கருப்பையா முத்துசாமி

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்

கருப்பையா முத்துசாமி, (மலாய்: Karupaiya Muthusami; ஆங்கிலம்: Karupaiya s/o Muthusami; சீனம்: 卡魯派亞穆圖薩米); (பிறப்பு: 4 பிப்ரவரி 1953; இறப்பு: 16 நவம்பர் 2022), என்பவர் ஓர் அரசியல்வாதி; மலேசியா, கெடா, பாடாங் செராய் (Padang Serai) தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

கருப்பையா முத்துசாமி
Karupaiya Muthusami
[[மலேசிய இந்தியர் நாடாளுமன்றம்]]
பாடாங் செராய், கெடா
பதவியில்
9 மே 2018 – 16 நவம்பர் 2022
முன்னையவர்சுரேந்திரன் நாகராஜன்
(பாக்காத்தான் ஹரப்பான்)
மக்கள் நீதிக் கட்சி)
பெரும்பான்மை8,813 (2018)
மக்களவை
2018–2022பக்காத்தான் ஹரப்பான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கருப்பையா முத்துசாமி

1953 (1953)
பாடாங் செராய், கெடா, மலேசியா
இறப்பு (அகவை 69)
கூலிம், கெடா, மலேசியா
குடியுரிமைமலேசியர்
அரசியல் கட்சிமக்கள் நீதிக் கட்சி (PKR)
(2018–2022)
பிற அரசியல்
தொடர்புகள்
பாக்காத்தான் ஹரப்பான் (PH)
(2015–2022)
பிள்ளைகள்3
வேலைஅரசியல்வாதி

இவர் பாடாங் செராய் தொகுதியில் 2018-ஆம் ஆண்டு தொடங்கி நவம்பர் 2022 வரையில் மக்களவை உறுப்பினராகச் சேவை செய்தவர். 15-ஆவது மலேசியப் பொதுத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார்.[1]

பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஒரு கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் பாடாங் செராய் தொகுதித் தலைவராகவும் இருந்தார். இவர் முன்னாள் மலேசிய ஆயுதப் படையில் சேவை செய்தவர்.

பொது

தொகு

அத்துடன் இவர் மலேசிய இந்திய ஆயுதப் படை உறுப்பினர்களின் (Malaysian Indian Armed Forces - PERIM) புரவலராகப் பதவி வகித்தவர்; புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப் பள்ளியின் முதுகலைக் கல்வி கழகத்தின் (Institute of Postgraduate Studies - IPS) வாரியக் குழுவின் உறுப்பினரும் ஆகும்.[2][3]

இவர் ஒரு தமிழார்வலர். கெடா மாநிலத்தில் பாடாங் செராய்; கூலிம்; புக்கிட் மெர்தாஜாம் போன்ற இடங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு நிறைய உதவிகள் செய்து உள்ளார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

2022 நவம்பர் 16-ஆம் தேதி பொதுத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது கருப்பையா முத்துசாமி மாரடைப்பால் காலமானார்.[5]

அவர் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாக போட்டியிடும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். அவர் பாக்காத்தான் ஹரப்பான் அணியின் மக்கள் நீதிக் கட்சியைப் பிரதிநிதித்து தேர்தலில் போட்டியிட்டார். 2018 முதல் 2022 வரையில், இறக்கும் வரை நான்கு ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[6]

அவர் இறந்த அதே நாளில், மலேசியத் தேர்தல் ஆணையம் (Election Commission of Malaysia) அவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தது. பாடாங் செராய் தேர்தலின் தேதிகளை முடிவு செய்வதற்காக இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தும் என்றும் தெரிவித்தது.[7]

அரசியல்

தொகு
மலேசிய நாடாளுமன்றம்[8][9][10]
ஆண்டு தொகுதி வாக்குகள் % எதிர்க்கட்சி வாக்குகள் % வாக்குகள் பெரும்
பான்மை
%
2018 P17 பாடாங் செராய், கெடா கருப்பையா முத்துசாமி (பி.கே.ஆர்) 31,724 37.40%
லியோங் யோங் கோங் (ம.சீ.ச) 15,449 18.20% 70,911 8,813 83.59%
முகமது சப்ரி ஒஸ்மான்(பாஸ்) 22,911 27.00%

பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியின் தமிழர்கள்

தொகு

பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியை 2008-ஆம் ஆண்டில் இருந்து, கடந்த 13 ஆண்டுகளாகத் தமிழர்கள் தக்க வைத்துக் கொண்டு வருகின்றனர். இந்தத் தொகுதியில் மலாய்க்காரர்களும், சீனர்களும் அதிகமான வாக்காளர்களாக இருந்தாலும் மூன்று முறை தமிழர்களைத் தேர்ந்து எடுத்து மலேசிய நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் 2008-ஆம் ஆண்டில் இருந்து 2021-ஆம் ஆண்டு வரையில் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்த தமிழர்கள்:

பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
12-ஆவது நாடாளுமன்றத் தொடர் 2008 – 2011 கோபாலகிருஷ்ணன் நாகப்பன் பி.கே.ஆர்.
2011–2013 சுயேச்சை
13-ஆவது நாடாளுமன்றத் தொடர் 2013 – 2018 ந. சுரேந்திரன் நாகராஜன் பி.கே.ஆர்.
14-ஆவது நாடாளுமன்றத் தொடர் 2018 – 16.11.2022 கருப்பையா முத்துசாமி பாக்காத்தான் ஹரப்பான் பி.கே.ஆர்.

பாடாங் செராய் தமிழ்ப்பள்ளிகள்

தொகு

மலேசியா; கெடா; கூலிம் மாவட்டம் (Kulim District); பாடாங் செராய் துணை மாவட்டத்தில் 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 658 மாணவர்கள் பயில்கிறார்கள். 69 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
KBD5043 புக்கிட் சிலாரோங் தோட்டம் SJK(T) Ladang Bukit Selarong புக்கிட் சிலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 09400 பாடாங் செராய் 71 14
KBD5044 பாடாங் செராய் SJK(T) Ladang Henrietta என்றேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி 09400 பாடாங் செராய் 296 25
KBD5046 பாடாங் மேகா SJK(T) Ladang Padang Meiha பாடாங் மேகா தமிழ்ப்பள்ளி 09400 பாடாங் செராய் 115 12
KBD5047 பொக்கோக் ஜம்பு SJK(T) Ladang Victoria விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளி 09400 பாடாங் செராய் 176 18

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Portal Rasmi Parlimen Malaysia - Profile Ahli Dewan".
  2. "PKR drops Surendran from Padang Serai".
  3. "Harapan's Padang Serai candidate dies". Malaysiakini. 16 November 2022. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.
  4. "இளம் மாணவர்களுக்கான தேசிய அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட கெடா மாநில ஐந்து தமிழ் பள்ளிகளைச் சேர்ந்த 26 மாணவர்களையும் 10 ஆசிரியர்களையும் பாராட்டும் விதமாக பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பையா முத்துசாமி அவரின் அலுவலகத்தில் சிறப்பு செய்தார்". Archived from the original on 22 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 22 November 2022.
  5. "பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கருப்பையா முத்துசாமி காலமானார்". thinathanthi news. 16 November 2022. பார்க்கப்பட்ட நாள் 22 November 2022.
  6. "[UPDATED] GE15: Padang Serai candidate M. Karupaiya dies". The Vibes (in ஆங்கிலம்). 16 November 2022. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.
  7. "GE15: EC to discuss dates of Padang Serai election on Nov 18 following death of M. Karupaiya". The Star. 16 November 2022. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.
  8. "Malaysia General Election". undiinfo Malaysian Election Data. Malaysiakini. பார்க்கப்பட்ட நாள் 4 February 2017. Results only available from the 2004 Malaysian general election|2004 election.
  9. "SEMAKAN KEPUTUSAN PILIHAN RAYA UMUM KE – 14". Election Commission of Malaysia. Archived from the original on 13 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help) Percentage figures based on total turnout.
  10. "The Star Online GE14". The Star (Malaysia)]]. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018. Percentage figures based on total turnout.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பையா_முத்துசாமி&oldid=3928613" இலிருந்து மீள்விக்கப்பட்டது