மலேசிய ஒப்பந்தம்

மலேசியா எனும் கூட்டமைப்பை உருவாக்க செய்து கொண்ட ஒப்பந்தம்

மலேசிய ஒப்பந்தம் (ஆங்கிலம்: Malaysia Agreement (MA63); மலாய்: Perjanjian Malaysia சீனம்: 马来西亚协定) என்பது ஐக்கிய இராச்சியம் (United Kingdom of Great Britain), வடக்கு அயர்லாந்து (Northern Ireland), மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya), வடக்கு போர்னியோ (North Borneo), சரவாக் (Sarawak) மற்றும் சிங்கப்பூர் (Singapore) ஆகிய நிலப்பகுதிகள்; மலேசியா எனும் ஒரு கூட்டமைப்பை உருவாக்குவதற்கு செய்து கொண்ட ஓர் ஒப்பந்தமாகும்.[3]

மலேசிய ஒப்பந்தம்
Malaysia Agreement
ஐக்கிய இராச்சியம், வடக்கு அயர்லாந்து, மலாயா கூட்டமைப்பு, வடக்கு போர்னியோ, சரவாக், சிங்கப்பூர் நிலப் பகுதிகளுக்கு இடையே மலேசியா தொடர்பான ஒப்பந்தம்
மலேசியா தொடர்பான ஒப்பந்தம்
வரைவு15 நவம்பர் 1961
கையெழுத்திட்டது9 சூலை 1963
இடம்இலண்டன், ஐக்கிய இராச்சியம்
முத்திரையிட்டது31 சூலை 1963
நடைமுறைக்கு வந்தது16 செப்டம்பர் 1963
கையெழுத்திட்டோர்
தரப்புகள்
வைப்பகம்
மொழிகள்ஆங்கிலம், மலாய்
முழு உரை
Agreement relating to Malaysia between United Kingdom of Great Britain and Northern Ireland, Federation of Malaya, North Borneo, Sarawak and Singapore விக்கிமூலத்தில் முழு உரை

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி (Crown Colony of North Borneo); பிரித்தானிய சரவாக் முடியாட்சி (Crown Colony of Sarawak); சிங்கப்பூர் காலனி (Colony of Singapore); மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) ஆகிய நிலப்பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டன. அந்த ஒன்றிணைப்பின் மூலமாக மலேசியா (Malaysia) எனும் ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.[4][5]

பொது

தொகு

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) என்பது மலேசியா (Malaysia) என்று 1963 செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி புதிய பெயரைப் பெற்றது.[6]

மலேசியாவின் ஒரு மாநிலமாக இருந்த சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து 1965 ஆகத்து மாதம் 9-ஆம் தேதி வெளியேற்றப் பட்டது. பின்னர் பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடாக அறிவித்தது.[7]

பின்னணி

தொகு

1946-ஆம் ஆண்டில், மலாயா ஒன்றியம் எனும் மலாயன் யூனியன் பிரித்தானிய மலாயாவால் (British Malaya). நிறுவப்பட்டது. இந்த ஒன்றியத்தில் மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் (Federated Malay States) (FMS):[8]

  1. சிலாங்கூர்
  2. பேராக்
  3. நெகிரி செம்பிலான்
  4. பகாங்

மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள் (Unfederated Malay States):

  1. ஜொகூர்
  2. கெடா
  3. கிளாந்தான்
  4. பெர்லிஸ்
  5. திராங்கானு
  1. மலாக்கா
  2. பினாங்கு
  3. சிங்கப்பூர்

மேற்காணும் மாநிலங்களை இணைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் மலாயா ஒன்றியம் உருவானது. ஐக்கிய இராச்சியம் மற்றும் மலாயா ஒன்றியம் இடையிலான தொடர் ஒப்பந்தங்களின் மூலம் 1946 ஏப்ரல் 1-ஆம் தேதி, அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.

சிங்கப்பூர் முடியாட்சி காலனி

தொகு

அதன் ஆளுநராக சர் எட்வர்டு ஜென்ட் (Sir Edward Gent) என்பவர் பதவி ஏற்றுக் கொண்டார். மலாயா ஒன்றியத்தின் தலைநகரம் கோலாலம்பூர் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 1 பிப்ரவரி 1948-இல் மலாயா ஒன்றியம் கலைக்கப்பட்டு, மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) என்று மாற்றம் கண்டது.

