ராபிசி ராம்லி
ராபிஸி ராம்லி (மலாய்: Mohd Rafizi Ramli; ஆங்கிலம்: Rafizi Ramli); (பிறப்பு: செப்டம்பர் 14 1977) ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் மலேசியாவின் மக்கள் நீதிக் கட்சியின் (பி.கே.ஆர்.) பொதுச் செயலாளர்; மற்றும் சிலாங்கூர் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 2022 டிசம்பர் 3-ஆம் தேதி தொடக்கம் மலேசிய அமைச்சரவையில் பொருளாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றுள்ளார்.
ராபிஸி ராம்லி Rafizi Ramli | |
---|---|
மலேசிய பொருளாதாரத் துறை அமைச்சர் | |
ஆட்சியாளர் | சுல்தான் அப்துல்லா |
பிரதமர் | அன்வார் இப்ராகிம் |
Deputy | அனிபா அஜார் தாயிப் |
5-ஆவது தலைவர் மக்கள் நீதிக் கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 சூலை 2022 | |
குடியரசுத் தலைவர் | அன்வார் இப்ராகிம் |
முன்னையவர் | அஸ்மின் அலி |
[[மலேசிய நாடாளுமன்றம் நாடாளுமன்றம்]] பாண்டான் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2013 | |
மக்கள் நீதிக் கட்சியின் உதவித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 ஆகஸ்ட் 2014 | |
மக்கள் நீதிக் கட்சியின் பொது செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 13 October 2014 | |
மலேசிய நாடாளுமன்றம் நாடாளுமன்றம் பாண்டான் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 நவம்பர் 2022 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 செப்டம்பர் 1977 பெசுட், திராங்கானு, மலேசியா |
அரசியல் கட்சி | மக்கள் நீதிக் கட்சி – பாக்காத்தான் ஹரப்பான் |
முன்னாள் கல்லூரி | லீட்ஸ் பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | கணக்காளர் |
இணையத்தளம் | http://rafiziramli.com/ |
2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் (2022 Malaysian General Election) பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பி.கே.ஆர்.யின் சார்பில் ராபிஸி ராம்லி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] மே 2013 முதல் மே 2018 வரை; மீண்டும் நவம்பர் 2022 முதல் பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் மலேசியாவின் ஊழலை அம்பலப் படுத்துபவர்கள் (Whistleblower) அமைப்புகளான, தேசிய மேற்பார்வை மற்றும் ஊழலை அம்பலப் படுத்துபவர்கள் மையம் (National Oversight and Whistleblowers Centre (NOW); மற்றும் தேர்தல் தன்னார்வ அமைப்பான இன்வோக் மலேசியா (இன்வோக்) (Invoke Malaysia (INVOKE) ஆகிய இரண்டின் நிறுவனர் ஆவார்.[3][4]
பொது
தொகுஇவர் திராங்கானு மாநிலத்தின் பெசுட் (Besut) நகர்ப் பகுதியில் பிறந்தவர். கிழக்கு கடற்கரை நகரமான கெமாமான் (Kemaman) பகுதியில் வளர்ந்தவர். இவர் ஓர் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர்; இவரின் தந்தையார் ரப்பர் மரம் சீவும் தொழில் செய்தவர்.
கோலாகங்சார் மலாய் கல்லூரியில் (Malay College Kuala Kangsar) இடைநிலைக் கல்வியை முடித்த பிறகு, ஐக்கிய இராச்சியம் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் மின்பொறியியல் (Electrical Engineering at University of Leeds) படிக்க உதவித் தொகை வழங்கப்பட்டது.
மலேசிய சீர்திருத்த இயக்கம்
தொகுராபிஸி தன்னுடைய பல்கலைக்கழக நாட்களில் இருந்தே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 1998-ஆம் ஆண்டு மலேசியாவின் துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிம் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது, ராபிஸி அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டு சீர்திருத்த இயக்கத்தில் (Reformasi) இணைந்தார்.
