கூடாட் வானூர்தி நிலையம்
கூடாட் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: KUD, ஐசிஏஓ: WBKT); (ஆங்கிலம்: Kudat Airport (KIA); மலாய்: Lapangan Terbang Miri) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் கூடாட் நகரில் அமைந்துள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[2]
வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் Malaysia Airports Holdings Berhad | ||||||||||
சேவை புரிவது | கூடாட்; சபா, மலேசியா | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் ({{{utc}}}) | ||||||||||
உயரம் AMSL | 10 ft / 3 m | ||||||||||
ஆள்கூறுகள் | 06°55′27″N 116°49′51″E / 6.92417°N 116.83083°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
Source: Aeronautical Information Publication Malaysia[1] |
சபா மாநிலத்தின் கூடாட் பிரிவில் வாழும் மக்களுக்கான வானூர்திச் சேவை மையமாக விளங்குகிறது. கூடாட் நகரம் கோத்தா கினபாலுவில் இருந்து 190 கி.மீ. தொலைவில், கூடாட் தீபகற்பத்தில் அமைந்து உள்ளது.
போர்னியோ தீவின் உச்ச மட்ட வடக்குப் பகுதி கிராமமான தஞ்சோங் சிம்பாங் மெங்காயாவ் (Tanjung Simpang Mengayau) கிராமத்திற்கு மிக அருகில் இந்த வானூர்தி நிலையம் உள்ளது.[3]
பொது
தொகுகூடாட் வானூர்தி நிலையம் ஒரு பழைய இராணுவ வானூர்தி நிலையத்தின் தளத்தில் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் ஜாவா மற்றும் உள்ளூர் ஆட்களின் கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி, ஜப்பானிய ஏகாதிபத்திய இராணுவம் விமான நிலையத்தைக் கட்டியது.
இரண்டாம் உலகப் போரின் போது, ஓடு பாதை அமைப்பதற்கு, தார் பற்றாக்குறையினால் பவளப் பாறைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த நிலையம் கட்டப்படும் போது, கட்டாய உழைப்பின் காரணமாகவும்; மலேரியா நோயினாலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டார்கள்.
இருப்பினும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1945-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் B 52 ரக விமானங்களின் குண்டுவீச்சுகளால் ஓடு பாதை பெரிதும் பாதிக்கப்பட்டது. இறுதியில் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்தது.[4]
சேவை
தொகுவிமானச் சேவைகள் | சேரும் இடங்கள் |
---|---|
மாஸ் விங்ஸ் (MASwings) |
கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம் சண்டக்கான் வானூர்தி நிலையம் |
விபத்து
தொகு- 10 அக்டோபர் 2013 — கோத்தா கினபாலு நகரில் இருந்து கூடாட் விமான நிலையத்திற்குச் சென்ற மாஸ் விங்ஸ் விமானம் (Otter 9M-MDM) விபத்துக்குள்ளானது.
ஓடுபாதையில் இருந்து தள்ளிச் சென்று ஒரு வீட்டின் மீது மோதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் துணை விமானி உட்பட இரண்டு பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது.[5][6][7]
காட்சியகம்
தொகுகூடாட் வானூர்தி நிலையத்தின் சில காட்சிகள்:
மேற்கோள்கள்
தொகு- ↑ AIP Malaysia: Index to Aerodromes பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
- ↑ "Official Portal Ministry of Transportation, Malaysia. List of Airports".
- ↑ "A group of British landed in the area near the present location of Kudat town in December 1881,". www.sabah.edu.my. பார்க்கப்பட்ட நாள் 3 April 2022.
- ↑ "Kudat Airport is built partly on the site of the old military airfield. In World War II using forced labour from Java as well as local men the Japanese Imperial Army built an airfield". FlightMalaysia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 June 2022.
- ↑ Accident: MASWings DHC6 at Kudat on Oct 10th 2013, impacted house The Aviation Herald. Retrieved 10 October 2013
- ↑ Co-pilot of MASWings plane crash succumbs to injuries (Update) பரணிடப்பட்டது 2013-10-13 at the வந்தவழி இயந்திரம் thestar.com.my. Retrieved 10 October 2013
- ↑ UPDATE: Co-pilot, passenger die in MASWings' crash in Kudat nst.com.my. Retrieved 10 October 2013