சரவாக் பிரதமர்
சரவாக் பிரதமர் (மலாய்: Premier Sarawak; ஆங்கிலம்: Premier of Sarawak; சீனம்: 砂拉越州长) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் அரசாங்கத் தலைவரைக் குறிப்பதாகும். யாங் டி பெர்துவா சரவாக் என்று அழைக்கப்படும் மாநில ஆளுநரால் சரவாக் பிரதமர் நியமிக்கப் படுகிறார்.
Sarawak சரவாக் பிரதமர் Premier Sarawak Premier of Sarawak | |
---|---|
சரவாக் மாநிலச் சின்னம் | |
சரவாக் மாநிலக் கொடி | |
சரவாக் அரசாங்கம் | |
பதவி | அரசாங்க நிர்வாகத் தலைவர் |
உறுப்பினர் | சரவாக் அமைச்சரவை |
அறிக்கைகள் | சரவாக் மாநில சட்டமன்றம் |
அலுவலகம் | மலேசியத் தந்தையார் வளாகம் Wisma Bapa Malaysia, Petra Jaya, Kuching |
நியமிப்பவர் | துன் பெகின் ஸ்ரீ அப்துல் தாயிப் மகமுட் (Abdul Taib Mahmud) யாங் டி பெர்துவா சரவாக் |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் |
அரசமைப்புக் கருவி | Constitution of the State of Sarawak |
முதலாவதாக பதவியேற்றவர் | காலோங் நிங்கான் (Stephen Kalong Ningkan) (முதலமைச்சர்) |
உருவாக்கம் | 22 சூலை 1963மந்திரி பெசார் (Chief Minister) 1 மார்ச்சு 2022 |
துணை சரவாக் பிரதமர் Premier Sarawak Premier of Sarawak | சரவாக் துணைப் பிரதமர் (Deputy Premier of Sarawak) |
இணையதளம் | premier.sarawak.gov.my |
சரவாக் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்ற ஓர் அரசியல் கட்சி அல்லது ஓர் அரசியல் கூட்டணியின் தலைவராகவும் சரவாக் பிரதமர் பொறுப்பு வகிக்கிறார்.[1]
பொது
தொகுசரவாக் பிரதமர் எனும் இந்தப் புதிய பதவிக்கு முன்பு, அந்தப் பதவி சரவாக் முதல்வர் என்று அழைக்கப்பட்டது. 2022 பிப்ரவரி 15-ஆம் தேதி சரவாக் மாநில அரசியலமைப்பில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி சரவாக் முதல்வர் எனும் பதவி; "பிரதமர்" பதவி என்று மறுபெயரிடப் பட்டது. அரசியலமைப்புத் திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டு 2022 மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வந்தது.[2]
சரவாக் மாநிலத்தின் தற்போதைய பிரதமர் அபாங் ஜொகாரி ஒப்பேங் (Abang Abdul Rahman Johari Abang Openg) ஆவார். இவர் 2017 சனவரி 13-ஆம் தேதி சரவாக் மாநிலத்தின் முதலமைச்சராக (மந்திரி பெசார்) பதவியேற்றார். தற்சமயம் சரவாக் பிரதமர் என்று அழைக்கப் படுகிறார்.[3][4]
வரலாறு
தொகு1963-ஆம் ஆண்டு சூலை 22-ஆம் தேதி சரவாக்கிற்கு சுயாட்சி வழங்கப்பட்டது. அப்போது தான் சரவாக்கின் முதலமைச்சர் (Chief Minister of Sarawak) பதவி உருவாக்கப்பட்டது. அந்த வகையில் சரவாக்கின் முதலமைச்சர் பதவியை முதன்முதலாக வகித்தவர் இஸ்டீபன் காலோங் நிங்கான் (Stephen Kalong Ningkan). சரவாக் வரலாற்றில் முக்கியமானவர் என இன்றும் அறியப் படுகிறார்.[5]
2022 பிப்ரவரி மாதம் சரவாக்கின் முதலமைச்சர் பதவியை பிரதமர் பதவியாக மாற்ற வேண்டும் எனும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1963-ஆம் ஆண்டு கையெழுத்தான மலேசிய ஒப்பந்தத்தின் (1963 Malaysia Agreement) (MA63) கீழ் சரவாக்கின் உரிமைகளை மீட்பதற்கான முயற்சியாகக் கருதப்பட்டது.[6]
