பாவு, சரவாக்

சரவாக் மாநிலத்தில் உள்ள ஒரு நகர்ப் பகுதி

பாவு (மலாய் மொழி: Pekan Bau; ஆங்கிலம்: Bau Town) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் கூச்சிங் பிரிவு; பாவு மாவட்டத்தில் உள்ளது ஒரு நகர்ப் பகுதியாகும்.

பாவு
Bau
நகரம்
பாவு is located in மலேசியா
பாவு
பாவு
      பாவு       மலேசியா
ஆள்கூறுகள்: 1°25′0″N 110°0′9″E / 1.41667°N 110.00250°E / 1.41667; 110.00250
நாடு Malaysia
மாநிலம் சரவாக்
பிரிவுகூச்சிங்
மாவட்டம்பாவு
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்62,200
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு93250
மலேசியத் தொலைபேசி எண்கள்6082

1840-களில் பாவ் நிலப் பகுதியில் தங்கம் இருப்பது சீனச் சுரங்கத் தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. சுரங்கத் தொழில்கள் படிப்படியாக போர்னியோ நிறுவனத்தால் (The Borneo Company) கையகப் படுத்தப்பட்டன. 1921-இல் சுரங்கங்கள் மூடப்பட்டன.[1]

1970-களின் பிற்பகுதியில் உலக தங்கத்தின் விலை உயர்ந்த போது சுரங்கங்கள் மீண்டும் திறக்கப் பட்டன. ஆனால் ஆசிய நிதி நெருக்கடி தொடங்கியபோது 1996-இல் மீண்டும் மூடப்பட்டன.[2] 2014-ஆம் ஆண்டு நிலவரப்படி, சுரங்க உரிமைகள் நார்த் போர்னியோ கோல்ட் நிறுவனத்திடம் (North Borneo Gold) இருந்தது.[3]

வரலாறு தொகு

1 மே 1837-இல், செக்ராங் இபான்கள் (Skrang Ibans); பிரதாக் மலை (Bratak Peak) சிகரத்தின் உச்சியில் இருந்த சகோய் - பிரதாக் பிடாயூ (Jagoi-Bratak Bidayuh) குடியேற்றப் பகுதியில் வாழ்ந்த பிடாயூ மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். 2,000 சகோய் - பிரதாக் பிடாயூ ஆண்களைக் கொன்றார்கள். 1,000 பெண்களைச் சிறைபிடித்தார்கள்.

சகோய் - பிரதாக் பிடாயூ சமூகத்தின் தலைவரான பாங்லிமா குலோவ் மற்றும் அவரின் சீடர்கள் சிலர் படுகொலையில் இருந்து தப்பினர்.

ஜாகோய் - பிரதாக் தினம் தொகு

1841-ஆம் ஆண்டில் சரவாக்கின் புதிய வெள்ளை ராஜா ஜேம்ஸ் புரூக், சிறைபிடிக்கப்பட்ட சில பெண்களை மீட்டு எடுத்தார்.

ஒவ்வோர் ஆண்டும் மே 1-ஆம் தேதி, 1837 படுகொலையில் தப்பிப் பிழைத்தவர்களின் சந்ததியினர் தங்கள் முன்னோர்களின் நினைவாக பாவ் பகுதியில் உள்ள பிரதாக் சிகரத்தின் உச்சியில் ஜாகோய் - பிரதாக் தினத்தை (Jagoi-Bratak Day) கொண்டாடுகிறார்கள். அந்த நாளைக் குறிக்கும் வகையில், 1988 மே 1-ஆம் தேதி ஒரு நினைவுக் கல் அமைக்கப்பட்டது.[4][5]

மேற்கோள்கள் தொகு

  1. "Zedex Minerals Ltd (ASX:ZDX) Bau Global JORC Resource Now 1.612 M oz Au". ABN Newswire. 5 November 2008 இம் மூலத்தில் இருந்து 28 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170528183157/http://www.abnnewswire.net/press/en/59000/. 
  2. Chew, Daniel (1990) Chinese Pioneers on the Sarawak Frontier 1841-1941 Oxford University Press, Singapore, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-588915-0
  3. Kaur, Amarjit (February 1995) "The Babbling Brookes: Economic Change in Sarawak 1841-1941" Modern Asian Studies 29(1): pp. 65-109, p.73
  4. "Descendants mark Jagoi-Bratak Day." New Straits Times 10 May 2000;
  5. "The Jagoi-Bratak group first settled at Bung Bratak when they migrated out some 750 years ago from Mount Sungkong in West Kalimantan, Indonesia. Then sometimes in early 1840s, they moved from Bung Bratak to surrounding areas form 34 different villages. Bung Jagoi was the first Bidayuh village within Jagoi area". Visit Sarawak 2022 #BounceBackBetter.[தொடர்பிழந்த இணைப்பு]

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவு,_சரவாக்&oldid=3628806" இலிருந்து மீள்விக்கப்பட்டது