நூல் (எழுத்துப் படைப்பு)

கருத்துகள், படங்கள், ஒளிப்படங்கள், கருத்து, கதை, பாடல் போன்றவற்றினை ஒருங்கிணைந்த முறையில் அளிக

நூல் (book) என்பது எண்ணப் பதிவாகிய கருத்துகளை எழுத்து உருவில் காட்டும் ஒரு கருவி. இக்காலத்தில் அச்சிட்ட புத்தகங்களை உணர்த்த இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. காகிதம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் நூல் பனையோலையில் எழுதப்பட்ட பதிவாக இருந்தது. எழுதப்பட்ட பனையோலைகளைப் துளையிட்டு நூல்கயிற்றில் கோத்து வைத்தனர். பொத்துக் கோத்து வைத்த சுவடிகளைப் பொத்தகம் என்றனர். நாளடைவில் பொத்தகம் என்னும் சொல் புத்தகம் என மருவி வழங்கப்படுகிறது.

தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்கும் பனையோலை நூல்
விவிலியம் எழுதப்பட்டிருக்கும் பொத்தகம்
செப்புப்பட்டையப் பொத்தகம்

இக்காலப் புத்தகங்களில் எழுத்துருவோடு படங்களும் சேர்க்கப்படுகின்றன. கடதாசியில் (கடுதாசி, காகிதம்) அல்லது அதுபோன்ற வேறு பொருள்களால் செய்யப்பட்ட, எழுதிய, அச்சடித்த, வரையப்பட்ட, அல்லது வெற்றுத்தாள்களை ஒன்றாகக் கட்டி உருவாக்கப்படுவதாகும். இது தாள்களை ஒவ்வொன்றாகத் திறந்து பார்ப்பதற்கு வசதியாக ஒரு ஓரத்தில் பிணைக்கப்பட்டு இருக்கும். நூலில் கொடுக்கப்பட்ட விடயங்களில் அளவுக்குத் தக்கபடி அதிலுள்ள தாள்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்து நூற்றுக் கணக்குவரை இருக்கும். தாளொன்றின் ஒவ்வொரு பக்கமும் பக்கம் என்று அழைக்கப்படும். மின்னணுவியல் முறையில் அமைந்த நூல் மின் நூல் எனப்படும்.

நூல்கள் ஒற்றை வெளியீடு ஆகும். இதனால் இது குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை வெளியிடப்படும் சஞ்சிகைகள், நாளேடுகள் என்பவற்றிலிருந்து வேறுபடுகிறது. நூல்கள் மீது அதிக ஆர்வமுள்ள ஒருவரைப் புத்தகப் பூச்சி அல்லது புத்தகப் புழு என்று அழைப்பதுண்டு. நூல்களை வெளியீட்டாளர்களிடம் இருந்து வாங்கி விற்கும் இடத்தை, நூலகசாலை அல்லது நூல்கடை என்பது வழக்கம்.

சொற்பிறப்பியல்

தொகு
  • நூல் என்ற சொல்லை ஆங்கிலத்தில் குறிப்பிடும் book என்ற சொல்லானது ஜெர்மானிய வர்த்தையான "bōk-" என்பதிலிருந்து வந்தது. "букварь" (bukvar') or "буквар" (bukvar) refers specifically to a primary school textbook த்தல்eமற்றும் எழுத்துதல் தொடர்பான இந்திய யுரோப்பிய நாடுகளின் தொடக்க காலங்களில் புங்க மரஙகளில் எழுதிவந்ததாக தகவல்கள் உள்ளன.

வரலாறு

தொகு

நாகரீக காலத்தில் எழுத்துகளின் தொடக்ககாலம் என்பது களிமண் , செப்புத்தடுகள், இரும்புத் தகடுகள், மரப்பலகைகள் போன்றவற்றில் எழுதினர். பழங்காலங்களின் வரலாறுகளை இதன் மூலமாகத்தான் வரலாற்று அறிஞர்கள் தெரிந்துகொண்டனர். பழங்கால எகிப்திய மக்கள் நைல் நதிக்கரையோரத்தில் வளரக்கூடிய பாப்பிரஸ் மரங்களில் எழுதினர். எழுத்துக்கள் என்பது பொதுவாக வலது புறத்திலிருந்து இடது புறமாகவும், அல்லது இடது புறத்திலிருந்து வலது புறமாகவும் இருக்கும்.

