சரவாக் தேசிய கட்சி

மலேசிய அரசியல் கட்சி

சரவாக் தேசிய கட்சி (ஆங்கிலம்: Sarawak National Party; மலாய்: Parti Kebangsaan Sarawak) (SNAP) என்பது மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் இருந்த ஓர் அரசியல் கட்சி; தற்போது செயலிழந்த அரசியல் கட்சியாகும்.

சரவாக் தேசிய கட்சி
Sarawak National Party
Parti Kebangsaan Sarawak
ڤرتي كبڠسأن سراوق
砂拉越國民黨
சுருக்கக்குறிSNAP
தலைவர்எட்மன்ட் இஸ்டேன்ட்லி ஜுகோல்
(Edmund Stanley Jugol)
தொடக்கம்10 ஏப்ரல் 1961
சட்ட அனுமதி2013; 11 ஆண்டுகளுக்கு முன்னர் (2013)
கலைப்பு17 சனவரி 2013
பின்னர்சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி
புதிய சரவாக் தேசிய கட்சி
தலைமையகம்கூச்சிங், சரவாக்
தேசியக் கூட்டணிமலேசிய கூட்டணி (1963–66)
பாரிசான் நேசனல் (1976–2004)
பாக்காத்தான் ராக்யாட் (2010–2011)
நிறங்கள்நீலம், அரக்கு, மஞ்சள், வெள்ளை, சாம்பல்

1963 முதல் 1966 வரை மலேசிய கூட்டணியின் உறுப்பினர் கட்சியாகவும், 1976 முதல் 2004-இல் அந்தக் கட்சி வெளியேற்றப்படும் வரையில் பாரிசான் நேசனல் (BN) கூட்டணியின் உறுப்பினராகவும் இருந்தது.[1]

ஏப்ரல் 10, 1961-இல் நிறுவப்பட்ட இந்தக் கட்சி, சரவாக் மாநிலத்தில் தயாக்கு பழங்குடி மக்களின் மிகப் பழைமையான அரசியல் கட்சி என அறியப்படுகிறது.[2]

பொது

தொகு

இந்தக் கட்சியின் முதல் பொதுச்செயலாளர் இஸ்டீபன் காலோங் நிங்கான் (Stephen Kalong Ningkan) ஆவார். இவர் ஒரு மருத்துவமனை உதவியாளராகப் பணிபுரிந்தவர் ஆவார். பின்னர் அவர் இதே கட்சியின் தலைவராகவும் சரவாக்கின் முதல் முதலமைச்சராகவும் (1963-1966) பொறுப்பு வகித்தார்.

இந்தக் கட்சி 2004 மலேசியப் பொதுத் தேர்தலிலும்; 2006-ஆம் ஆண்டு, 2011-ஆம் ஆண்டு சரவாக் மாநிலத் தேர்தல்களிலும் எதிர்க்கட்சியாகப் போட்டியிட்டது.

பதிவு நீக்கம்

தொகு

ஏப்ரல் 2010 முதல் ஏப்ரல் 2011 வரை, அப்போதைய கூட்டாட்சி எதிர்க்கட்சியான பாக்காத்தான் ராக்யாட் (PR) கூட்டணியில், இந்தச் சரவாக் தேசிய கட்சி இணைந்து இருந்தது.[3]

5 நவம்பர் 2002 அன்று, இந்தக் கட்சியை மலேசியச் சங்கங்களின் பதிவாளர் (Registrar of Societies) பதிவு நீக்கம் செய்தார்.[4] இந்தக் கட்சி தன்னுடைய தலைமைத்துவ நெருக்கடியைத் தீர்க்கத் தவறியதாக 17 சனவரி 2013 அன்று மலேசிய உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.[5]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவாக்_தேசிய_கட்சி&oldid=4075763" இலிருந்து மீள்விக்கப்பட்டது