளையும் ஒன்றிணைத்து 573 மாணவர்களுடன் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி எனும் ஒரு புதிய தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது.

பி.இராஜகோபால் தொகு

1970-ஆம் ஆண்டுகளில் இந்தப் பள்ளிக்குத் தனிக் கட்டடம் என்று எதுவும் இல்லாமல் இருந்தது. அதனால் அது ஒரு தேசிய மலாய்ப் பள்ளியுடன் இணைந்து செயல் பட்டு வந்தது. அப்போது அந்தப் பள்ளியின் முதல் தலைமையாசிரியர் பொறுப்பை பி. இராஜகோபால் என்பவர் ஏற்று இருந்தார். அப்போது 14 ஆசிரியர்கள் பணியாற்றினார்கள்.

1980-ஆம் ஆண்டில் மு. அர்ஜுனன் என்பவர் தலைமையாசிரியர் பொறுப்பை ஏற்றார். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பின்னர், 1986-ஆம் ஆண்டில் கு.மோகன் என்பவர் தலைமையாசிரியர் ஆனார்.

டத்தோ பி.கே.சுப்பையா தொகு

அக்கால கட்டத்தில் இந்தப் பள்ளிக்குத் தனிக் கட்டடம் எதுவ்ம் இல்லை என்ற ஏக்கம் இந்த வட்டாரத் தமிழ் மக்களிடையே பரவலாக நிலவி வந்தது. பினாங்கு மாநில ம.இ.கா. முன்னாள் தலைவர் டத்தோ தெ. சுப்பையா, டத்தோ கு. இரஜபதி, டத்தோ பி.கே.சுப்பையா, பள்ளி நிர்வாக வாரியத் தலைவர் ஜி.இரத்தினசாமி, டத்தோ ஆர்.அருணாசலம், சா.பெரியகருப்பன், பி.சண்முகம், ச.தாமோதரன், எம்.சுப்பிரமணியம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஒன்றிணைந்து இந்தப் பள்ளிக்கு ஒரு தனி நிலம் கிடைக்க அரும் பாடு பட்டனர்.

1994-ஆம் ஆண்டில் புதிய கட்டடம் கிடைத்தது. 2003-ஆம் ஆண்டில் துன் ச. சாமிவேலு அவர்களின் உதவியோடு கல்வி அமைச்சின் ஆதரவில் பள்ளிக்கு மூன்று மாடிக் கட்டடம் ஒன்று கட்டப் பட்டது.

பள்ளியில் கணினிக்கூடம் தொகு

பள்ளியின் கட்டடப் பணிக்கு டத்தோ ஹென்றி பெனடிக் ஆசீர்வாதம், ஜி.இரத்தினசாமி, பொது மக்கள் மற்றும் பட்டர்வொர்த் வட்டார சமூக அமைப்புகளைச் சார்ந்தோரும் பெரும் ஆதரவுகளை வழங்கினார்கள். 2005-ஆம் ஆண்டு செபராங் ஜெயா அரிமா சங்கம்; மற்றும் பட்டர்வொர்த் அரிமா சங்கம் போன்றவற்றின் ஆதரவில் பள்ளியில் ஒரு கணினிக்கூடம் நிறுவப் பட்டது.[3]

தமிழ் பாலர் பள்ளி தொகு

2002-ஆம் ஆண்டு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முயற்சியால் மாக் மண்டின் தமிழ்ப் பாலர் பள்ளி அமைக்கப் பட்டது. 2009-ஆம் ஆண்டில் மலேசியச் சமூக கல்விக் கழகம் (Malaysia Community Education Fund) இரு பாலர் வகுப்பறைகளைக் கட்டித் தந்தது.

பள்ளி விளையாட்டுத் திடல் தொகு

2007-ஆம் ஆண்டு டத்தோ பி.கே. சுப்பையாவின் ஆதரவில் கல்வி அமைச்சிடம் இருந்து கணிசமான தொகை கிடைக்கப் பெற்றது. அதன் வழி பள்ளி விளையாட்டுத் திடல் சீரமைக்கப் பட்ட்து.

2008-ஆம் ஆண்டு பினாங்கு மாநில அரசாங்கத்தின் உதவியில் 80,000 ரிங்கிட் செலவில் பள்ளியைச் சுற்றிலும் ஆறு அடி உயரத்திற்கு சுவர் அமைக்கப் பட்டது. 2009-ஆம் ஆண்டு மாநில அரசாங்கத்தின் நிதி உதவியால் பள்ளிச் சிற்றுண்டிச்சாலை விரிவாக்கம் கண்டது.[4][5]

பள்ளி நிர்வாகம் தொகு

இந்தப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் கரு.இராஜமாணிக்கம் 2010-ஆண்டின் சிறந்த சாதனையாளர் விருதைப் பெற்றார். அவருடைய காலக் கட்டத்தில் பள்ளி பல வகைகளில் வளர்ச்சி கண்டது.