2003-இல் மலேசியாவுக்குத் திரும்பியதும், 2003 முதல் 2009 வரை மலேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பெட்ரோனாஸில் அவர் பணியாற்றிய காலத்தில், பெட்ரோனாஸ் நிறுவனத்தில், பெட்ரோலிய வேதிமச் சொத்துக்களை நிர்வகிப்பது உட்பட பல முக்கிய துறைகளுக்குப் பொறுப்பு வகித்தார்.
2009-ஆம் ஆண்டில், சிலாங்கூர் பொருளாதார ஆலோசனை அலுவலகத்தின் (Selangor Economic Advisory Office) தலைமை நிர்வாகியாக நியமிக்கப் படுவதற்கு முன்பு, நல்வாழ்வியல் நிறுவனமான பார்மனியாகாவின் (Pharmaniaga) பொது மேலாளராகவும் பணி பிரிந்தார். அந்தப் பதவியில் சூலை 2012 வரை பொறுப்பு வகித்தார்.[5]
ஆண்டு | தொகுதி | கிடைத்த வாக்குகள் | பெரும்பான்மை | பெறப்பட்ட வாக்குகள் | எதிராளி | விளைபயன் |
---|---|---|---|---|---|---|
2013 | P100 பாண்டான், நாடாளுமன்ற தொகுதி |
48,183 | 21,454 | 73,225 | லிம் சின் இயீ (தேசிய முன்னணி - மலேசிய சீனர் சங்கம்) | 87.32% |
பாண்டான் நாடாளுமன்றத் தொகுதி
தொகுபாண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
அம்பாங் ஜெயாவில் இருந்து உருவாக்கப்பட்ட தொகுதி | |||
11-ஆவது | 2004–2008 | ஓங் தீ கியாட் | பாரிசான் (மசீச) |
12-ஆவது | 2008–2013 | ||
13-ஆவது | 2013–2018 | ராபிஸி ராம்லி | (பிகேஆர்) |
14-ஆவது | 2018–2022 | வான் அசிசா வான் இஸ்மாயில் | பாக்காத்தான் (பிகேஆர்) |
15-ஆவது | 2022-தற்போது வரையில் | ராபிஸி ராம்லி |
மலேசியப் பொதுத் தேர்தல், 2022 முடிவுகள்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | (%) | |
---|---|---|---|---|
பாக்காத்தான் ஹரப்பான் | ராபிஸி ராம்லி | 74,002 | 63.98 | |
பெரிக்காத்தான் நேசனல் | முகமட் ராபிக் | 25,706 | 22.23 | |
பாரிசான் நேசனல் | லியோங் கோக் வீ | 11,664 | 10.09 | |
சபா பாரம்பரிய கட்சி | ஓங் டி கீட் | 3,323 | 2.87 | |
தாயகப் போராளிகள் கட்சி | நதியா ஹனாபியா | 961 | 0.83 |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Rahimy Rahim (28 December 2018). "Rafizi Ramli, Chang Lih Kang and Ali Biju appointed as PKR VPs (Updated)". The Star (Malaysia). https://www.thestar.com.my/news/nation/2018/12/28/rafizi-ramli-and-chang-lih-kang-appointed-as-pkr-vps/.
- ↑ "PKR names 3 new vice-presidents".
- ↑ "NOW Malaysia - National Oversight & Whistleblowers". nowmalaysia.org. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-03-07.
- ↑ "INVOKE Malaysia : Objective". invokemalaysia.org. Archived from the original on 2018-09-16. பார்க்கப்பட்ட நாள் 2022-12-13.
- ↑ "Rafizi quits as CEO of Selangor economic advisor's office". The Malaysian Insider. 21 June 2012 இம் மூலத்தில் இருந்து 19 அக்டோபர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141019061631/http://www.themalaysianinsider.com/malaysia/article/rafizi-quits-as-ceo-of-selangor-economic-advisors-office. பார்த்த நாள்: 19 October 2014.