கோலா மூடா

கோலா மூடா (Kuala Muda) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும்.[1] இந்த மாவட்டத்தின் நிர்வாக மையம் சுங்கை பட்டாணியில் உள்ளது. இந்த மாவட்டம் கெடா, பினாங்கு மாநிலங்களின் எல்லைக்கு அருகாமையில் உள்ளது. தீக்காம் பத்து, பாடாங் தெம்புசு, சுங்கை லாலாங், பீடோங், புக்கிட் செலாம்பாவ், சீடாம், குரூண், செமெலிங், மெர்போக், கோத்தா கோலா மூடா, தஞ்சோங் டாவாய் ஆகியவை கோலா மூடா மாவட்டத்தில் உள்ள இதர நகரங்கள் ஆகும்.

கோலா மூடா
Kuala Muda
மாவட்டம், மலேசியா
நாடுFlag of Malaysia.svg மலேசியா
மாநிலம்Flag of Kedah.svg கெடா
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்456
 • நகர்ப்புற அடர்த்தி923
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு08500
தொலைபேசி குறியீடு08
இணையதளம்கோலா மூடா மாவட்ட இணையத்தளம்

மலேசியாவில் புகழ்பெற்ற குனோங் ஜெராய் எனும் மலை இந்த மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. மூடா ஆறு இந்த மாவட்டத்தையும் பினாங்கு மாநிலத்தையும் பிரிக்கிறது. பினாங்கு பாலம் இந்த மாவட்டத்தின் தீக்காம் பத்துவையும் பினாங்கு மாநிலத்தின் பும்போங் லீமா எனும் இடத்தையும் இணைக்கின்றது. கோலா மூடா மாவட்டம் கெடா மாநிலத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாவட்டம் ஆகும். மலேசியாவில் புரதான நாகரீகங்கள் தோன்றிய இடமாகவும் இந்த இடம் கருதப்படுகிறது.[2]

2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரலைகளின் தாக்குதல்களினால் கோலா மூடா மாவட்டத்தின் கடற்கரை நிலப்பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.[3]

வரலாறுதொகு

கெடா மாநிலத்தின் தென்பகுதியை சுங்கை மூடா (Sungai Muda) ஆறு இரண்டாகப் பிரித்துச் செல்கிறது. இந்தச் சுங்கை மூடா ஆற்றின் பெயரில் இருந்து தான் கோலா மூடா எனும் பெயர் வந்து இருக்கலாம் என்று புவியியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[4] இந்தச் சுங்கை மூடா ஆறு மலாக்கா நீரிணையில் கலக்கும் இடத்தில் கம்போங் சுங்கை மூடா, கோத்தா கோலா மூடா எனும் மீன்பிடி கிராமங்கள் உள்ளன.

சுங்கை மூடா, சுங்கை மெர்போக் (Sungai Merbok), சுங்கை மாஸ் (Sungai Mas) போன்ற நதிகள் சங்கமிக்கும் இடத்தில் தான் மலாயாவின் பண்டை கால நாகரீகங்கள் தோன்றி இருக்கலாம் எனும் கருத்து நிலவி வருகிறது.[5]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலா_மூடா&oldid=2025451" இருந்து மீள்விக்கப்பட்டது