19 ம் நூற்றாண்டு முதல் 21 ம் நூற்றாண்டு வரை

தொகு

19 ம் நூற்றண்டு காலங்களில் தான் அச்சகங்களின் பிரபலமான காலம் ஆகும். அச்சகங்களின் மூலமாக மணிக்கு 1,100 பிரதிகள் எடுக்க முடிந்தது. ஆனால் மணிதர்களால் 2000 வார்த்தைகளே தட்டச்சு செய்ய முடிந்தது. வரி அச்சு இயந்திரங்கள் இந்த 19 ஆம் நூற்றாண்டில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மூலம் அவர்கள் மணிக்கு 6000 வார்த்தைகள் தட்டச்சு செய்ய முடிந்தது. இந்தக்கால கட்டங்களில் தான் அச்சுத்துறைகளில் பல முன்னேற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. மேலும் பதிப்பகங்களின் உரிமைகளைப் பேணிக்காக்கும் விதமாக பல சட்டங்கள் இயற்றப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வருடத்திற்கு 200,000 புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளில் வெளிவந்தன. சில சமயங்களில் தகவல் தொழில்நுட்ப பெருவெடிப்பு என்று கூறும் அளவிற்கு அதிகமான புத்தகங்கள் வெளிவந்தன. மேலும் இணையத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்களின் விளைவாக இணையதளங்களிலேயே நூல்களைப் படிக்கும் வழக்கம் ஏற்பட்டது. அதனை மின்னூல் என்று அழைக்கப்பட்டன. பழைய புத்தகங்களை நவீனப்படுத்தும் வழக்கமும் ஏற்பட்டது. இணையவெளியில் பல புத்தகங்கள் கிடைக்கப்பெற்ற போதும் அவை அனைத்தும் இலவசமாகக் கிடைக்கவில்லை. தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக புத்தகங்களை பதிவேற்றம் செய்வதில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக பிஓடி (POD- Print On Demand) என்ற முறையில் புத்தகங்கள் பதிவேற்றம் செய்தனர். அதாவது புத்தகம் வேண்டுமென்று வாடிக்கையாளர்கள் கூறிய பிறகே அதனை அச்சிடுவர். இந்த முறையில் புத்தகம் பதிவேற்றம் செய்வதில் எளிமையானதாகவும், வசதியாகவும் இருந்தது. குறைந்த அளவில் விற்பனையாகக் கூடிய சில புத்தகங்களுக்கு இந்த முறையானது மிகவும் உதவிகரமானதாக உள்ளது.

புத்தகங்கள் தயாரித்தலில் நவீன முறை

தொகு

புத்தகங்கள் தயாரிக்கும் முறைகளிலோ அல்லது அதனைத் தைக்கும் வழிமுறைகளில் எந்த விதமான மாற்றங்களும் நிகழவில்லை. ஆனால் அதனை பயன்படுத்தும் முறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 15 ஆம் நூற்றாண்டில் புத்தகம் தயாரிக்கும் வழிமுறைகளே இப்போது வரை பின்பற்றப்படுகிறது. ஆனால் இதனை தயாரிக்கும் முறைகளில் அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். இன்றைய காலகட்டங்களில் எதிரீடு அச்சு முறையிலேயே அதிக அளவில் அச்சிடப்படுகின்றன. பெரும்பாலான புத்தகங்கள் டிரிம் சைஸ் என்ற அளவில்தான் அச்சிடப்படுகின்றன.

நவீன அச்சு

தொகு

புத்தகங்களை அச்சிடுவதில் பல்வேறு நவீனத்துவங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் தற்போது அச்சுமைக்குப் பதிலாக ‘’’அச்சு மைப்பொடிகளை (Toner) பயன்படுத்துகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தேவைக்கு ஏற்ப அச்சிடுதல் என்ற முறையில் அச்சிடப்படுகிறன. அதாவது புத்தகம் வேண்டுமென்று வாடிக்கையாளர்கள் கூறிய பிறகே அதனை அச்சிடுவர்.

