தஞ்சோங் மானிஸ் மாவட்டம்
தஞ்சோங் மானிஸ் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Tanjung Manis; ஆங்கிலம்: Tanjung Manis District; சீனம்: 丹绒马尼斯县) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; முக்கா பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும்.[2] மாவட்டத்தின் தலைநகரம் தஞ்சோங் மானிஸ் நகரம் ஆகும்.[3]
தஞ்சோங் மானிஸ் மாவட்டம் Tanjung Manis District Daerah Tanjung Manis | |
---|---|
ஆள்கூறுகள்: 2°10′35″N 111°12′11″E / 2.17639°N 111.20306°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | முக்கா பிரிவு |
மாவட்டங்கள் | தஞ்சோங் மானிஸ் மாவட்டம் |
நிர்வாக மையம் | தஞ்சோங் மானிஸ் |
மாவட்ட அலுவலகம் | தஞ்சோங் மானிஸ் மாவட்ட மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 730 km2 (280 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 12,181 |
• அடர்த்தி | 17/km2 (43/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 96150[1] |
தஞ்சோங் மானிஸ் மாவட்டம் 7 ஏப்ரல் 1973-இல் பெலவாய் துணை மாவட்டம் என்று பெயரிடப்பட்டது; மற்றும் சரிக்கே பிரிவின் நிர்வாகத்தின் கீழ் வைக்கப்பட்டது.[2] 1 மார்ச் 2002 அன்று, பெலவாய் துணை மாவட்டம் முக்கா பிரிவின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
பொது
தொகு11 பிப்ரவரி 2008 அன்று, சரவாக் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பெருவழி (Sarawak Corridor of Renewable Energy ) தொடங்கப்பட்டது.[4] பின்னர் இங்கு தஞ்சோங் மானிஸ் ஒருங்கிணைந்த துறைமுகம் கட்டப்பட்டது.
1 ஆகஸ்டு 2015 அன்று, பெலவாய் துணை மாவட்டம் ஒரு மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டு தஞ்சோங் மானிஸ் மாவட்டம் என மறுபெயரிடப்பட்டது.[5]
தஞ்சோங் மானிஸ் நகரம் சிபு நகரத்தில் இருந்து 82 கிமீ தொலைவிலும்; தஞ்சோங் மானிஸ் வானூர்தி நிலையத்தில் இருந்து 19.5 கிமீ தொலைவிலும்; சரிக்கே நகரில் இருந்து 28 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tanjung Manis, Belawai - Postcode - 96150 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 30 September 2024.
- ↑ 2.0 2.1 "Sejarah Pentadbiran Daerah Tanjung Manis (History of Tanjung Manis District administration)". Mukah Divisional administration official portal. Archived from the original on 4 August 2019. பார்க்கப்பட்ட நாள் 4 August 2019. Alt URL
- ↑ "Tanjung Manis gets RM83m administrative centre". New Sarawak Tribune. 16 November 2022 இம் மூலத்தில் இருந்து 18 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230218020915/https://www.newsarawaktribune.com.my/tanjung-manis-gets-rm83m-administrative-centre/.
- ↑ "Majlis Pelancaran Koridor Sarawak - Sarawak Corridor of Renewable Energy (SCORE)". Koleksi Arkib Ucapan Ketua Eksekutif. 11 February 2008. பார்க்கப்பட்ட நாள் 31 July 2019.
- ↑ "Tanjung Manis". RECODA. Archived from the original on 12 October 2018. பார்க்கப்பட்ட நாள் 4 August 2019.
- ↑ "Tanjung Manis Integrated Port Sdn Bhd Corporate Summary" (PDF). Tanjung Manis Integrated Port. Archived from the original (PDF) on 1 December 2021. பார்க்கப்பட்ட நாள் 25 March 2023.