நாபாவான்

மலேசியா, சபா, நாபாவான் மாவட்டத்தின் தலைநகரம்

நாபாவான் என்பது (மலாய்: Pekan Nabawan; ஆங்கிலம்: Nabawan Town) மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவு, நாபாவான் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.

நாபாவான் நகரம்
Nabawan Town
சபா
மேலிருந்து, இடமிருந்து வலமாக:
நாபாவான் உயர்நிலைப்பள்ளி 2; நாபாவான் நகரம்; நாபாவான் நகரம் 2
Location of நாபாவான் நகரம்
ஆள்கூறுகள்: 5°5′N 116°27′E / 5.083°N 116.450°E / 5.083; 116.450
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுஉட்பகுதி பிரிவு
மாவட்டம்நாபாவான் மாவட்டம்
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்31,807
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை

பெரும்பான்மையோர் பழங்குடி மூருட் மக்கள்; சிறுபான்மையோர் லுன் பாவாங் (Lun Bawang); லுன் டாயே (Lun Dayeh) பழங்குடி இனத்தவர்கள்.

பொது

தொகு

நாபாவான் மாவட்டம் 6.089 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இந்த மாவட்டம் சபாவின் தெற்குப் பகுதியில் அமைந்து உள்ளது.

இதன் வடக்கில் கெனிங்காவ் மாவட்டம்; வடகிழக்கில் தொங்கோட் மாவட்டம்; கிழக்கில் தாவாவ் மாவட்டம், மேற்கில் தெனோம் மாவட்டம் மற்றும் இந்தோனேசியாவின் வடக்கு கலிமந்தான் மாநிலம் உள்ளன.

நாபாவான் மாவட்டம்

தொகு

நாபாவான் மாவட்டம் 1920-ஆம் ஆண்டில் ஒரு சிறிய மாவட்டமாகத் தொடங்கியது. பணிபுரிந்த முதல் உதவி மாவட்ட அலுவலர் திரு. ஐ.சி பெக் (I.C Peck).[1]

இங்கு பழைமையான கற்பாறைக் குன்று உள்ளது. அதன் பெயர் பத்து புங்குல் (Batu Punggul). பழங்காலத்தில், மூருட் பழங்குடி மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 120 மீட்டர் உயரம்; 68 மீட்டர் அகலம் கொண்டது.

பத்து புங்குல்

தொகு

இந்தக் குன்று செபுலுட் ஆற்றுப் பகுதியின் நடுவில் அமைந்து உள்ளது. அதைச் சுற்றிலும் பல குகைகள் உள்ளன.

நாபாவான் பகுதி வெப்ப மண்டலக் காடுகளுக்குப் பெயர் பெற்ற இடமாகும். அண்மைய காலங்களில் அதிகமான அளவில் காட்டு மரங்கள் வெட்டப் படுகின்றன.[2]

காட்சியகம்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. "Nabawan District as one of the districts in the Interior began under the status of a Small District Office in 1920". www.sabah.gov.my. பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
  2. "In 2010, Nabawan had 575kha of natural forest, extending over 98% of its land area. In 2020, it lost 3.81kha of natural forest". www.globalforestwatch.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாபாவான்&oldid=3639686" இலிருந்து மீள்விக்கப்பட்டது