மலேசிய மக்களவைத் தலைவர்
மலேசிய மக்களவைத் தலைவர் (மலாய்: Yang di-Pertua Dewan Rakyat; ஆங்கிலம்: Speaker of the Dewan Rakyat என்பவர் மலேசிய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவையை வழிநடத்தும் தலைவராகும். மலேசிய மக்களவையின் மிக உயர்ந்த பதவியகும்.
மக்களவை தலைவர் Speaker of the Dewan Rakyat Yang di-Pertua Dewan Rakyat | |
---|---|
உறுப்பினர் |
|
அறிக்கைகள் | மக்களவை |
நியமிப்பவர் | மக்களவை உறுப்பினர்கள் |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் |
அரசமைப்புக் கருவி | மலேசிய அரசியலமைப்பு |
முதலாவதாக பதவியேற்றவர் | முகமட் நோவா ஒமார் |
உருவாக்கம் | 11 செப்டம்பர் 1959 |
ஊதியம் | MYR 372,000 (ஆண்டு ஊதியம்)[1] |
இணையதளம் | Parliament of Malaysia |
வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையைப் பயன்படுத்தும் நாடுகளைப் போலவே மலேசியாவிலும் மக்களவைத் தலைவர் எனும் வழக்குச்சொல் பயன்படுத்தப்படுகின்றது.[2]
பொது
தொகுமலேசிய மக்களவையின் அமர்வுகளை கூட்டுவதற்கும்; விவாதங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கும்; மனுக்கள், மசோதாக்கள் மற்றும் திருத்தங்கள் ஆகியவற்றின் ஏற்புத் தன்மையை ஆய்வு செய்வதற்கும்; இவர் பொறுப்பு வகிக்கின்றார். மக்களவைத் தலைவர் இல்லாத காலத்தில், அவர்களின் பிரதிநிதிகளில் ஒருவர் பொறுப்பு வகிப்பார்.[3]
தற்போதைய மலேசிய மக்களவையின் தலைவர் டத்தோ ஜொகாரி அப்துல். இவர் 19 டிசம்பர் 2022 அன்று, 15-ஆவது மக்களவையில், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செயல்பாடுகள்
தொகுமக்களவையின் அமர்வு; மக்களவை எப்போது திறக்கப்பட வேண்டும்; மற்றும் மூடப்பட வேண்டும் என்பதை மக்களவையின் தலைவர் தீர்மானிக்கிறார்; தேவைப்பட்டால் மக்களவையை சிறிது காலத்திற்கு இடைநிறுத்தம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மலேசிய அரசியலமைப்பு மற்றும் மக்களவையின் நிலையியல் கட்டளைகளுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் பொறுப்பானவர் ஆவார்.
- மக்களவை உறுப்பினர்களை ஒழுங்குபடுத்துதல்;
- ஓர் அமர்வின் போது யார் பேசலாம் என்பதை தீர்மானித்தல்;
- மக்களவை கூடும் போது குறைந்தபட்ச எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் உள்ளனரா என சரிபார்ப்பது;
- மக்களவை வாக்கெடுப்பில் சமநிலை ஏற்படும் போது மட்டுமே அவர் வாக்களிப்பது;
- கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்விகளை எழுப்புவதற்கு வரம்புகளை விதிப்பது;
- கேள்வி நேரத்தின் போது வேறு கேள்விகளை தாக்கல் செய்வதைக் கட்டுப்படுத்துவது;
போன்ற அதிகாரங்கள் மக்களவைத் தலைவருக்கு உள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gaji dan elaun Ahli Parlimen naik sehingga 40 peratus | MetroPost Malaysia". 2015-04-10. Archived from the original on 2017-11-17. பார்க்கப்பட்ட நாள் 2018-07-18.
- ↑ http://www.oba.org/En/ccl_en/newsletter_en/v13n1.aspx#Article_3
- ↑ "Malaysia". Retrieved Dec. 10, 2005.
- ↑ "Malaysia". Retrieved Feb. 12, 2006.