மலேசிய தேசிய கட்சி

மலேசிய தேசிய கட்சி (மலாய்: Parti Bangsa Malaysia; (PBM) ஆங்கிலம்: மலேசிய தேசிய கட்சி; சீனம்: 全民党) என்பது மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மத்திய-வலதுசாரி அரசியல் கட்சி. சரவாக் தொழிலாளர் கட்சி (Sarawak Workers Party) என நிறுவப்பட்ட இந்தக் கட்சி, நவம்பர் 2021-இல் மலேசிய தேசிய கட்சி என பெயர் மாற்றம் கண்டது.

மலேசிய தேசிய கட்சி
Malaysian Nation Party
Parti Bangsa Malaysia
சுருக்கக்குறிPBM
தலைவர்லாரி வேய் சியென்
Larry Sng Wei Shien
நிறுவனர்சிங் சி உவா
Sng Chee Hua
தொடக்கம்2012
(Sarawak Workers Party - SWP)
சட்ட அனுமதி21 திசம்பர் 2021[1]
(PBM)
பிரிவு
முன்னர்
  • சரவாக் தொழிலாளர் கட்சி (SWP)
  • சபா மக்கள் முன்னணி (SPF)
தலைமையகம்கூச்சிங், சரவாக்
கொள்கைபல்லினவாதம்
குடிமை தேசியவாதம்
அரசியல் நிலைப்பாடுவலதுசாரி
நிறங்கள்     ஊதா
     வெள்ளை
பண்Majulah Bangsa Malaysia
மேலவை (மலேசியா)
0 / 70
மக்களவை (மலேசியா)
1 / 222
மாநில சட்டமன்றங்கள்
2 / 607
மந்திரி பெசார்
0 / 13
இணையதளம்
www.partibangsamalaysia.my

மலேசியாவின் 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்தக் கட்சி ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப்படுகிறது.[2]

வரலாறு

தொகு

தொடக்க காலத்தில், சரவாக் மாநிலத்தில் சரவாக் தொழிலாளர் கட்சி (Parti Pekerja Sarawak) (SWP) எனும் ஒரு கட்சி இருந்தது. இந்தக் கட்சி 2012-இல் உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சி சரவாக் மக்கள் கட்சியில் (மலாய்: (Parti Rakyat Sarawak) (PRS); ஆங்கிலம்: (Sarawak Peoples' Party) இருந்து பிளவுபட்ட கட்சியாகும்.[3]

சரவாக் மக்கள் கட்சியில் அதிருப்தி அடைந்த தலைவர் சிங் சி உவா (Sng Chee Hua) என்பவரால் மலேசிய தேசிய கட்சி எனும் ஒரு புதிய கட்சி உருவாக்கப்பட்டது. முதலில் அந்தக் கட்சி ’சபா மக்கள் முன்னணி’ (Sabah People's Front) என்று அழைக்கப்பட்டது. பாரிசான் நேசனல் கூட்டணியின் நட்புக் கட்சியாக இருந்தது.[4]

பின்னர் 2013-இல் சரவாக் தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவி லாரி வேய் சியென் (Larry Sng Wei Shien) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவரை பாரிசான் நேசனல் கூட்டணி ஏற்றுக் கொள்ளவில்லை.[5] [6]

இருப்பினும் பற்பல அரசியல் நெருக்கடிகளுக்குப் பின்னர் 8 சனவரி 2022-இல், லாரி வேய் சியென் அதிகாரப்பூர்வமான தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.[7][8]

மேற்கோள்கள்

தொகு
  1. "the Registration of Societies (RoS) has approved the change of SWP's name to PBM and its new constitution". The Star (Malaysia) (in ஆங்கிலம்).
  2. "New party Parti Bangsa Malaysia formed, Larry Sng to be deputy chief". The Star (Malaysia) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
  3. Nigel Edgar (8 May 2012). "Sabah People's Front reborn as Sarawak Workers Party". The Star (Malaysia). https://www.thestar.com.my/news/community/2012/05/08/sabah-peoples-front-reborn-as-sarawak-workers-party/. பார்த்த நாள்: 12 June 2018. 
  4. "Barisan Rakyat Sabah Bersekutu (English: Federated Sabah People's Front)". SINGAPORE ELECTIONS. Archived from the original on 28 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 13 April 2016.
  5. Yu Ji (20 April 2016). "Sarawak polls: SWP founder quits party". The Star (Malaysia). https://www.thestar.com.my/news/nation/2016/04/20/sarawak-polls-swp-founder-quits-party/. பார்த்த நாள்: 12 June 2018. 
  6. "Larry Sng: Personal vendetta tag is wrong". Borneo Post. 2012-09-01. பார்க்கப்பட்ட நாள் 2021-03-03.
  7. "Sarawak political parties, NGOs form new coalition". Borneo Post. 30 June 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  8. Yuen Meikeng (8 January 2022). "Julau MP Sng is PBM president". The Star (Malaysia). பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_தேசிய_கட்சி&oldid=4021403" இலிருந்து மீள்விக்கப்பட்டது