மலேசிய ஒப்பந்தம் 1963
தொகுமலாக்கா; பினாங்கு மாநிலங்களிலும் அந்த மாநிலங்களை வழிநடத்த முதலமைச்சர்கள் உள்ளனர். அந்த முதலமைச்சர்களுடன் சரவாக் முதலமைச்சரை ஒப்பீடு செய்வதைத் தவிர்ப்பதற்காக சரவாக் பிரதமர் பதவி முன்மொழியப்பட்டது.[6]
மலேசியா கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது மலேசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஐக்கிய இராச்சியம்; சிங்கப்பூர்; மலாயா கூட்டமைப்பு; சபா ஆகியவற்றுடன் சரவாக் இராச்சியமும் கையெழுத்திட்டது. 2022 பிப்ரவரி 15-ஆம் தேதி, "சரவாக் முதல்வர்" எனும் பதவி; "சரவாக் பிரதமர்" பதவி என்று மாற்றம் செய்யப் பட்டது.[6][7]
அபாங் ஜொகாரி ஒப்பேங்
தொகுசரவாக் பிரதமர் என்பதற்கான சட்டத் திருத்தம் 2022 மார்ச் 1-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப் பட்டது. ஏற்கனவே சரவாக் மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்து வந்த அபாங் ஜொகாரி ஒப்பேங் என்பவர் சரவாக் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார். இவர் சரவாக்கின் 6-ஆவது முதலமைச்சரும் கடைசி முதலமைச்சரும் ஆவார்.
சரவாக் முதலமைச்சர்கள் பட்டியல்
தொகு1963-ஆம் ஆண்டு தொடங்கி 2022-ஆம் ஆண்டு வரையிலான சரவாக் மாநிலத்தின் முதலமைச்சர்களின் பட்டியல் பின்வருமாறு:
சரவாக் கூட்டணி (Sarawak Alliance) ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (PESAKA) பாரிசான் நேசனல் சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)
# | தோற்றம் | பெயர் (பிறப்பு–இறப்பு) |
பதவியில் | கட்சி | தேர்தல் | கூட்டத் தொடர் | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
பதவியேற்பு | பதவி விலகல் | பதவி காலம் | |||||||
1 | இஸ்டீபன் காலோங் நிங்கான் (Stephen Kalong Ningkan) (1920–1997) |
22 சூலை 1963 |
23 செப்டம்பர் 1966 |
3 ஆண்டுகள், 63 நாட்கள் | சரவாக் கூட்டணி (சரவாக் தேசிய கட்சி) (SNAP) |
1963 சரவாக் தேர்தல் | – | ||
2 | தாவி சிலி (Tawi Sli) (1912–1987) |
23 செப்டம்பர் 1966 |
7 சூலை 1970 |
3 ஆண்டுகள், 287 நாட்கள் | ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (PESAKA) | – | – | ||
3 | அப்துல் ரகுமான் யாக்கோப் (Abdul Rahman Ya'kub) (1928–2015) |
7 சூலை 1970 |
26 மார்ச் 1981 |
10 ஆண்டுகள், 262 நாட்கள் | சரவாக் கூட்டணி (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (BUMIPUTERA) |
1969 சரவாக் தேர்தல் | 8-ஆவது | ||
பாரிசான் (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB) |
1974 சரவாக் தேர்தல் | 9-ஆவது | |||||||
1979 சரவாக் தேர்தல் | 10-ஆவது | ||||||||
4 | அப்துல் தாயிப் முகமட் (Abdul Taib Mahmud) (1936–2024) |
26 மார்ச் 1981 |
28 பிப்ரவரி 2014 |
32 ஆண்டுகள், 339 நாட்கள் | பாரிசான் (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB) |
– | |||
1983 சரவாக் தேர்தல் | 11-ஆவது | ||||||||
1987 சரவாக் தேர்தல் | 12-ஆவது | ||||||||
1991 சரவாக் தேர்தல் | 13-ஆவது | ||||||||
1996 சரவாக் தேர்தல் | 14-ஆவது | ||||||||
