தொடக்கக் கல்வி

தொடக்கக் கல்வி என்பது, பெரும்பாலும் சிறுவர்களுக்கான முதல் நிலைக் கல்வி ஆகும். தொடக்கப் பள்ளிகளில் சிறுவர்களுக்குத் தொடக்கக் கல்வி வழங்கப்படுகிறது. தற்காலத்தில், சிறுவர்கள் தொடக்கக் கல்விக்கான வயதை அடையுமுன்பே முகிழிளம்பருவக் கல்வி (early childhood education) கற்க அனுப்பப்படுகின்றனர். இத்தகைய சூழல்களில், தொடக்கக் கல்வி, முகிழிளம்பருவக் கல்விக்கும், இடைநிலைக் கல்விக்கும் இடைப்பட்டகாலக் கல்வி ஆகும். பல நாடுகளில் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் தொடக்கக் கல்விக்கான வகுப்பு
சீருடையுடன் பாகித்தானைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவன்

தொடக்கக் கல்வியில் நோக்கம் சிறுவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவையும், எண்ணறிவையும் வழங்குவது ஆகும். தொடக்கக் கல்வியின் முடிவில் சிறுவர்கள் நன்கு எழுதவும், வாசிக்கவும், எண்கள் தொடர்பில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அடிப்படைச் செய்கைகளைச் செய்வதற்கும் திறைமை பெறுகிறார்கள். இவற்றுடன், அறிவியல், புவியியல், வரலாறு, சமூகவியல், மதம், இரண்டாம் மொழி போன்ற துறைகளில் ஓரளவு அடிப்படை அறிவும் ஊட்டப்படுகிறது.

தொடக்கக் கல்விக்கான காலம் 5 தொடக்கம் 7 ஆண்டுகள் வரை வேறுபடுகின்றது. ஆகக் கூடுதலாக கீழ் மழலையர் வகுப்பு, மேல் மழலையர் வகுப்பு என்பவற்றுடன் முதலாம் வகுப்புத் தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரையான வகுப்புக்களையும் சேர்த்து மொத்தம் ஏழு ஆண்டு தொடக்கக் கல்வி வழங்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடக்கக்_கல்வி&oldid=1884729" இலிருந்து மீள்விக்கப்பட்டது