மின்னூல் என்பது எழுத்துக்கள் மற்றும் படங்கள் அல்லது இவை இரண்டையுமே உள்ளடக்கிய நவீன முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு நூல் ஆகும். இதனை கணிப்பொறியிலோ அல்லது மற்ற உபகரணங்களிலோ இதனை வாசிக்க இயலும். இதனை மின்னனு முறையில் அச்சிட்ட புத்தகம் எனவும் அழைக்கப்படுகிறது. வாசிக்கும் திறன் கொண்ட திரைகள் கொண்ட கணிப்பொறியில் இதனை வாசிக்க இயலும். 2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் அச்சிட்ட புத்தகங்களின் எண்ணிக்கையை விட மின்னூல் புத்தகங்களின் எண்ணிக்கையானது அதிகமாகும். மின்னூல் புத்தகங்களை மக்கள் அதிகம் வாங்குவதற்கான காரணங்களாவன,

  1. அதிகமான வகைகள் கிடைப்பதனால்,
  2. எளிமையாக கிடைப்பதனால்,
  3. விலை குறைவாக கிடைப்பதனால்.

மேலும் மின்னூலில் படிக்கும் போது அதிலேயே குறிப்புகள் எடுத்துக்கொள்ள இயலும். புதினம் (இலக்கியம்) சார்ந்த மற்றும் புதினம் (இலக்கியம்) சாராத புத்தகங்கள் இதிலேயே கிடைக்கின்றன. அமெரிக்காவின் மின்னூல் வாசகர்களின் எண்ணிக்கையானது 2013 ஆம் ஆண்டில் 23 சதவீதமாக இருந்தது, அந்த எண்ணிக்கையானது 2014 ஆம் ஆண்டில் அது 28 சதவீதமாக உயர்ந்தது. அதற்கு காரணம் அமெரிக்காவில் உள்ள இளைஞர்கள் வாங்கிய கைக்கணினி , கணிப்பொறிஆகியவற்றின் விற்பனை 30 சதவீதம் உயர்ந்ததே ஆகும்.

சொல்லியல்

தொகு

மின்னூல் என்பது மின்புத்தகம், மின்-புத்தகம், மின்-பதிப்பு, மின்-நாளேடு, அல்லது நவீனப்புத்தகம் என அழைக்கப்படுகிறது.

வடிவங்கள்

தொகு
 
Amazon Kindle 3

2000 ஆம் ஆண்டில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைவரும் தொழில்நுட்ப உபகரணங்களை கையாளும் திறன் கொண்டவர்களாக இருந்தனர். எனவே தங்களிடம் உள்ள நூல்களை மிக எளிதாக மற்றவர்களிடத்தில் பரிமாற்றம் செய்தனர். இவ்வாறாக மின்னூல்களுக்கான மேடை உருவானது. எலெக்ட்ரானிக் புத்தகம் என்பதன் சுருக்கமே ஈ-புத்தகம் ஆகும். மின்புத்தகம் என்பது பெரும்பாலும் இணைய வழியிலேயே உருவாக்கம் செய்யப்படுகின்றன. அதனை கணிப்பொறி, செல்பேசி போன்ற பல உபகரங்களில் பயன்படுத்த முடிந்தது. மேலும் கீழ்கண்ட உபகரணங்களிலும் பயன்படுத்தமுடிகிறது. அவையாவான:

  • சோனி ரீடர்
  • பேர்னஸ் & நோபிள் நூக்
  • கோபோ மின்னூல்
  • அமேசான் கிண்டில்.
கருவி வடிவங்கள்
அமேசான் கிண்டில் and [[Kindle Fire HD tablets[1] AZW, AZW3, KF8, non-DRM MOBI, PDF, PRC, TXT
பேர்னஸ் & நோபிள் நூக் EPUB, PDF
ஆப்பிள் ஐ பேடு [2] EPUB, IBA (Multitouch books made via iBooks Author), PDF
சோனி ரீடர்[1] EPUB, PDF, TXT, RTF, DOC, BBeB
கோபோ ரீடர் [3][4] EPUB, PDF, TXT, RTF, HTML, CBR (comic), CBZ (comic)
சட்டைப்பை ரீடர் (PocketBook Reader) [5][6] EPUB DRM, EPUB, PDF DRM, PDF, FB2, FB2.ZIP, TXT, DJVU, HTM, HTML, DOC, DOCX, RTF, CHM, TCR, PRC (MOBI)

