பலெம்பாங்

இந்தோனேசியாவின் தெற்கு சுமாத்திராவிலுள்ள ஒரு நகரம்

பலெம்பாங் (Palembang, ஜாவி: ڤلامبڠ‎) என்பது மேடானுக்கு அடுத்ததாய் உள்ள சுமத்திரா தீவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாகும். இது இந்தோனேசியாவின் தெற்கு சுமாத்திரா மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். பலெம்பாங் மலாய் தீவுக்கூட்டம் மற்றும் தென்கிழக்காசியாவின் மிகப் பழைய நகரங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இது தெற்கு சுமாத்திராவின் கிழக்கு கடற்கரையில் உள்ள முசுனி நதியின் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பலெம்பாங் 374.03 சதுர கிலோமீற்றர் நிலப் பரப்பளவைக் கொண்டது ஆகும். 2013ன் மக்கள் தொகை அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 1,742,186 குடிகளைக் கொண்டுள்ளது.[1] பலெம்பாங் இந்தோனேசியாவில் ஜகார்த்தா, சுரபயா, பண்டுங், மேடான், செமாராங் மற்றும் மக்காசாருக்கு அடுத்ததாய் உள்ள ஏழாவது மிகப் பெரிய நகரமாகும். இந்நகரம் 26வது தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள் போட்டியை 2011ல் நவம்பர் 11 தொடக்கம் 22வரை ஜகார்த்தாவுடன் இணைந்து நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

பலெம்பாங்
From top left, clockwise: Kemaro Island Pagoda, Benteng Kuto Besak, Gelora Sriwijaya Stadium, Grand Mosque of Palembang, Ampera Bridge.
From top left, clockwise: Kemaro Island Pagoda, Benteng Kuto Besak, Gelora Sriwijaya Stadium, Grand Mosque of Palembang, Ampera Bridge.
அடைபெயர்(கள்): "பூமி சிரிவிஜய (Bumi Sriwijaya, The Land of Srivijaya)"
குறிக்கோளுரை: Palembang BARI (Bersih, Aman, Rapi, Indah) (Palembang: Clean, Safe, Neat, and Beautiful)
நாடுஇந்தோனேசியா
மாகாணம்தெற்கு சுமாத்திரா மாகாணம்
Incorporated (city)16 சூன் 683
அரசு
 • நகர முதல்வர்H. Romi Herton (2013-2018)
 • Vice MayorH. Harnojoyo (2013-2018)
பரப்பளவு
 • மொத்தம்374.03 km2 (144.41 sq mi)
ஏற்றம்
8 m (26 ft)
மக்கள்தொகை
 (2013)
 • மொத்தம்17,42,186
 • அடர்த்தி4,858/km2 (12,580/sq mi)
நேர வலயம்ஒசநே+7 (WIB)
இடக் குறியீடு+62 711
இணையதளம்kota.palembang.go.id/

பலெம்பாங் இந்தோனேசியாவிலுள்ள மிகப் பழைய நகரங்களுள் ஒன்றாக விளங்குவதுடன் தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய சிறீவிஜய இராச்சியத்தினதும், சக்திவாய்ந்த மலாய் இராச்சியத்தினது தலைநகராக விளங்கிய வரலாற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.[2][3]

பலெம்பாங்கின் முக்கிய இடங்களாகக் கருதப்படுபவை இந்நகரத்தை இரண்டாகப் பிரித்துள்ள முசுனி ஆறும் மற்றும் அம்பேரா பாலமும் ஆகும். பலெம்பாங்கிலுள்ள முசுனி ஆற்றின் வடக்கு ஆற்றங்கரை சேபேராங் இலீர் (Seberang Ilir) என்று அழைக்கப்படுகிறது, மற்றும் பலெம்பாங்கிலுள்ள முசுனி ஆற்றின் தெற்கு ஆற்றங்கரை சேபேராங் உலு (Seberang Ulu) என்றும் அழைக்கப்படுகிறது. சேபேராங் இலீரே பலெம்பாங்கின் பொருளாதார மற்றும் கலாசார மையமாக விளங்குகிறது, மற்றும் சேபேராங் உலுவே பலெம்பாங்கின் அரசியல் மையமாக விளங்குகிறது.

