பாப்பார் மாவட்டம்
பாப்பார் மாவட்டம்; (மலாய்: Daerah Papar; ஆங்கிலம்: Papar District) என்பது மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இந்தப் பாப்பார் மாவட்டத்தின் தலைநகரம் பாப்பார் நகரம் ஆகும்.[2]
பாப்பார் மாவட்டம் Papar District Daerah Papar | |
---|---|
ஆள்கூறுகள்: 5°20′44.84″N 115°44′40.43″E / 5.3457889°N 115.7445639°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | மேற்கு கரை |
தலைநகரம் | பாப்பார் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | ராபிக் அப்துல் சுபார் (Rafik Abdul Jubar) |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,248 km2 (482 sq mi) |
மக்கள்தொகை (2020[1]) | |
• மொத்தம் | 1,67,337 |
• அடர்த்தி | 130/km2 (350/sq mi) |
இணையதளம் | ww2 www |
சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள இதர மாவட்டங்களான கோத்தா பெலுட் மாவட்டம் (Kota Belud District); கோத்தா கினபாலு மாவட்டம் (Kota Kinabalu District), பெனாம்பாங் மாவட்டம் (Penampang District), புத்தாத்தான் மாவட்டம் (Putatan District); ரானாவ் மாவட்டம் (Ranau District); துவாரான் மாவட்டம் (Tuaran District) ஆகிய மாவட்டங்களுடன் ஒரு பகுதியாக இந்த பாப்பார் மாவட்டமும் அமைந்து உள்ளது.
பொது
தொகுபாப்பார் நகரம் கோத்தா கினபாலுவிற்கு தெற்கே 38 கி.மீ. தொலைவில் உள்ளது. அமைதியான நகரம். இந்த நகரத்தில் ஓர் இரயில் நிலையம் உள்ளது. சபா மாநில இரயில் சேவையின் (Sabah State Railway) முக்கிய நிறுத்தங்களில் ஒன்றாக அந்த நிலையம் விளங்குகிறது.
இந்தப் பாப்பார் நகரம், குரோக்கர் மலைத்தொடரை (Crocker Range) நோக்கி, தாழ்வான கடலோரப் பகுதிகளால் சூழப்பட்டு உள்ளது. இங்குள்ள தாழ்வு நிலப் பகுதிகள் நெல் சாகுபடிக்குப் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நெல் சாகுபடியில் பெரும்பாலும் பழங்குடி மக்களே ஈடுபட்டு உள்ளனர். [3]
வரலாறு
தொகு1877-ஆம் ஆண்டுகளில் சபாவில் உருவாக்கப்பட்ட நகரங்களில் பாப்பார் நகரமும் ஒன்றாகும். சபாவில் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாக வரலாறு படைக்கின்றது.
சபாவின் மேற்கு கரை பிரிவு, முதலில் புரூணை சுல்தானகத்தால் (Bruneian Sultanate) ஆளப்பட்டது. அதன் முதல் உள்ளூர் தலைவர் பஜாவ் (Bajau) வம்சாவளியைச் சேர்ந்த டத்து அமீர் பகார் (Datu Amir Bahar) என்பவர் ஆவார்.
1877-ஆம் ஆண்டில் புரூணை சுல்தானகத்தால் பரோன் வான் ஓவர்பெக் (Baron von Overbeck) மற்றும் டென்ட் சகோதரர்களிடம் (Dent Brothers) பாப்பார் நிலப்பகுதி ஒப்படைக்கப்பட்டது.
பாப்பாரில் பணியாற்றிய முதல் பித்தானிய அதிகாரி எச்.எல். லீசெசுடர் (H.L. Leicester) ஆவார். பிப்ரவரி 1878-இல் பாப்பார் பகுதியில் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் அவர் பதவியேற்றார். பாப்பாரின் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தவறியதால் அவருக்குப் பதிலாக ஆல்பிரட் ஆர்ட் எவரெட் (Alfred Hart Everett) என்பவர் நியமிக்கப்பட்டார்.
நவீன வளர்ச்சியின் தாக்கங்கள்
தொகுபாப்பார் மாவட்டத்தில் பல்வகையான பழத் தோட்டங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் சிறுபான்மை சீனர் இனத்தவருக்குச் சொந்தமானவை. பாப்பார் ஆறு கடலில் கலக்கும் தென் கரையில், சதுப்புநிலக் காட்டுப் பகுதியில் பாப்பார் நகரம் அமைந்து உள்ளது. நிப்பா எனும் உப்பு நீர் பனை மரக் காடுகளும் இங்கு நிறையவே உள்ளன.
