பெர்தானா புத்ரா

மலேசியப் பிரதமரின் அலுவலக வளாகம்

பெர்தானா புத்ரா (மலாய்: Perdana Putra; ஆங்கிலம்: Perdana Putra); என்பது மலேசியா, புத்ராஜெயாவில் உள்ள ஒரு கட்டிடமாகும். இதில் மலேசியப் பிரதமரின் அலுவலக வளாகம் அமைந்து உள்ளது.

பெர்தானா புத்ரா
Perdana Putra
பெர்தானா புத்ரா மாளிகை
புத்ராஜெயா பெர்தானா புத்ரா மாளிகை
பெர்தானா புத்ரா is located in மலேசியா
பெர்தானா புத்ரா
மலேசியாவில் அமைவிடம்
பொதுவான தகவல்கள்
நிலைமைமுழுமையானது
வகைமத்திய அரசு நிர்வாக மையம்
கட்டிடக்கலை பாணிமலாய்
இஸ்லாமியம்
பல்லேடியக் கலை
மேற்கத்திய கலை
நகரம் புத்ராஜெயா
நாடுமலேசியா மலேசியா
ஆள்கூற்று2°56′18″N 101°41′32″E / 2.93833°N 101.69222°E / 2.93833; 101.69222
அடிக்கல் நாட்டுதல்1995
கட்டுமான ஆரம்பம்1997
நிறைவுற்றது1999
துவக்கம்1999
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை5
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)புத்ராஜெயா நிறுவனம் (PPJ)

புத்ராஜெயாவின் பிரதான மலையில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம், மலேசிய மத்திய அரசின் நிர்வாகப் பிரிவின் நினைவுச் சின்னமாக விளங்குகிறது.

வரலாறு

தொகு
 
பெர்டானா புத்ராவின் முன் தோற்றம்

இந்தக் கட்டிடத்தின் கட்டுமானம் 1997-இல் தொடங்கப்பட்டு 1999-இன் தொடக்கத்தில் நிறைவு அடைந்தது. பிரதமர் துறையின் அனைத்துப் பிரிவுகளும் கோலாலம்பூரில் இருந்து புத்ராஜெயாவிற்கு மாற்றப்பட்ட பின்னர், ஏப்ரல் 1999-இல் இந்தக் கட்டிடம் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது.

கட்டிடக்கலை

தொகு
 
பெர்தானா புத்ராவின் இரவுக் காட்சி

இந்தக் கட்டிடத்தின் கலை வடிவமைப்பு மலாய், இசுலாமிய மற்றும் ஐரோப்பிய கலாசாரங்களான பல்லேடியன் (Palladian) மற்றும் நியோகிளாசிசம் (Neoclassicism) போன்றவற்றைக் கொண்டது.[1] அகிடா (aQidea) கட்டிடக் கலைஞரான அகமது ரோசி அப்த் வகாப் (Ahmad Rozi Abd Wahab) எனும் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது.[1]

மலேசியாவின் 4-ஆவது, 7-ஆவது பிரதமரான மகாதீர் பின் முகமதுவின் முயற்சியால் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது.[2][3]

கட்டிடத்தின் உட்புறம்

தொகு

பெர்தானா புத்ராவின் உட்புற அமைப்பில் உள்ள முக்கிய அறைகள் மற்றும் அரங்குகள்:

  • பிரதமர் அலுவலகம்
  • துணை பிரதமர் அலுவலகம்
  • சிறிய மாநாட்டு மண்டபம்
  • பெரிய மாநாட்டு மண்டபம்
  • பார்வையாளர் அரங்கம்
  • பிரதிநிதிகள் அறை
  • முக்கியப் புள்ளிகள் அறை
  • முக்கியப் புள்ளிகள் விருந்து மண்டபம்
  • தேசியப் பாதுகாப்பு பிரிவு அலுவலகம்
  • தேசியப் பொருளாதார நடவடிக்கை அலுவலகம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Putrajaya ~ Colossal Buildings". Archived from the original on 2022-01-28. பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
  2. Citrin William et al.(2009). In Malaysia at Random. Editions Didier Millet. p. 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-4217-95-8. Google Book Search. Retrieved on 17 July 2012.
  3. The architecture of the building-Perdana Putra

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்தானா_புத்ரா&oldid=4097293" இலிருந்து மீள்விக்கப்பட்டது