அவர் பணி புரிந்த காலத்தில் பள்ளியில் இசைக் குழு அமைக்கப் பட்டது. காற்பந்து, வலைப்பந்து, மும்மொழிப் போட்டி முதலியவற்றில் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி பல்வேறு பரிசுகளைப் பெற்று வாகை சூடியுள்ளது.

2010-ஆம் ஆண்டில் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 1010 ஆக உயர்ந்தது. அந்த ஆண்டு யு.பி.எஸ்.ஆர். தேர்வில் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாநில அளவில் சாதனையையும் படைத்தது. 13 மாணவர்கள் 7A க்கள் பெற்றனர். இது ஒரு பெரிய சாதனை. 13 மாணவர்கள் 6A + 1B; மற்றும் 7 மாணவர்கள் 5A + 2B க்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்து உள்ளனர்.

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்கு ஓர் ஏக்கர் நிலம் தொகு

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் புறப்பாட நடவடிக்கைகளை மேற்கொள்ள திடல் இல்லாமல் இருந்தனர். இப்போது அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மாநில அரசாங்கம் ஓர் ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு வாக்குறுதி அளித்துள்ளது.

பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப. இராமசாமி அப்பள்ளிக்கு விளையாட்டுத் திடல் அமைப்பதற்கு வாக்குறுதி வழங்கி உள்ளார். அத்துடன் இந்தப் பள்ளி வளாகத்தில் பல்நோக்கு பொது மண்டபம் கட்டுவதற்காக ரிங்கிட் 25 இலட்சம் நிதி தேவைப்படும் வேளையில், இதுவரை [ரிங்கிட்]] 15 இலட்சம் திரட்டப்பட்டு உள்ளது.[6]

பசுமைப் புரட்சி புத்தாக்கப் போட்டியில் சாதனை தொகு

ஆசியா-பசிபிக் ரீதியில் நடைபெற்ற ஒலிம்பியாட் பசுமைப் புரட்சி புத்தாக்க போட்டியில் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார்கள்.

மூன்று மாதங்கள் நடைபெற்ற இந்த பசுமைப் புரட்சி புத்தாக்கப் போட்டியில் பல நாடுகள் பங்கேற்றன. அவற்றுள் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி சேர்ந்த மாணவர்கள் எஸ். அம்புஜா, மேதனேஷ் மற்றும் தனியாமித்ரன் ஆகியோர் நீர் சுத்திகரிப்பு பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார்கள்.[7]

மேற்கோள் தொகு

  1. Penang Deputy Chief Minister II Prof Dr. P. Ramasamy, who played an instrumental role in helping to revive the building. Other than the classrooms, it has one library, one counseling room, one 21st century learning room, a canteen and so forth. Pupils from Year Four until Year Six are utilising the new building classrooms.
  2. பினாங்கு மாநிலத்தில் மிகப் பெரிய தமிழ்ப்பள்ளியாக மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி கருதப் படுகிறது.
  3. The school has a total of 16 classrooms and TCC assisted to upgrade 9 academic classrooms by installing 4 units of multimedia education systems in their Standard 5A, Standard 5B, Standard 6V and Standard 6K, and 5 units of LCD projectors in Standard 4A, Standard 4B, Standard 4K, Standard 4V and Standard 6B.
  4. The additional building constructed at the premises of Sekolah Jenis Kebangsaan Tamil (SJKT) Mak Mandin (Seberang Perai Utara), has received its Certificate of Completion and Compliance (CCC) and will be ready for the new school year on 2012 Jan 2.
  5. Kementerian Pendidikan Malaysia (KPM) dengan sukacita ingin dimaklumkan bahawa bangunan tambahan SJKT Mak Mandin, Pulau Pinang yang dibina di bawah Projek Rangsangan Khas pada tahun 2021 telah menerima Sijil Perakuan Siap dan Pematuhan (CCC) pada 27 Disember 2018 dan boleh digunakan mulai 2 Januari 2019.
  6. "மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்கு மாணவர் புறப்பாட நடவடிக்கைகளை மேற்கொள்ள மைதானம் இல்லாத பிரச்சினைக்கு மாநில அரசாங்கம் ஓர் ஏக்கர் நிலத்தை வழங்கி ஆதரவு தந்துள்ளது". Archived from the original on 2021-06-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-29.
  7. ஒலிம்பியாட் பசுமைப் புரட்சி புத்தாக்க போட்டியில் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றனர்.

மேலும் காண்க தொகு