சண்டாக்கான்

சண்டாக்கான் என்பது கிழக்கு மலேசியாவில் சபா மாநிலத்தில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய நகராகும். இது வடகிழக்கு போர்னியோ கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இந்நகரம் தீவின் கிழக்கு கடற்கரையுடன் அமைந்துள்ளதுடன், சண்டாக்கான் பிரிவின் நிர்வாக மையமாகவும் உள்ளது. இந்நகரம் முன்பு பிரித்தானிய வடக்கு போர்னியோவின் தலைநகராக இருந்தது. சண்டாக்கான் சபாவின் சூழலியல் சுற்றுலாவின் முக்கிய நுழைவாயிலாக உள்ளது. இங்குள்ள ஓராங் ஊத்தான் மறுவாழ்வு மையம், மழைக்காடு டிஸ்கவரி மையம், ஆமை தீவுப் பூங்கா, கினபத்தாஙான் ஆறு மற்றும் கோமன்தாங் குகைகள் குறிப்பிடத்தக்கவை.

சண்டாக்கான்
山打根
Elopura
Skyline of சண்டாக்கான்
அடைபெயர்(கள்): இயற்கை நகரம், சின்ன ஆங்காங்
Location in சபா and மலேசியா
Location in சபா and மலேசியா
Countryமலேசியா
மாநிலம்சபா
நிறுவப்பட்டது1879
அரசு
 • கவுன்சில் தலைவர்Ir. ஜேம்சு வாங்
பரப்பளவு
 • மொத்தம்[.
மக்கள்தொகை (2009)
 • மொத்தம்479
 • அடர்த்தி210
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)Not observed (ஒசநே)
அஞ்சல் எண்90000 to 90999
தொலைபேசி குறியீடு089
இணையதளம்http://www.mps.sabah.gov.my/

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் பயன்படுத்திய விமானத்தளம் தற்போது சண்டாக்கான் விமான நிலையமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானத் தளம் 6000 கட்டாய தொழிலாளர்கள், சாவகக் குடியானவர்கள் மற்றும் கூட்டணி நாடுகளின் போர்க்கைதிகளைக் கொண்டு கட்டப்பட்டது. விமானத்தள கட்டுமானத்தில் மிஞ்சிய ஆஸ்திரேலிய கைதிகள் 1945இல், சண்டாக்கான் மரண அணிவகுப்புக்கு அனுப்பப்பட்டனர் அதில் 6 பேர் மட்டுமே உயிர் தப்பிப் பிழைத்தனர்.

காலநிலைதொகு

சண்டாக்கான் வெப்பமண்டல மழைக்காட்டு தட்ப வெப்பத்தைக் கொண்டுள்ளதாக கோப்பன் காலநிலை வகைப்பாடு தெரிவிக்கிறது. இந்த நகரம் ஆண்டு முழுவதும் மழை பொழியும் இடமாக உள்ளது. அதிகபட்ச மழைப்பொழிவு நவம்பரிலிருந்து ஜனவரி வரை. அதிகபட்ச வெயில் 31 பாகை செல்சியசாகவும் குறைந்தபட்ச அளவு 24 பாகையாகவும் உள்ளது. சண்டாக்கானில் வருடத்திற்கு சராசரியாக 3100மி.மீ. அளவு மழை பொழிகிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், சண்டாக்கான்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 28.9
(84)
28.9
(84)
30
(86)
31.1
(88)
31.7
(89)
31.7
(89)
31.7
(89)
31.7
(89)
31.1
(88)
31.1
(88)
30
(86)
29.4
(85)
30.6
(87)
தாழ் சராசரி °C (°F) 24.4
(76)
24.4
(76)
24.4
(76)
24.4
(76)
24.4
(76)
24.4
(76)
23.9
(75)
23.9
(75)
23.9
(75)
23.9
(75)
24.4
(76)
24.4
(76)
24.4
(76)
பொழிவு mm (inches) 410
(16.14)
250
(9.84)
200
(7.87)
110
(4.33)
150
(5.91)
190
(7.48)
180
(7.09)
200
(7.87)
240
(9.45)
260
(10.24)
350
(13.78)
450
(17.72)
3,060
(120.47)
ஆதாரம்: http://www.weatherbase.com/weather/weather.php3?s=19469&refer=&units=metric


ஒளிப்பட வரிசைதொகு

மேற்கோள்கள்தொகு


வெளியிணைப்புகள்தொகு


ஆள்கூறுகள்: 5°50′N 118°07′E / 5.833°N 118.117°E / 5.833; 118.117

"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டாக்கான்&oldid=2938324" இருந்து மீள்விக்கப்பட்டது