கனோவிட்

சரவாக் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்

கனோவிட் (மலாய் மொழி: Kanowit; ஆங்கிலம்: Kanowit; சீனம்: 加拿逸) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் சிபு பிரிவு; கனோவிட் மாவட்டத்தில் உள்ள நகரமாகும். ராஜாங் ஆற்றின் கரையில் கானோவிட் ஆற்றின் (Kanowit River) முகப்பில் உள்ளது.

கனோவிட் நகரம்
Kanowit Town
சரவாக்
கனோவிட் நகரம்
கனோவிட் நகரம் is located in மலேசியா
கனோவிட் நகரம்
கனோவிட் நகரம்
ஆள்கூறுகள்: 2°06′0″N 112°09′0″E / 2.10000°N 112.15000°E / 2.10000; 112.15000
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுசிபு
மாவட்டம்கனோவிட்
பரப்பளவு
 • மொத்தம்2,253.5 km2 (870.1 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்28,985
இணையத்தளம்Kanowit Administrative Division

தென் சீனக் கடலின் கடற்கரையில் இருந்து சுமார் 174 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிபு நகரில் இருந்து தரைவழிப் போக்குவரத்து மூலம் கனோவிட் நகரத்தை அடைய 45 நிமிடங்களும்; படகில் செல்ல ஒரு மணி நேரமும் பிடிக்கும்.

இந்த நகரின் முக்கிய இனக்குழுக்கள் இபான், சீனர், மலாய்க்காரர் மற்றும் மெலனாவ் பூர்வீக மக்கள்.

பொது

தொகு

மெலனாவ் இனக் குழுவினரில் கனோவிட் எனும் துணை இனத்தவர் உள்ளனர். அந்தப் பிரிவினரின் பெயரில் இருந்து கனோவிட் நகரமும் அதன் பெயரைப் பெற்றது. அப்பகுதியில் வாழும் கனோவிட் மக்களால் இன்றும் கானோவிட் மொழி பேசப்படுகிறது.

வரலாறு

தொகு

1846-ஆம் ஆண்டில், சரவாக் கூச்சிங் பகுதியின் எல்லைகளை டயாக் கடற்கொள்ளையர்கள் (Dayak Pirates) அடிக்கடி அச்சுறுத்தி வந்தனர். அவர்களை எதிர்த்துப் போராட, ஜேம்சு புரூக் ராஜாங் ஆற்றின் வழியாகக் கானோவிட் பகுதிக்குச் சென்றார். அவருக்கு உதவியாக கேப்டன் ரோட்னி முண்டி (Captain Rodney Mundy) என்பவரும் உடன் சென்றார்.

1846 ஜூன் 29-ஆம் தேதி கனோவிட் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அங்குள்ள கனோவிட் மக்களுடன் அவர்களின் முதல் தொடர்பு நல்ல முறையில் அமைந்தது. 1851-ஆம் ஆண்டில், ஜேம்சு புரூக் அங்கு ஒரு கோட்டையைக் கட்டினார். அதன் பெயர் எம்மா கோட்டை (Fort Emma). ஆனாலும் அப்போது கானோவிட் நிலப்பகுதி, புரூணை பேரரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

டயாக் கொள்ளையர்கள்

தொகு

1853-இல், ஜேம்சு புரூக், புரூணை சுல்தானகத்திடம் இருந்து ராஜாங் ஆறு மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளைப் பெற்றுக் கொண்டார். ஏற்கனவே கட்டப்பட்ட எம்மா கோட்டை, ராஜாங் ஆற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு டயாக் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு அளித்தது.

இதைத் தொடர்ந்து, 1870-களில், சிங்கப்பூர் மற்றும் சீனாவின் புஜியான் மாநிலத்தைச் சேர்ந்த ஹொக்கியன் சீனர்கள் (Hokkien Chinese) கனோவிட்டில் குடியேறினார்கள்.

சிங்கப்பூர் சீன வணிகர்கள்

தொகு

சிங்கப்பூரில் இருந்து சீன வணிகர்கள் துணிகள், ஜாடிகள், உப்பு மற்றும் பிற அன்றாடத் தேவைப் பொருட்களைக் கொண்டு வந்தனர்.

அந்தப் பொருட்களுக்குப் பதிலாக பிரம்புகள், காட்டு மாடுகளின் தோல்கள், கற்பூரம், காண்டாமிருகத்தின் கொம்புகள், குரங்குகளின் பித்தப்பைக் கற்கள் ஆகியவற்றைப் பெற்றுச் சென்றனர்.

காலநிலை

தொகு

கனோவிட் நகரம் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமான மழை பெய்யும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், Kanowit
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 30.1
(86.2)
30.3
(86.5)
31.3
(88.3)
31.9
(89.4)
32.3
(90.1)
32.1
(89.8)
32.0
(89.6)
31.7
(89.1)
31.6
(88.9)
31.5
(88.7)
31.3
(88.3)
30.7
(87.3)
31.4
(88.52)
தினசரி சராசரி °C (°F) 26.1
(79)
26.2
(79.2)
27.0
(80.6)
27.2
(81)
27.6
(81.7)
27.3
(81.1)
27.1
(80.8)
26.9
(80.4)
26.9
(80.4)
27.0
(80.6)
26.8
(80.2)
26.4
(79.5)
26.88
(80.38)
தாழ் சராசரி °C (°F) 22.2
(72)
22.2
(72)
22.7
(72.9)
22.6
(72.7)
22.9
(73.2)
22.5
(72.5)
22.2
(72)
22.1
(71.8)
22.3
(72.1)
22.5
(72.5)
22.4
(72.3)
22.2
(72)
22.4
(72.32)
மழைப்பொழிவுmm (inches) 351
(13.82)
293
(11.54)
315
(12.4)
248
(9.76)
279
(10.98)
227
(8.94)
177
(6.97)
244
(9.61)
315
(12.4)
288
(11.34)
288
(11.34)
362
(14.25)
3,387
(133.35)
ஆதாரம்: Climate-Data.org[1]

கனோவிட் காட்சியகம்

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Climate: Kanowit". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கனோவிட்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கனோவிட்&oldid=3644989" இலிருந்து மீள்விக்கப்பட்டது