வெர்ஜின் குழுமம்

பிரித்தானியப் பன்னாட்டு வணிகக் குழுமம்

வெர்ஜின் குழுமம் லிமிடெட் (Virgin Group Ltd) ஓர் பிரித்தானிய பல நாட்டு வகைக்குறியிடப்பட்ட துணிகர மூலதன நிறுவனத் திரள் ஆகும். இது வணிகப் பெருந்தகை ரிச்சர்டு பிரான்சனால் நிறுவப்பட்டது.[2] இக்குழுமத்தின் கருவ வணிகத்துறைகளாக பயணச்சேவைகள், மனமகிழ் சேவைகள் மற்றும் வாழ்வாங்கு பாணி பொருட்களும் சேவைகளும் உள்ளன. உலகளவில் 400 நிறுவனங்கள் இக்குழுமத்தில் அடங்கியுள்ளன.

வெர்ஜின் குழுமம் லிமிடெட்.
வகைதனியார் பங்கு நிறுவனம்
நிறுவுகை1970
தலைமையகம்இலண்டன், ஐக்கிய இராச்சியம்
சேவை வழங்கும் பகுதிஉலகளாவிய
முதன்மை நபர்கள்றிச்சர்ட் பிரான்சன் (தலைவர்)
டேவிட் பாக்ஸ்பி (இணை-சிஈஓ)
ஜோஷ் பேலிஸ் (இணை-சிஈஓ)
தொழில்துறைநிறுவனத் திரள்
உற்பத்திகள்பருகு பானங்கள்
வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்கள்
தொடர்வண்டிகள்
நிகழ்பட ஆட்டங்கள்
நுகர்வு மின்னணுப் பொருட்கள்
நிதிச் சேவைகள்
திரைப்படம்s
இணையம்
கம்பி வடம்
இசை
வானொலி
நூல்கள்
ஒப்பனைப் பொருட்கள்
அணிகலன்
வீட்டுக் கலன்கள்
சில்லறை வணிகம்
நகர்பேசிகள்
வணிகமய விண்வெளிப் பயணம்
வருமானம்அமெரிக்க டாலர் 21.3 பில்லியன் (2011)[1]
பணியாளர்ஏறத்தாழ 50,000
இணையத்தளம்www.virgin.com

பிரித்தானிய வணிகத்துறை பதிவுகளின்படி இது ஓர் சார்புவைப்பு நிறுவனமாக 1989இல் பதியப்பட்டுள்ளது. ஆனால் இதன் வணிக மற்றும் விற்பனை செயல்பாடுகள் 1970களிலேயே இருந்துள்ளது. செப்டம்பர் 2008இல் இதன் நிகர சொத்துமதிப்பு £5.01 பில்லியனாக இருந்தது.

மேற்சான்றுகள்

தொகு
  1. Virgin.com - What We're About
  2. "Virgin Group Ltd.: Private Company Information". BusinessWeek. பார்க்கப்பட்ட நாள் 2008-12-24.

வெளி இணைப்புகள்

தொகு


நிறுவனத் தரவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெர்ஜின்_குழுமம்&oldid=1410022" இலிருந்து மீள்விக்கப்பட்டது