எயர் ஏசியா எக்சு

மலேசியாவின் நீண்ட தொலைவிற்கு இயக்கப்படும் குறைந்த கட்டண சேவை வழங்கும் வான்வழிப் போக்குவரத்த

ஏர்ஏசியா எக்சு (ஆங்கிலம்: AirAsia X மலாய்: Syarikat Penerbangan AirAsia X; சீனம்: 全亞洲航空) என்பது மலேசியாவைச் சார்ந்த நீண்ட தொலைவிற்கு இயக்கப்படும் குறைந்த கட்டணச் சேவை வழங்கும் வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும்.

ஏர் ஏசியா X
AirAsia X
IATA ICAO அழைப்புக் குறியீடு
D7 XAX XANADU
நிறுவல்2007
மையங்கள்கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
அடிக்கடி பறப்பவர் திட்டம்BIG[1]
வானூர்தி எண்ணிக்கை9 (+26 ஆணைகள்)
சேரிடங்கள்14
தலைமையிடம்சிப்பாங், சிலாங்கூர்
முக்கிய நபர்கள்
வலைத்தளம்www.airasia.com
மெல்பேர்ண் வானூர்தி நிலையத்தில் ஏர்ஏசியா எக்சின் ஏர்பஸ் ஏ330-300

இதனை முன்பு பிளை ஏசியன் எக்சுபிரசு நிறுவனம் (FlyAsianXpress Sdn. Bhd.) என்று அறியப்பட்ட எயர் ஏசியா எக்சு நிறுவனம் இயக்குகிறது. இது ஆசியாவின் மிகப் பெரிய குறைந்த கட்டண சேவையாளரான எயர் ஏசியாவின் பன்னாட்டு இயக்க வணிகப் பெயராகும்.

பொதுவான சீட்டு வழங்கும் அமைப்பு, வானூர்தி உட்புற துணியமைப்பு, ஊழியர் சீருடைகள் மற்றும் மேலாண்மை வண்ணம் இவற்றால் தனது செலவுகளைக் குறைத்துக் கொண்டு குறைந்த கட்டணம் வழங்க முடிகிறது.[2]

வரலாறு தொகு

இந்த நிறுவனம் நவம்பர் 2, 2007-இல் தனது சேவைகளைத் துவக்கியது. இதன் முதல் சேவை மலேசியாவின் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் கோல்டு கோசுட்டு வானூர்தி நிலையம் வரையில் இருந்தது.

ஏர்ஏசியா எக்சு X ஆசியா மற்றும் ஓசியானியாவிலுள்ள சேரிடங்களுக்கு தனது சேவைகளை வழங்குகிறது. இதன் வான்தொகுப்பில் 11 வானூர்திகள் தற்போது உள்ளன; கூடுதல் வானூர்திகள் வாங்க ஆணைகள் கொடுத்துள்ளது.

ஏர்ஏசியா எக்சு X வெர்ஜின் குழமத்துடனும்[3] ஏர் கனடாவுடனும் பிணைக்கப்பட்டுள்ளது.

மேற்சான்றுகள் தொகு

  1. "Join BIG! AirAsia BIG Loyalty Programme". Airasia.com. பார்க்கப்பட்ட நாள் 2012-10-15.
  2. "X-citing deal for air travellers". The Star. 2007-01-06 இம் மூலத்தில் இருந்து 2007-10-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071011201247/http://thestar.com.my/news/story.asp?file=%2F2007%2F1%2F6%2Fnation%2F16493788&sec=nation. The Airline will be operating "incredibly" cheap prices to and from Asia to the East Coast of Australia
  3. "AirAsia X en route". smh.com. 2007-09-18. http://www.smh.com.au/news/xchange/primary-must-be-keen-to-stay-in/2007/09/18/1189881511562.html?page=2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எயர்_ஏசியா_எக்சு&oldid=3427512" இலிருந்து மீள்விக்கப்பட்டது