கல்வி

தொகு

பலெம்பாங்கிலுள்ள பல்கலைக்கழகங்கள்:

  • சிறீவிஜயம் பல்கலைக்கழகம் (University of Sriwijaya)
  • ஸ்டேட் பாலிடெக்னிக் ஆப் சிறீவிஜயம் பலெம்பாங் (State Polytechnic of Sriwijaya Palembang)
  • ஸ்டேட் ராடன் பட்டா பலெம்பாங் இசுலாமிய பல்கலைக்கழகம் (State Islamic University of Raden Fatah Palembang)
  • இந்தோனேசிய ஊடகவியல் பல்கலைக்கழகம் (School of Journalism Indonesia). இந்தோனேசியாவின் முதலாவது ஊடகவியல் பள்ளி இதுவாகும். SJI, சனாதிபதி சுசிலோ பாம்பாங் யுடொயோனோ (Susilo Bambang Yudhoyono) அவர்களால் பலெம்பாங்கில் 9 பெப்ரவரி 2010 தேசிய பத்திரிகை தினத்தன்று திறந்துவைக்கப்பட்டது. இந்தோனேசியாவிலுள்ள இவ்வூடகவியல் பள்ளியே யுனெசுக்கொ நிறுவனத்தின் ஆதரவுடன் சர்வதேச ரீதியாக அமைக்கப்பட்ட முதலாவது ஊடகவியல் பள்ளியாகும். இது தெற்கு சுமத்திரா மாகாணத்தில் அமைந்துள்ளது.
  • பினா தர்மா பல்கலைக்கழகம் (Universitas Bina Darma)
  • பினா நுசந்தரா பல்கலைக்கழகம் (Universitas Bina Nusantara) - சும்பெர் பெலாஜர் சாராக் ஜோ அலகு
  • இந்தோ குளோபல் மந்திரி பல்கலைக்கழகம் (Universitas Indo Global Mandiri)
  • முகம்மதியா பலெம்பாங் பல்கலைக்கழகம் (Universitas Muhammadiyah Palembang)
  • பலெம்பாங் பல்கலைக்கழகம் (Universitas Palembang)
  • சுஜாக்யகிரிடி பல்கலைக்கழகம் (Universitas Sjakhyakirti)
  • ஐபிஏ பல்கலைக்கழகம் (Universitas IBA)
  • தமன் சிஷ்வா பல்கலைக்கழகம் (Universitas Taman Siswa)
  • பிஜிஆர்ஐ பல்கலைக்கழகம் (Universitas PGRI)
  • கதர் பங்க்சா பல்கலைக்கழகம் (Universitas Kader Bangsa)
  • திரைதினாண்டி பல்கலைக்கழகம் (Universitas Tridinanti)
  • தேர்புகா பல்கலைக்கழகம் (Universitas Terbuka)
  • போலைட்க்னிக் அகமிகாசு பலெம்பாங் (Politeknik Akamigas Palembang)
  • மல்டி டேட்டா பலெம்பாங் (Multi Data Palembang)
  • முசுனி கரிடாசு பல்கலைக்கழகம் (Universitas Musi Charitas)

பலெம்பாங்கிலுள்ள சிறந்த சிரேஷ்ட உயர்நிலைப் பள்ளிகள்:

  • 1. எஸ்எம்ஏ நெகேரி 6 பலெம்பாங் (SMA Negeri 6 Palembang)
  • 2. எம்ஏ நெகேரி 3 பலெம்பாங் (MA Negeri 3 Palembang)
  • 3. எஸ்எம்ஏ சவேரியசு 1 பலெம்பாங் (SMA Xaverius 1 Palembang)
  • 4. எஸ்எம்ஏ நெகேரி 5 பலெம்பாங் (SMA Negeri 5 Palembang)
  • 5. எஸ்எம்ஏ நெகேரி சுமத்திரா செலதான் (SMA Negeri Sumatera Selatan)
  • 6. எஸ்எம்ஏ சவேரியசு 3 பலெம்பாங் (SMA Xaverius 3 Palembang)
  • 7. எஸ்எம்ஏ இக்னாடியசு குளோபல் பள்ளி பலெம்பாங் (SMA Ignatius Global School (IGS) Palembang)
  • 8. செகோலா குசுமா பாங்சா (Sekolah Kusuma Bangsa)
  • 9. எஸ்எம்ஏ நெகேரி 1 பலெம்பாங் (SMA Negeri 1 Palembang)
  • 10. எஸ்எம்ஏ நெகேரி 3 பலெம்பாங் (SMA Negeri 3 Palembang)
  • 11. எஸ்எம்ஏ நெகேரி 13 பலெம்பாங் (SMA Negeri 13 Palembang)
  • 12. எஸ்எம்ஏ பிலசு நெகேரி 17 பலெம்பாங் (SMA Plus Negeri 17 Palembang)

பலெம்பாங்கிலுள்ள சிறந்த கனிஷ்ட உயர்நிலைப் பள்ளிகள்:

  • எம்டிஎஸ் நகேரி 2 மாடல் பலெம்பாங் (MTS Negeri 2 Model Palembang)
  • எஸ்எம்பி சவேரியசு 1 பலெம்பாங் (SMP Xaverius 1 Palembang)
  • எஸ்எம்பி சவேரியசு மாரியா பலெம்பாங் (SMP Xaverius Maria Palembang)
  • எஸ்எம்பி இக்னாடியசு குளோபல் பள்ளி பலெம்பாங் (SMP Ignatius Global School (IGS) Palembang)
  • எஸ்எம்பி செகோலா பலெம்பாங் கரப்பான் பலெம்பாங்க் (SMP Sekolah Palembang Harapan (SPH ) Palembang)
  • எஸ்எம்பி குசுமா பாங்சா பலெம்பாங்க் (SMP Kusuma Bangsa Palembang)
  • எஸ்எம்பி நெகேரி 1 பலெம்பாங் (SMP Negeri 1 Palembang)
  • எஸ்எம்பி சவேரியசு 6 பலெம்பாங் (SMP Xaverius 6 Palembang)
  • எஸ்எம்பி நெகேரி 9 பலெம்பாங் (SMP Negeri 9 Palembang)
  • எஸ்எம்பி நெகேரி 4 பலெம்பாங் (SMP Negeri 4 Palembang)
  • எஸ்எம்பி நெகேரி 43 பலெம்பாங் (SMP Negeri 43 Palembang)
  • எஸ்எம்பி நெகேரி 3 பலெம்பாங் (SMP Negeri 3 Palembang)
  • எஸ்எம்பி நெகேரி 8 பலெம்பாங் (SMP Negeri 8 Palembang)
  • எஸ்எம்பி நெகேரி 34 பலெம்பாங் (SMP Negeri 34 Palembang)
  • எஸ்எம்பி நெகேரி 54 பலெம்பாங் (SMP Negeri 54 Palembang)
  • எம்டிஎஸ் நெகேரி 1 பலெம்பாங் (MTS Negeri 1 Palembang)

படக்கட்சியகம்

தொகு

சகோதரத்துவ நகரங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-11-21.
  2. Munoz. Early Kingdoms. p. 117.
  3. Peter Bellwood, James J. Fox, Darrell Tryon (1995). "The Austronesians: Historical and Comparative Perspectives".{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-03. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலெம்பாங்&oldid=3589605" இலிருந்து மீள்விக்கப்பட்டது