அளவு

தொகு

பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் அளவுகள் பின்வருமாறு

  • குவார்டோ: இருதடவை மடித்த தாளின் அளவு. சுமார் 11-13 அங்குலம் (30 செ.மீ)
  • ஆக்டவோ: மூன்று முறை மடித்து, 8 தாள்களை (பதினாறு பக்கங்களைக்) கொண்டுள்ளது. 23 செ.மீ உயரம்.
  • டியோ டெசிமோ: குவார்டோ மற்றும் ஆக்டவோ ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட அளவு ஆகும். உயரம் 18 செ.மீ.
  • செக்ஸ்டோ டெசிமோ: 4 முறை மடித்து 16 தாள்களைக் (32 பக்கங்கள்) கொண்டுள்ளது.
  • இணைப்பக்கம் (Folio) : 15’’ (65 செ.மீ) உயரம்
  • அட்லஸ் இணைப்பக்கம்: 23’’ (58 செ.மீ)
  • இரட்டை யானை இணைப்பக்கம்: 50’’ (127 செ.மீ)

நூலின் இயல்பு

தொகு

ஒரு நூல் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்று நூலுக்குரிய இலக்கணத்தை, நன்னூல் விளக்கியுள்ளது.


நூலின் இயல்பே நுவலின் ஓரிரு

பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்

நாற்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி

ஐயிரு குற்றமும் அகற்றிஅம் மாட்சியோ(டு)

எண்ணான்கு உத்தியின் ஒத்துப் படலம்

என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை

விருத்தி ஆகும் விகற்பநடை பெறுமே. - நன்னூல் 04


ஒரு நூலின் தன்மையைக் கூறவேண்டுமானால், அது இரண்டு வகையான பாயிரங்களைக் கொண்டிருக்க வேண்டும். மூன்று வகை நூல்களில் ஒன்றாகவும் நான்கு வகைப் பொருள்களையும் உடையதாகவும், ஏழு கொள்கைகளையும் தழுவியிருப்பதாகவும், பத்து வகையான குற்றங்கள் இல்லாத நூலாகவும், முப்பத்திரண்டு உத்திகளை உபயோகித்து உருவாக்கப்பட்டுப் பத்து அழகுகள் பொருந்தியதாகவும், ஓத்து, படலம் ஆகிய உறுப்புகளைப் பெற்றும் சூத்திரம், காண்டிகை, விருத்தி என்னும் வேறுபட்ட நடைகளைப் பெற்றும் இருக்க வேண்டும்.

மேற்கண்ட சூத்திரம் பதம் பிரித்து பொருள் கொள்ளப்பட்டால்,


நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு

பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்

நாற்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி

ஐயிரு குற்றமும் அகற்றி அம் மாட்சியோடு

எண் நான்கு உத்தியின் ஓத்து படலம்

என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை

விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே. - நன்னூல் 04

நூல் அமைப்பு

தொகு
 
பொதுவான புத்தக வடிவமைப்பு
1 - belly band
2 - Flap
3 - Endpaper
4 - புத்தக அட்டை
5 - மேல் விளிம்பு
6 - Fore edge
7 - Tail edge
8 - Right page, recto
9 - Left page, verso
10 - Gutter

ஒரு நூல் பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும்.

ஊடகங்கள்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. 1.0 1.1 Suleman, Khidr (September 20, 2010). "Sony Reader Touch and Amazon Kindle 3 go head-to-head". The Inquirer. Archived from the original on ஜனவரி 12, 2012. பார்க்கப்பட்ட நாள் January 27, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Patel, Nilay (January 27, 2010). "The Apple iPad: starting at $499". Engadget. பார்க்கப்பட்ட நாள் January 27, 2010.
  3. Covert, Adrian. "Kobo Touch E-Reader: You'll Want to Love It, But ..." Gizmodo.com. பார்க்கப்பட்ட நாள் 17 June 2011.
  4. "Kobo eReader Touch Specs". பார்க்கப்பட்ட நாள் 29 June 2011.
  5. Kozlowski, Michael. "Hands on review of the Pocketbook PRO 902 9.7 inch e-Reader". goodereader.com. பார்க்கப்பட்ட நாள் 3 January 2011.
  6. "PocketBook Touch Specs". பார்க்கப்பட்ட நாள் 15 May 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூல்_(எழுத்துப்_படைப்பு)&oldid=3699178" இலிருந்து மீள்விக்கப்பட்டது