மலேசிய வானூர்தி நிறுவனங்கள்
மலேசிய வானூர்தி நிறுவனங்கள் (ஆங்கிலம்: Airlines of Malaysia; மலாய்: Syarikat Penerbangan di Malaysia) என்பது மலேசியாவில் வானூர்திச் சேவைகளை மேற்கொள்ளும் வானூர்தி நிறுவனங்களாகும்.
மலேசியாவின் வானூர்தி நிறுவனங்களின் வரலாறு 1937-ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. சிங்கப்பூர் நீரிணை நீராவிக் கப்பல் நிறுவனம் (Straits Steamship Co. of Singapore); பெருங்கடல் நீராவிக் கப்பல் நிறுவனம் (Ocean Steamship Co); மற்றும் இம்பீரியல் ஏர்வேஸ் (Imperial Airways) ஆகிய மூன்று பிரித்தானிய நிறுவனங்களும் ஒன்றிணைந்து, மலாயாவில் ஒரு வானூர்திச் சேவையைத் தொடங்கின.
வரலாறு
தொகுசிங்கப்பூர் அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்று, மலாயன் ஏர்வேஸ் லிமிடெட் (Malayan Airways Limited) எனும் விமான நிறுவனத்தை 1937 அக்டோபர் 21-ஆம் தேதி பதிவு செய்தன.[1]
1947-ஆம் ஆண்டு வரை செயல்பாடுகள் தொடங்கவில்லை. ஜப்பானிய ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்த பிறகு, கோலாலம்பூரில் உள்ள சுபாங் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இரட்டை எஞ்சின் கொண்ட ஒரு விமானம் முதல்முறையாகப் பறந்தது. அந்த விமானம் சிங்கப்பூர், ஈப்போ மற்றும் நாட்டின் வடக்கே உள்ள பினாங்கு நகரங்களுக்குச் சேவை வழங்கியது.
படிப்படியான வளர்ச்சி
தொகுஅதே ஆண்டு மேலும் ஒரு விமானம் வங்கப்பட்டு சேவையில் அமர்த்தப்பட்டது. அந்தக் கட்டத்தில் மலாயன் விமானச் சேவை நிறுவனத்திற்கு நான்கு விமானங்கள் இருந்தன.
அவை ஜகார்த்தா, (பட்டேவியா), பலெம்பாங், பாங்காக், மேடான் மற்றும் சைகோன் (ஹோ சி மின் நகரம்) ஆகிய நகரங்களுக்குச் சேவைகள் வழங்கின. அந்த நிறுவனம் படிப்படியாக வளர்ச்சி பெற்று இன்று உலகளாவிய நிலையில் புகழ்பெற்று விளங்குகிறது.[2]
முதன்மை நிறுவனங்கள்
தொகுவானூர்தி நிறுவனம் | படிமம் | ஐஏடிஏ குறியீடு | ஐசிஏஓ குறியீடு | அழைப்பு அடையாளம் | தொடக்கம் |
---|---|---|---|---|---|
ஏர்ஏசியா | AK | AXM | RED CAP | 1996 | |
ஏர் ஏசியா எக்சு | D7 | XAX | XANADU | 2007 | |
மலேசியா பத்தேக் ஏர் | OD | MXD | MALINDO | 2013 | |
பயர்பிளை | FY | FFM | FIREFLY | 2007 | |
மலேசியா எயர்லைன்சு | MH | MAS | MALAYSIAN | 1972 | |
மாஸ் விங்ஸ் | MY | MWG | MASWINGS | 2007 | |
மை ஏர்லைன் | TBA | TBA | TBA | 2022 | |
எஸ்கேஎஸ் வானூர்தி நிறுவனம் | KI | SJB | SOUTHERN TIGER | 2022 |
துணை நிறுவனங்கள்
தொகுவானூர்தி நிறுவனம் | படிமம் | ஐஏடிஏ குறியீடு | ஐசிஏஓ குறியீடு | அழைப்பு அடையாளம் | தொடக்கம் |
---|---|---|---|---|---|
பெர்ஜாயா வானூர்தி நிறுவனம் | J8 | BVT | BERJAYA | 1989 | |
லாயாங் லாயாங் வானூர்தி நிறுவனம் | LAY | LAYANG | 1994 | ||
எம்எச்எஸ் வானூர்தி நிறுவனம் | 1983 | ||||
சபா ஏர் | SA | SAX | SABAH AIR | 1975 | |
வெஸ்ட் ஸ்டார் | 2003 |
சரக்கு சேவை
தொகுவானூர்தி நிறுவனம் | படிமம் | ஐஏடிஏ குறியீடு | ஐசிஏஓ குறியீடு | அழைப்பு அடையாளம் | தொடக்கம் |
---|---|---|---|---|---|
ஆசியா கார்கோ நிறுவனம் | 3G | CXM | ASIA CARGO | 1996 | |
மாஸ் கார்கோ | MH | MAS | MALAYSIAN | 1972 | |
மை ஜெட் எக்ஸ்பிரஸ் வானூர்தி நிறுவனம் | N7 | NEP | WARISAN | 2009 | |
ராயா வானூர்தி நிறுவனம் | TH | RMY | RAYA EXPRESS | 1993 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The history of Malaysian Airlines dates back to 1937, when the Straits Steamship Co. of Singapore joined forces with two British companies—Ocean Steamship Co. and Imperial Airways—and won approval from Singapore's government to operate an airline in the region". www.encyclopedia.com. பார்க்கப்பட்ட நாள் 18 May 2022.
- ↑ "The airline is still flying and waiting for better days. In 2021, Malaysia Airlines remains a highly recognized carrier with an excellent inflight product". Simple Flying. 22 November 2021. பார்க்கப்பட்ட நாள் 18 May 2022.