கோலா பேராங்

கோலா பேராங்; (ஆங்கிலம்: Kuala Berang; மலாய்: Kuala Berang) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், உலு திராங்கானு மாவட்டத்தின் (Hulu Terengganu District) தலைநகரம் ஆகும். திராங்கானு மாநிலத்தின் தலைநகரான கோலா திராங்கானு (Kuala Terengganu) மாநகரில் இருந்து 40 கி.மீ. கி.மீ. (25 மைல்) தொலைவில் உள்ளது.

கோலா பேராங்
Kuala Berang
 திராங்கானு
கென்யிர் ஏரிக்கு செல்லும் பாதையில் கோலா பேராங்
Map
ஆள்கூறுகள்: 5°04′N 103°01′E / 5.067°N 103.017°E / 5.067; 103.017
நாடு மலேசியா
மாநிலம் திராங்கானு
மாவட்டம் உலு திராங்கானு
தொகுதிகோலா பேராங்
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்18,764
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
21700
தொலைபேசி+6-09 681
போக்குவரத்து எண்T

இந்த நகரம் கென்யிர் ஏரியின் (Lake Kenyir) நுழைவாயிலாகச் செயல்படுகிறது. அத்துடன் 1899-ஆம் ஆண்டில் இந்த நகருக்கு அருகில்தான் வரலாற்றுப் புகழ் திராங்கானு கல்வெட்டு (Terengganu Inscription Stone) கண்டுபிடிக்கப்பட்டது.[1]

திராங்கானு சுல்தானகத்தின் தலைநகரமாக கோலா திராங்கானு அமைவதற்கு முன்னர்; கோலா பெராங் நகரம் தான் திராங்கானு மாநிலத்தின் முதல் தலைநகரமாக இருந்தது.[2]

பொது

தொகு

கோலா பேராங் ஒரு காலத்தில் திராங்கானுவில் மிக முக்கியப் பங்களிப்பாளராக இருந்தது. ஏனெனில், மாநிலத்தின் பெரும்பகுதியை இணைக்கும் ஆற்று அமைப்பு அங்கு இருந்தது. மூலம் ஆற்றுப் போக்குவரத்து குறையும் வரையிலும் ஒரே இடைத் தொடர்பு இடமாகவும் இருந்தது.[1]

இந்தப் பகுதிதான் திராங்கானுவின் ஆரம்பகால மனிதக் குடியிருப்பு பகுதி என்று நம்பப்படுகிறது. கென்யிர் ஏரியைச் சுற்றியுள்ள குகைகளில் ஆரம்பகால மனித உபயோகப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி கென்யிர் நீர்த் தேக்கத்தில் மூழ்குவதற்கு முன்பு, இப்பகுதியில் வாழ்ந்த ஆரம்பகால மனிதர்களின் தடயங்களை மீட்டு எடுத்து இருக்கிறார்கள்.

போக்குவரத்து

தொகு

கோலா பேராங் நகரம்,   மலேசிய கூட்டரசு சாலை 106 (Malaysia Federal Route 106) மூலம் அஜில்; கோலா திராங்கானு நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது; மற்றும்   மலேசிய கூட்டரசு சாலை 14 (Malaysia Federal Route 14);   மலேசிய கூட்டரசு சாலை 247 (Malaysia Federal Route 247) ஆகியவை இந்த நகரில் தொடங்கி கோலா செண்டரிசு நகரில் முடிவடைகிறது.

அங்கு அது   மலேசிய கூட்டரசு சாலை 185 (Malaysia Federal Route 185) என மாறுகிறது. பின்னர் அங்கு இருந்து கிளாந்தான், குவா மூசாங்; பகாங், கேமரன் மலை வழியாகச் செல்கிறது. இறுதியாக பேராக், ஈப்போ, சிம்பாங் பூலாய் பகுதியில் முடிவடைகிறது.

இருப்பினும் அஜில் நகரத்தில் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை (East Coast Expressway) ஒரு பரிமாற்ற சாலையாகவும் அமைகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Terengganu's famous Inscribed Stone (Batu Bersurat) was stumbled upon in 1887 at Padang Tara, a village on the bank of Sungai Tara in Kuala Berang". www.terengganutourism.com. பார்க்கப்பட்ட நாள் 2 July 2023.
  2. Dept. of Urban and Rural Planning, Terengganu State Government. Rancangan Struktur Negeri Terengganu 2005-2015

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலா_பேராங்&oldid=4034335" இலிருந்து மீள்விக்கப்பட்டது