2001 சரவாக் தேர்தல் | 15-ஆவது | ||||||||
2006 சரவாக் தேர்தல் | 16-ஆவது | ||||||||
2011 சரவாக் தேர்தல் | 17-ஆவது | ||||||||
5 | அட்னான் சாத்திம் (Adenan Satem) (1944–2017) |
1 மார்ச் 2014 |
11 சனவரி 2017 |
2 ஆண்டுகள், 316 நாட்கள் | பாரிசான் (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB) |
– | |||
2016 சரவாக் தேர்தல் | 18-ஆவது | ||||||||
6 | அபாங் ஜொகாரி ஒப்பேங் (Abang Abdul Rahman Zohari Abang Openg) (பிறப்பு 1950) |
13 சனவரி 2017 |
1 மார்ச் 2022 |
5 ஆண்டுகள், 47 நாட்கள் | பாரிசான் (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB) |
– | |||
சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB) | |||||||||
2021 சரவாக் தேர்தல் | 19-ஆவது |
சரவாக் பிரதமர்கள்
தொகு2022-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான சரவாக் மாநிலத்தின் பிரதமர்களின் பட்டியல் பின்வருமாறு:
# | தோற்றம் | பெயர் (பிறப்பு–இறப்பு) |
பதவியில் | கட்சி | தேர்தல் | கூட்டத் தொடர் | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
பதவியேற்பு | பதவி விலகல் | பதவி காலம் | |||||||
(6) | அபாங் ஜொகாரி ஒப்பேங் (Abang Zohari Openg) (பிறப்பு 1950) |
1 மார்ச் 2022 |
பதவியில் | 2 ஆண்டுகள், 311 நாட்கள் | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB) |
– | 19-ஆவது |
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்
தொகு- ↑ Constitution of the State of Sarawak. Archived from the original on 2022-03-28. பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.
- ↑ Wen, Lok Jian (2022-02-15). "Sarawak vote to call its leader 'premier' could be first step to greater autonomy". The Straits Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-16.
- ↑ "Abang Jo sworn in as Sarawak's 6th Chief Minister". The Star. 13 January 2019. https://www.thestar.com.my/news/nation/2017/01/13/abang-jo-sworn-in-as-sarawak-6th-chief-minister/.
- ↑ "Biography of the Chief Minister". Official Website Office of the Chief Minister. Archived from the original on 31 July 2019. பார்க்கப்பட்ட நாள் 31 July 2019.
- ↑ "Revisiting 48 years of leadership". The Borneo Post. 16 September 2011. http://www.theborneopost.com/2011/09/16/revisiting-48-years-of-leadership/.
- ↑ இங்கு மேலே தாவவும்: 6.0 6.1 6.2 "Abdul Karim: 'Premier' instead of CM because Sarawak's different from other states in Malaysia". 15 February 2022. https://www.theborneopost.com/2022/02/15/abdul-karim-premier-instead-of-cm-because-sarawaks-different-from-other-states-in-malaysia. பார்த்த நாள்: 7 July 2022.
- ↑ "Chief Minister's post officially renamed to Premier after vote passes in Sarawak DUN". 15 February 2022. https://dayakdaily.com/chief-ministers-post-renamed-to-premier-passes-in-sarawak-dun/. பார்த்த நாள்: 7 July 2022.