கோத்தா கினபாலு நகரத்திற்கு அருகாமையில் இந்த நகரம் இருப்பதால், கோத்தா கினபாலுவின் நவீன வளர்ச்சித் தாக்கங்களும், இந்த நகரைப் பெரிதும் பாதித்து வருகின்றன. இந்த நகரம் அண்மைய ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனாலும் அதன் சில பழைய கட்டிடங்கள் மற்றும் வரலாற்றுத் தன்மைகள் இன்னும் பாதுகாக்கப் படுகின்றன.
2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மக்கள் தொகை 124,420 மக்கள். இங்கு வாழும் மக்கள் பெரிய சமூகங்களாகவும் சிறியச் சமூகங்களாகவும் பிரிக்கப்பட்டு உள்ளனர்.
பாப்பார் மாவட்டத்தில் சுற்றுலா ஒரு முக்கியமான தொழிலாகும். சுற்றுலா துறை விவசாயத் தொழிலுக்கு அடுத்து அதிக வருமானத்தைப் பெற்றுத் தருகிறது. பாப்பார் கடற்கரையில் பல ஓய்வு விடுதிகளைக் காணலாம்.
பாப்பார் மாவட்டத்தின் காலநிலை
தொகுபாப்பார் மாவட்டம் ஒரு வெப்பமண்டல மழைக்காட்டுக் காலநிலையைக் கொண்டது. அதனால் ஆண்டு முழுவதும் அதிகமாக மழை பெய்யும்.[4]
தட்பவெப்ப நிலைத் தகவல், பாப்பார் மாவட்டம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 29.9 (85.8) |
29.9 (85.8) |
30.6 (87.1) |
31.5 (88.7) |
31.7 (89.1) |
31.3 (88.3) |
31.1 (88) |
31.0 (87.8) |
30.7 (87.3) |
30.6 (87.1) |
30.4 (86.7) |
30.1 (86.2) |
30.73 (87.32) |
தினசரி சராசரி °C (°F) | 26.5 (79.7) |
26.5 (79.7) |
27.0 (80.6) |
27.8 (82) |
28.0 (82.4) |
27.6 (81.7) |
27.4 (81.3) |
27.3 (81.1) |
27.1 (80.8) |
27.1 (80.8) |
26.9 (80.4) |
26.7 (80.1) |
27.16 (80.89) |
தாழ் சராசரி °C (°F) | 23.1 (73.6) |
23.1 (73.6) |
23.5 (74.3) |
24.1 (75.4) |
24.3 (75.7) |
24.0 (75.2) |
23.7 (74.7) |
23.7 (74.7) |
23.6 (74.5) |
23.6 (74.5) |
23.5 (74.3) |
23.4 (74.1) |
23.63 (74.54) |
மழைப்பொழிவுmm (inches) | 162 (6.38) |
85 (3.35) |
103 (4.06) |
164 (6.46) |
281 (11.06) |
296 (11.65) |
288 (11.34) |
263 (10.35) |
326 (12.83) |
353 (13.9) |
315 (12.4) |
274 (10.79) |
2,910 (114.57) |
ஆதாரம்: Climate-Data.org[5] |
காட்சியகம்
தொகு-
பாப்பாரின் பழைய கடை
-
பாப்பார் இரயில் பாலம்.
-
பாப்பார் நகரில் பலசரக்குக் கடை.
-
பாப்பர் மாவட்டப் பள்ளிவாசல்.
-
செயின்ட் ஜோசப் தேவாலயம்.
-
குவாங் பூக் குங் கோயில்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sabah". www.mycensus.gov.my.
- ↑ "Papar is an agriculture town that is famous for it's agriculture products. Papar's weekly Open market or also known locally as 'Tamu'. Sabah State Railway train to travel from the Tanjung Aru station that is located in Kota Kinabalu to Papar town". Sabah, Malaysian Borneo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 January 2023.
- ↑ "Papar". Borneo Trade. Archived from the original on 5 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 November 2017.
- ↑ "Papar climate: Average Temperature, weather by month, Papar water temperature - Climate-Data.org". en.climate-data.org. பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
- ↑ "Climate: Papar". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
மேலும் படிக்க
தொகு- Treacher, W. H (1891). "British Borneo: sketches of Brunai, Sarawak, Labuan, and North Borneo". University of California Libraries. Singapore, Govt. print. dept. p. 190.
- Rutter, Owen (1922). "British North Borneo - An Account of its History, Resources and Native Tribes". Cornell University Library. Constable & Company Ltd, London. p. 157.
- Tregonning, K. G. (1965). A History Of Modern Sabah (North Borneo 1881–1963). University of Malaya Press.
மேலும் காண்க
தொகுபுற இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Papar District தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Papar District Council
- Papar District Office பரணிடப்பட்டது 2020-07-10 at the வந்தவழி இயந்திரம்