எசுகேசு வானூர்தி நிறுவனம்
எசுகேசு வானூர்தி நிறுவனம் அல்லது எஸ்கேஎஸ் ஏர்வேஸ் (ஆங்கிலம்: SKS Airways; மலாய்: SKS Airways (KI/SJB) என்பது மலேசியா, சிலாங்கூர், சுபாங், சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம்; ஜொகூர் பாரு, செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகிய இரு நிலையங்களில் அலுவலகங்களைக் கொண்டு இயங்கும் ஒரு வானூர்தி நிறுவனம் ஆகும்.
| |||||||
நிறுவல் | 13 நவம்பர் 2017[1] | ||||||
---|---|---|---|---|---|---|---|
மையங்கள் | சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் ஜொகூர் பாரு | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 2 | ||||||
சேரிடங்கள் | 5 | ||||||
தலைமையிடம் | சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் சுபாங், மலேசியா | ||||||
முக்கிய நபர்கள் | டத்தோ ரோமான் அகமது (இயக்குநர்)[2] | ||||||
வலைத்தளம் | www |
கிழக்கு மலேசியாவில் உள்ள தீவுகளுக்கான பயணிகள் சேவைத் துறையை முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது. அண்மைய காலங்களில் விமானச் சரக்குச் சேவைத் துறையிலும் படிப்படியாக வளர்ச்சி கண்டு வருகிறது.
பொது
தொகுநவம்பர் 2017-இல், எஸ்.கே.எஸ் வானூர்தி நிறுவனம் நிறுவப்பட்டது.
15 ஜூலை 2019-இல், அந்த வானூர்தி நிறுவனம் தனது முதல் DHC 6-300 டுவின் ஓட்டர் (DHC 6-300 Twin Otter) ரக வானூர்தியைப் பெற்றது.
அக்டோபர் 2021-இல், எஸ்.கே.எஸ் வானூர்தி நிறுவனத்தை இயக்குவதற்கான சான்றிதழ் பெறப்பட்டது.
25 ஜனவரி 2022-இல், சுபாங், சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையத்தில் இருந்து பங்கோர் தீவுக்கு தனது முதல் வணிக வானூர்திச் சேவையை அறிமுகப் படுத்தியது.
23 டிசம்பர் 2020-இல், தனது இரண்டாவது DHC 6-300 டுவின் ஓட்டர் (DHC 6-300 Twin Otter) ரக வானூர்தியைப் பெற்றது.
வானூர்திகள்
தொகு2021 அக்டோபர் நிலவரப்படி, எசுகேசு நிறுவனம் பின்வரும் வானூர்திகளைக் கொண்டிருந்தது :[3]
விமானம் | எண்ணிக்கை |
---|---|
டி அவிலாந்த் 6-300 (de Havilland Canada DHC-6 Twin Otter) | 2 |
9M-KIA (9M-KIA); 9M-KIB (9M-KIB) | 2 |
இலக்குகள்
தொகுபிப்ரவரி 2022 புள்ளிவிரங்கள்: எசுகேசு வானூர்தி நிறுவனம் பின்வரும் திட்டமிடப்பட்ட பயணிகள் சேவைகளைச் செய்தது:[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "SKS Airways Airline Profile | CAPA". centreforaviation.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-27.
- ↑ "Dr Wee launches SKS Airways – new kid on the aviation block offering flights to island getaways". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-27.
- ↑ "Global Airline Guide 2019 (Part One)". Airliner World October 2019: 20.
- ↑ "New commercial airline SKS Airways offers direct flights to Pulau Pangkor, Redang and Tioman". www.optionstheedge.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-27.
- ↑ "SKS Airways". SKS Airways. பார்க்கப்பட்ட நாள் 2022-02-27.