முன்னாள் நீரிணைக் குடியேற்ற மாநிலங்களில் ஒன்றான சிங்கப்பூர் தனி ஒரு முடியாட்சிக் காலனி (Crown Colony of Singapore) என்றும் அறிவிக்கப்பட்டது.[9]

மலேசிய சட்டம் 1963

தொகு

ஐக்கிய இராச்சியம் மற்றும் மலாயா கூட்டமைப்பு ஆகிய இரு தரப்புகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட மலேசிய ஒப்பந்தத்தின் கீழ், சிங்கப்பூர், சரவாக் மற்றும் வடக்கு போர்னியோ (இப்போது சபா) மீதான இறையாண்மைக் கட்டுப்பாட்டை கைவிட ஐக்கிய இராச்சியம் ஒரு சட்டத்தை இயற்றும் என்று அறிவிக்கப்பட்டது.[10]

மலேசிய சட்டம் 1963, சரத்து 1(1) (Malaysia Act 1963, Clause 1(1) இயற்றப்பட்டதன் மூலம் நிறைவேற்றப்பட்டது. 31 ஆகத்து 1957-இல் மலாயா சுதந்திரம் அடைந்தது. அன்றைய நாள், ஐக்கிய இராச்சியத்தின் இறையாண்மையும் அதிகார வரம்பும் கைவிடப்பட்டன.[5]

மலேசிய அரசியலமைப்பு

தொகு

மலேசிய அரசியலமைப்பு (Constitution of Malaysia) என்பது மலேசியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். 1957-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. மொத்தம் 183 சட்டப் பிரிவுக் கூறுகளைக் கொண்டுள்ளது.[11] மலேசிய அரசியலமைப்பு என்பது ஓர் உச்சக்கட்ட சட்ட ஆவணமாகும்.

  1. மலாயா ஒப்பந்தம் 1948
  2. சுதந்திர அரசியலமைப்பு 1957

ஆகிய இரண்டு ஆவணங்களும் ஏற்கனவே மலாயாவில் உருவாக்கப்பட்ட சட்ட ஆவணங்களாகும். மேலே குறிப்பிடப்பட்ட முந்தைய சட்ட ஆவணங்களைச் சார்ந்த நிலையில் தான் புதிய மலேசிய அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது.

தொடக்கத்தில் மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) என்று அழைக்கப்பட்டது. சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் மலாயா மாநிலங்கள், கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இணைந்த போது, மலேசியா எனும் பெயர் உருவானது.[12]

மேற்கோள்கள்

தொகு
  1. United Nations General Assembly Resolution 97 (1).
  2. "Wayback Machine" (PDF). web.archive.org. 2011-05-14. Archived from the original (PDF) on 14 May 2011. பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
  3. "Malaysia Act 1963".
  4. See: The UK Statute Law Database: the Acts of the Parliament of the United Kingdom Malaysia Act 1963
  5. 5.0 5.1 See: The UK Statute Law Database: the Acts of the Parliament of the United Kingdom Federation of Malaya Independence Act 1957 (c. 60)
  6. "History of the Constitution – The basis of the Federal Constitution of Malaysia is the Constitution of the Federation of Malaya". Archived from the original on 2012-12-19. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
  7. "On 9 August 1965, Singapore separated from Malaysia to become an independent and sovereign state. The separation was the result of deep political and economic differences between the ruling parties of Singapore and Malaysia, which created communal tensions that resulted in racial riots in July and September 1964". eresources.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 10 February 2023.
  8. See: Cabinet Memorandum by the Secretary of State for the Colonies. 21 February 1956 Federation of Malaya Agreement
  9. See: the Independence of Singapore Agreement 1965 and the Acts of the Parliament of the United Kingdom Singapore Act 1966.
  10. See: Section 1(1), Malaysia Act 1963, Chapter 35 (UK).
  11. See Article 4(1) of the Constitution which states that "The Constitution is the supreme law of the Federation and any law which is passed after Merdeka Day (31 August 1957) which is inconsistent with the Constitution shall to the extent of the inconsistency be void."
  12. Article 1(1) of the Constitution originally read "The Federation shall be known by the name of Persekutuan Tanah Melayu (in English the Federation of Malaya)". This was amended in 1963 when Malaya, Sabah, Sarawak, and Singapore formed a new federation to "The Federation shall be known, in Malay and in English, by the name Malaysia."

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_ஒப்பந்தம்&oldid=4120092" இலிருந்து மீள்விக்கப்பட்டது